குருப் – திரை விமர்சனம் !

இயக்கம்ஶ்ரீநாத் ராஜேந்திரன்

திரைக்கதை மற்றும் வசனம்  டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த்

நடிகர்கள்துல்கர் சக்மான் டொவினோ தாமஸ், ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம்சாக்கோ.

கதை    1970 – 80 களில் கேரளாவில் மிகப்பெரிதாக பேசப்பட்ட இன்சூரன்ஸ் பணத்திற்காக நிகழ்த்தப்பட்டகொலை பின்னணியில் இருந்த குரூப் கதை தான் படம்

இந்தியாவின் க்ரைம் சரித்திரத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவன். இந்தியா முழுக்க 35 வருடங்கள்தேடியும் கிடைக்காத குற்றாவாளி குருப். அவன் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்பது தான் படமாகவந்திருக்கிறது.

கேரளாவில் இந்த கேஸ் பெரும் பிரபலம் என்பதால் அங்கிருப்பவர்களால் இப்படத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம் ஆனால் மற்ற மொழிகளில் ஒரு தடுமாற்றம் உருவாவதை தடுக்க முடியாது

1984 ஆம் வருடத்தில் ஒரு கார் ஆக்ஸிடெண்டில் தீப்பிடித்து எரிந்து ஒரு பிணம் சிக்க அதை போலீஸ்விசாரிக்கையில் இறந்தவன் குருப் என தெரிய வருகிறது. அவனை சொந்தக்காரனே பகையில் கொன்றதாகவாக்குமூலம் தருகிறான். ஆனால் போலீஸுக்கு ஏதோ பொறி தட்ட அந்த கேஸை மேலும் விசாரிக்கிறார். அப்போது தான் அதே நேரத்தில் பக்கத்து கிராமத்தில் ஒரு இளைஞன் காணாமல் போனது தெரிகிறது. அப்புறம்தான் குருப் பெயரில் அவன் கொல்லப்பட்டது தெரிகிறது. இது இன்ஷுரன்ஸ் பணத்திற்காக நிகழ்ந்த கொலைஎன முடிவுக்கு வர, அதையும் தாண்டி குருப் இந்தியளவில் செய்த க்ரைம்கள் வெளிவருகிறது. அவனை போலீஸ்இந்தியா முழுக்க தேட ஆரம்பிக்கிறது.

இப்படம் இரண்டு பகுதிகளாக சொல்லப்பசுகிறது முதல் பகுதி மற்றவர்களின் பார்வையில் குருப் யார், அவன்என்ன செய்தான்,  குற்றத்தின் பின்னணியில் அவர்கள் மட்டும் அறிந்தது, போலீஸ் குரூப்பை தேடுவதுசொல்லப்படுகிறது.

இரண்டாம் பாதி குரூப் பார்வையில், அவன் யார் அவன் செய்த குற்றங்கள்  சொல்லப்படுகிறது. உண்மையில்இரண்டாம் பாதி தான் மிக பரபரப்பாக செல்கிறது. முதல் பாதியில் திரைக்கதை எதை என்ன  சொல்லவருகிறது என்பதே புரியாமல் இருக்கிறது. இது மற்ற மொழிகளில் படம் பார்ப்பவர்களை சோதிக்கிறது.

குரூப்பாக துல்கர் வாழ்நாளில் எப்போதவது கிடைக்கும் அரிய வாய்ப்பு, அந்த கதாப்பார்திரத்திற்குள் அழகாகஒட்டிக்கொள்கிறார். படத்தின் முழுக்கதையும் அவர் மீது தான் பயணிக்கிறது. ஆனால் அவரிடம் ரொமான்ஸ்வரும் அளவுக்கு வில்லத்தனம் வரவில்லை. ஷோபிதா துலிபலா சிறுசிறு பார்வையிலேயே ஈர்க்கிறார் ஆனால்அவர் வரும் பகுதி மிக குறைவு. அவருக்கு என்னவானது என சொல்லாமலே விட்டது சோகம். டோவினோதாமஸ், பரத் எல்லாம் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்கள். படத்தில் துல்கர் தவிர்த்து அதிகம் ஈர்ப்பவர்இந்திரஜித் தான்.  போலீஸாக மிரட்டியிருக்கிறார். ஆக்ஸிடெண்டை விசாரிப்பது, அதன் பின்னணியைதேடுவது என படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறார்.

படத்தின் மிக முக்கியமான பலம் அதன் மேக்கிங் தான். உலகத்தரமான திரைப்படத்தை பார்க்கும்அனுபவத்தை திரையில் தந்திருக்கிறார்கள். 70,80 களின் கேரளா, சென்னை மும்பை என எல்லாஇடங்களையும் திரையில் மீண்டும் உருவாக்கி பிரமிப்பை தந்திருக்கிறார்கள். கலை இயக்குநர் பங்லன்அட்டாகசமான பணியினை செய்துள்ளார். ஒளிப்பதிவு அந்த கால கட்டத்திற்குள் நுழைந்த உணர்வைதருகிறது. இருளுக்குள் பயணிக்கும் இடைவேளை காட்சிகளிலெல்லாம் ஒளிப்பதிவு தரம். சுஷின் ஸ்யாம் இசைபாடல்களில் கவரவில்லை ஆனால் பின்னணி இசை அற்புதம்.

இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன்  படத்தின் டீடெயிலுக்காக கடுமையாக  உழைத்திருப்பது திரையில்தெரிகிறது. பிரமாண்டமான உருவாக்கமும் திரைக்கதையும் கவர்கிறது. ஆனால் படத்தின் முதல் பாதிபடத்திற்கு பெரும் சோதனையாக அமைந்திருக்கிறது. படம் எந்த பாதையில் பயணிக்கிறது என்பதேதெரியாதது படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. படத்தில் பல பாத்திரங்களுக்கு முடிவில்லாமல் இருப்தும்ஒரு முழுமையை தரவில்லை.

குருப் உண்மை சம்பவத்தில் பிண்ணப்பட்ட அழகான திரில்லர் ஆனால் அதை அறிந்தவர்களுக்கு மட்டும்.