தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் !!

தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் !!

  நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்‌ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் வெளியிட்டிருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜிகேஎம் தமிழ் குமரன் கூறும்போது, “நல்ல கதைகளை எங்களின் தயாரிப்பு நிறுவனம் எப்பொழுதும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் புதிதாகவும் இருந்தது. குறிப்பாக, அந்தக் கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். 'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும். தனது திறமையான நடிப்பால் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.…
Read More
பிருத்விராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன் !

பிருத்விராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன் !

  லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் இயக்குநரான பிருத்விராஜ் சுகுமாறனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதால் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த அவரை வெளிநாட்டில் இருக்கும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை…
Read More
திருவின் குரல் ஒலித்ததா?

திருவின் குரல் ஒலித்ததா?

திருவின் குரல் விமர்சனம் ! இயக்குநர் - ஹரிஸ் பிரபு நடிகர்கள் - அருள்நிதி , பாரதிராஜா , ஆத்மிகா ஒளிப்பதிவு - சின்டோ பொடுதாஸ் இசை - சாம் சி எஸ் தயாரிப்பு - லைகா சுபாஸ்கரன் இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் பாரதிராஜா, அருள்நிதி நடித்துள்ள படம் தான் “திருவின் குரல். கோபக்கார இளைஞன் அவன் குடும்பத்திற்கு ரௌடிகளால் வரும் பிரச்சனை அதை முறியடித்து அவன் ஜெயிக்கும் ஆதி காலத்து கதை. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்திருக்கிறார். அதோடு ராபர்ட், மோனிகா சிவா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்து லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு அழகான குடும்பம் திடீரென நடக்கும் ஒரு விபத்து, அரசு மருத்துவமனையில் அருள் நிதிக்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாரதிராஜாவுக்கு போலியான மருந்து போடப்படுகிறது. அதே போல அந்த மருத்துவமனையில் நடக்கும் சில கொலைகளை அவரது குடும்பத்தில் இருக்கும்…
Read More
நாய் சேகர் ரிட்டன்ஸ் எப்படி இருக்கு!

நாய் சேகர் ரிட்டன்ஸ் எப்படி இருக்கு!

நாய் சேகர் கேரக்டரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலுவிற்கு இந்த படம் சிறப்பானதாக அமைந்ததா என்று பார்க்கலாம். நாய் கடத்தல்காரன் என்ற கதாபத்திரத்தில், தனது கேங்க் ஓடு வரும் வடிவேலுவின் அதகளத்தை எதிர்பார்த்து உட்கார்ந்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால், ஆனந்தராஜின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. மேலும் வடிவேல், ஆனந்த்ராஜ் இருவரின் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தவிர படத்தில் ஈர்க்கும் படி எதுவும் இல்லை. இப்படத்தில் ஷிவானி நாராயணன் வில்லன் மேக்ஸின் சகோதரியாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் தான் வருகிறார். ஷிவானியின் நடிப்பு பாராட்டுக்குரியது. படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் இயக்குனர் கதைக்களத்தில் தொலைந்துவிட்டார். பின்னணி இசை படத்துக்குக் கைகொடுக்கிறது. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கின்றன. ஆனால், படம் தான் வடிவேலு நினைத்தபடி ஆடியன்ஸ் மனதில் ஒன்றவில்லை. படத்தில் ஒரு சில நகைச்சுவை…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுத்த லைகா சுபாஸ்கரன்.

செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில்விக்கிரசிங்கேவைச் சந்தித்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். அந்தச் சந்திப்பு பல்லாண்டுகளாச் சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது. ஆம், அந்தச் சந்திப்பில் லைகா நிறுவனர் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார் ரணில். அதனால் தொடக்கத்தில் 8 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகினார்கள். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் மேலும் 9 அரசியல் கைதிகள் விடுதலையாகியுள்ளார்கள். இவர்களில், முதலில் விடுதலையான 8 தமிழ் அரசியல் கைதிகள், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணிய சுபாஸ்கரன், அவர்களுக்குத் தலா ரூ 25 இலட்சத்தை வழங்கினார். நவம்பர் 3 ஆம் தேதி வியாழன் அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் வைத்து, 8 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 இலட்சம் வழங்கினார் சுபாஸ்கரன். அதன்பின் இனி விடுதலையாகும்…
Read More
என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி – மணிரத்னம்

என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி – மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், திருமதி பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து, கைவிட்டார்கள். அதனை கையில் எடுத்து இந்த படத்தை…
Read More
பொன்னியின் செல்வன் : விமர்சனம்

பொன்னியின் செல்வன் : விமர்சனம்

பொன்னியின் செல்வன் : விமர்சனம் இயக்கம் - மணிரத்னம் நடிகர்கள் - விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஷ்வர்யா ராய், திரிஷா பொன்னியின் செல்வன் நாவல் தமிழர்களின் வரலாற்றிலும் வாழ்விலும் இரண்டறக் கலந்த ஒரு புதினம். பலர் படமாக்க நினைத்து கைவிடப்பட்ட நிலையில் பெரிய நடிகர் பட்டாளத்துடன் நினைத்து பார்க்க முடியாத பிரமாண்டத்தில் அதை கண்முன் கொண்டு வர முயன்றிருக்கிறார் மணிரத்னம் புத்தகம் படித்தர்வர்களின் முழு கற்பனையை நெருங்கா விட்டாலும் இப்படம் தமிழின் மிக முக்கிய படமாக ஒரு அற்புத திரை அனுபவமாக மிளிர்கிறது. நாவல்ல இருக்க கதாபாத்திரங்ளுக்கு கச்சிதமான நடிகர்கள் ஆதித்த கரிகாலனா விக்ரம் மிரட்டியிருக்கிறார் அவரின் ஓபனிங் போர்க்காட்சி புத்தகத்தில் பெரிதாக இல்லையென்றாலும் அதை பிரமாண்டமாக காட்டி தன் பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் மணிரத்னம் இடைவேளை காட்சியில் விக்ரம் நடிப்பு பட்டாசு. வல்லவரையன் சேட்டை பிடித்தவனாக குறும்புக்காரனாக நாயகனாக கார்த்தி இனிமேல் எல்லார் மனதிலும் இருப்பார். ஆழ்வார்க்கடியான், பூங்குழலி,…
Read More
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்

  நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு…
Read More
லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு

லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு

    ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது. 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்று கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா..? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜ ராஜ சோழன் பற்றிய வரலாற்றை உரிய கல்வெட்டு ஆதாரங்களுடன் 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலாக படைத்திருக்கிறார். இந்நிலையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரித்து, அதனை சர்வதேச அளவிலான தமிழர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அலாதியான பெருவிருப்பம் கொண்டு தயாரிப்பாளர் சுபாஷ்கரன் லைகா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் நோக்கத்தை துல்லியமாக அவதானித்த தமிழ்…
Read More