டாக்டர் ஆபரேஷன் சக்ஸஸ்!

 

இயக்கம் – நெல்சன்

நடிப்பு – சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, டோனி,


கதை – வாழ்க்கையில் பிராக்டிகலாக ஃபர்ஃபெக்டாக இருக்கும் ராணுவ டாக்டரை அவருக்கு பார்த்த பெண் பிடிக்கவில்லை என நிராக்கரித்து விடுகிறார். அந்தப்பெண் வீட்டில் ஒரு பெண் குழந்தை கடத்தப்பட, அந்த குழந்தையை கண்டுபிடிக்க அந்த குடும்பத்துடன் இணைந்து நம்பமுடியாத ஆக்சன் ஆபரேஷன் நடத்துகிறார் டாகடர்.

வெகு நாட்கள் கழித்து தியேட்டரில் ரசிகர்கள் விசில் சத்தம் பறக்க, என்ஞாய் செய்து பார்க்கும் படமாக வந்திருக்கிறது டாக்டர். டார்க் காமெடியில், க்ரைமை சரிவிகிதத்தில் கலந்து, படத்தின் திரக்கதையில் ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யப்படுத்துகிறார் நெல்சன். தன் முதல் படத்தில் அங்கங்கே தடுமாறியவர், இந்தப்படத்தில் நிதானமாக சிக்ஸர் விளாசியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதை அமைத்த விதமும், நம்ப முடியாததாக இருந்தாலும் ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. படத்தின் காட்சிகளில் நம்மையும் ஒன்ற வைத்து விடும் மேஜிக் அவரிடம் இருக்கிறது. படம் முழுக்கவே புதுப்புது ஐடியாக்கள் வந்து நம்மை ஈர்க்கிறது. வசனங்கள் ஒவ்வொன்றும் தியேட்டரை வெடித்து சிரிக்க வைக்கிறது.

சிவகார்த்திகேயன் ஆச்சர்யம். எதற்கெடுத்தாலும் காமெடி பஞ்ச் அடித்து கொண்டிருந்தவரை இந்தப்படத்தில் மிஸ்டர் பெர்ஃபக்ட். பேசவே விடவில்லை என்றாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அனேகமாக சூரி, சதீஷ் இல்லாமல் அவர் வெற்றியடைந்த முதல் படம் இது தான். கச்சிதமான டாக்டர் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி கோண்டு சபாஷ் வாங்கியிருக்கிறார். ப்ரியங்கா அருள் மோகன் தமிழுக்கு புது வரவு. அழகு அழகு பதுமை ஆரம்ப காட்சிகளில் கவரும் அவர் அதன் பிறகு அமைதியாகிவிடுகிறார். அதன் பிறகு அவருக்கு கதையில் அத்தனை கணம் இல்லை. ஆனால் வளவளவென நட்சத்திரங்கள் குமிந்திருந்தாலும் எல்லோரும் ஒரு காட்சியிலாவது ஈர்த்து விடுகிறார்கள்.

யோகிபாபு, டோனி இருவரும் படத்தின் பெரிய பலம். சிவகார்த்திகேயன் செய்யாத காமெடி அனைத்தையும் இவர்கள் செய்து ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார்கள். அதிலும் யோகிபாபு வில்லன் ஆட்களும் விளையாடும் காட்சி சரவெடி, டோனி பேசும் ஒவ்வொரு பஞ்சுக்கும் தியேட்டர் அதிர்கிறது. வினய் தான் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிரூபிக்கிறார். அவரது பார்வையே வில்லத்தனம் செய்கிறது. குழந்தையை பரிமாற வைக்கும் காட்யில் அவரது கண்கள் அத்தனை பேசுகிறது. அர்ச்சனா ஒரு நடுத்தர குடும்பத்து அம்மாவை கச்சிதமாக் பிரதிபலித்துள்ளார்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது பின்னணி இசை, படம் முழுக்க நம்மையும் கதையோடு இழுத்து செல்வதில் அனிருத் இசை அசத்தல். ஒளிப்பதிவு அபாரம். ஒரு க்ரைம் படம் என்பதை மறைத்து ஒரு கமர்ஷியல் கொண்டாட்டத்தை கண் முன் கொண்டு வந்துள்ளது விஜய் கார்த்திக் கேமரா.

இடைவேளை வரை கலகலவென செல்லும் கதை இரண்டாம் பாதியில் கொஞ்டம் தடுமாறுகிறது. க்ளைமாக்ஸ் காதில் பூ சுற்றல் ஆனாலும் காட்சிகளிலும் வசனங்களிலும் கவர்கிறார்கள். பார்வையாளன் கேட்க வேண்டிய லாஜிக்கை எல்லாம் அவர்களே படத்தில் கேட்டு பேசிக்கொள்வது அசத்தல். ரசிகர்கள் ரசித்து சிரிக்க ஒரு நல்ல பொழுதுபோக்கு சினிமா