இயக்கம் – ஐ அஹமத்
நடிகர் – ஜெயம் ரவி, நயன் தாரா
இசை – யுவன் சங்கர் ராஜா
சைக்கோ கில்லர் படங்கள் அதிகம் இங்கே வருவதில்லை, அதற்கான தேவையோ, அல்லது அப்படியான சூழ்நிலையோ இங்கு இல்லை. ஆனாலும் இங்கே மிகச்சிறந்த சைக்கோ கில்லர் படங்கள் வந்திருக்கின்றன. சமீபத்திய போர்தொழில் நல்ல உதாரணம். அந்த வகையில் இறைவனும் வந்திருக்க வேண்டும்.. ஆனால்..
பொதுவாக சைக்கோ கில்லர் படங்களில் வரிசையாக கொலை நடக்கும், அதிலுள்ள பேட்டர்னை துழாவி போலீஸ் அதைக் கண்டுபிடிக்கும். ஆனால் இந்தப்படம் முதலிலிருந்தே அந்த வகையில் கொஞ்சம் கூட வரவில்லை.
கதை எளிதுதான் யாருக்கும் தலை வணங்காத போலீஸ் அதிகாரி, அவனை டார்கெட் செய்யும் ஒரு சைக்கோ கொலையாளி இருவரில் யார் வெல்வார்?
ஜெயம் ரவி போலீஸ் அதிகாரி தன் நண்பன் இறப்புக்குப்பின் அவன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேலையை விடுகிறான். அவன் பிடித்த கொலையாளி சிறையிலிருந்து தப்பி விடுகிறான். ஜெயம் ரவியை டார்கெட் செய்யும் கொலையாளி, அவனை பிடிக்க நினைக்கும் ஜெயம்ரவி யார் ஜெயித்தார் என்பதே படம்.
ஒரு நல்ல திரில்லருக்கான அத்தனை அம்சங்களும் படத்தில் இருந்தது ஆனால் அது அத்தனையும் கானல் நீராகி படம் முடிந்தால் போதுமென்றாகிவிட்டது.
சைக்கோ கில்லர் படங்களில் டீடெயிலிங் ரொம்ப முக்கியம் அது இந்தப்படத்தில் மிஸ்ஸிங்.
சைக்கோ ஏன் கொல்கிறான், அவனது மோட்டிவ், போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது இது எதுவுமே படத்தில் தெளிவாக சொல்லப்படவில்லை. படம் முழுக்க ஹீரோவின் பார்வையில் நகர்கிறது. ஆனால் அவருக்கு தெரிவது ஆடியன்ஸ்க்கு தெரியவில்லை.
படத்தின் மிகப்பெரிய குறை, படத்தில் நடக்கும் சம்பவங்களின் தொடர்ச்சி ரசிகனுக்கு சொல்லப்படவே இல்லை. இது படத்தின் மீதான் சுவாரஸ்யத்தை குறைத்து விடுகிறது.
இரண்டாம் பாதி கொடூரம் படம் முடிய வேண்டிய இடத்தை விட்டு இழுத்துக்கொண்டே செல்கிறது. ஜெயம் ரவி வழக்கம்போல் நன்றாக நடித்திருக்கிறார். அவர் தவிர நயன்தாரா, நரேன், விஜய்லட்சுமி, அழகம்பெருமாள், சார்லி என பலரும் பாத்திரத்தை அழகாக செய்துள்ளனர்.
சமீபத்தில் வந்ததில் மிகச்சிறந்த மேக்கிங் இந்தப்படம் தான் ஒவ்வொரு காட்சியிலும் திரையில் வரும் கலர் டோன் முதற்கொண்டு கேமரா மியூசிக் எல்லாமே அட்டகாசம். ஆனால் இது எதுவும் படத்தை காப்பற்றவில்லை.
ஒரு நல்ல சைக்கொ திரில்லராக வந்திருக்க வேண்டிய படம், பார்க்க முடியாத கொடூர அனுபவமாகிவிட்டது.