இயக்குனர் – விஜயகுமார்
நடிகர்கள் – விஜய் சேதுபதி, லியோ சிவக்குமார் , சஞ்சிதா ஷெட்டி
தயாரிப்பு – எஸ்தெல் எண்டர்டெயினர்
ஒரு கிராமத்தில் சமூக போராளியாக இருக்கும் கதையின் நாயகன் இன்பா சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்பது இவரின் கனவாக உள்ளது. அதற்காக பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிக்கு சேர சில முயற்சிகளை செய்கிறார் , இவருக்கு இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேருவதற்கு வாய்ப்பும் கிடைக்கிறது. இதற்கிடையில் மேல்ஜாதி பெண்ணை காதலிக்கவும் செய்கிறார் , சென்னை சென்று உதவி இயக்குனர் ஆன பிறகு சில காரணங்களால் நாயகியை திருமணமும் செய்துவிடுகிறார், பிறகு இவருக்கு குழந்தையும் பிறக்கிறது, கடைசியில் இவர் நினைத்தபடி இயக்குனர் ஆனாரா ? இல்லையா ? என்பதே மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சீனு ராமசாமியின் தம்பி அறிமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கியுள்ளார். இந்த்ப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் அறிமுக கதாநாயகனாக நடித்துள்ளார்
ஒரு சாதாரன கமர்ஷீயல் படத்திற்கு தேவையான கதைக்கரு இந்தப் படத்தில் அமைந்துள்ளது , ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாத காரணத்தால் படம் மெதுவாக நகர்கிறது, படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் தங்களக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளனர், அதனால் படம் சலிப்பில்லாமல் செலிகிறது , படத்தில் வந்த சில பாடல்கள் னன நன்றாக உள்ளது அது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது
எனினும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் போட்டிருக்கலாம், ஆங்காங்கே தேவையற்ற காட்சிகள் வைக்கப்படுள்ளது, கதைக்களம் ஒரு சமூக கருத்தை தெரிவிக்குமாரு எடுத்துள்ளனர் ஆனால் அதை எதார்த்தமாக காட்ட தவறி விட்டனர்
மொத்தத்தில் அழகிய கண்ணே திரைக்கதையில் மெனகெட்டிருந்தால் இன்னும் அழகாய் வந்திருக்கும்