சிங்கிள் ஷாட்யை தாண்டி இரவின் நிழலில் என்ன இருக்கு?

இரவின் நிழல்

நந்து என்னும் 55 வயது இருக்க கூடிய ஆள் ஒரு வழக்கிற்காக போலீஸிற்கு பயந்து பதுங்கி இருக்க, அவனது வாழ்கையை ஒரு முறை பின்னோக்கி பார்த்து, அவன் கடந்து வந்த பாதையை நினைப்பதே இந்த கதை.

உலகத்தின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட், 350 பேரின் உழைப்பு, தமிழ் சினிமாவின் பெருமை மிகு தருணம், பார்த்திபனின் புது முயற்சி என இந்த படத்தின் மேல் இருக்கும் அற்புத அம்சங்களை விலக்கி, ஒரு பார்வையாளனுக்கு படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மிகவும் டார்க் ஆன கதையை, டார்க் ஆன திரைக்கதை மூலமாக சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை நேராக சொல்வதை விட நான் லீனியர் முறையில் சொல்வதே புத்திசாலி தனம் என நினைத்து திரைக்கதை அமைத்த எழுத்தாளர் பார்த்திபனுக்கு பாராட்டுகளை கொடுக்கலாம். ஆனால் திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும். சுவாரஷ்யமான காட்சிகள் இல்லை, முழுமையான திரைக்கதையாகவும் இது அமையவில்லை.


பல கதைகளை சொல்லாமல் விட்டது போன்ற உணர்வு வருகிறது. ஒன் கட் பிலிம் என்பதால் ஒரு சீனிலிருந்து இன்னொரு சீனுக்கு மாற தனித்துவமான டிரான்ஸிசன் பாய்ண்ட்களை, கொடுக்க படக்குழு நினைத்திருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில், ஒரே இடத்தில் கேமரா நிற்கிறது, அடுத்த இடத்தை தயாராக்குவதற்கு எடுத்து கொள்ளும் கால தாமதத்தை ஒரே இடத்தில் கேமரா சுற்றுவதை வைத்து சமாளிக்கலாம் என படக்குழு நினைத்து இருக்கிறார்கள். படத்தின் செட் அமைப்புகள் படத்துடன் ஒன்றிணையாமல் துருத்தி கொண்டு இருக்கிறது. இதனால் நான் படத்தில் இருந்து அந்நியப்பட்டுவிடுகிறோம்.

ஒட்டுமொத்த படத்தின் சாராம்சமும், ஆறுதலும் இசை தான். ரகுமான் இசையில் பல ஆச்சர்யங்களை கொடுத்துள்ளார். பாடல்களும் பின்னணி இசையும் படத்தில் பிரமாதம்.

மொத்தத்தின் இந்த படம் பற்றி கூற வேண்டும் என்றால், தலையை சுற்றி மூக்கை தொடும் கதை தான் இந்த படம்.