எப்படி இருக்கிறது ராமராஜனின் சாமானியன் ?

 

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்து 23 நாள் 23 வருடங்களுக்கு பிறகு வெளிவந்திருக்கும் திரைப்படம் சாமானியன்.

ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நடிகராக வலம் வந்த ராமராஜன், 23 வருட இடைவேளைக்கு பிறகு படத்தில் நடித்திருக்கிறார். அவரது பலமே கிராமத்து கதைகள் தான், ஆனால் நவீன காலத்தில் மாறிவிட்ட சினிமாவுக்கு ஏற்றபடி, ஒரு கிராமத்து கிளறி விட்டுவிட்டு பேங்க் கொள்ளை கதையில் நடித்திருப்பது சிறப்பு

மக்கள் நாயகன் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர், மைம் கோபி, போஸ் வெங்கட் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கிராமத்து ராமராஜன், அவர் சம்பந்தி எம்.எஸ் பாஸ்கர், நண்பர் ராதாரவி மூவரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய வங்கியை ஹைஜாக் செய்து சில கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு வைக்கின்றனர். அந்தக் கோரிக்கைகள் என்ன, எதற்காக இவர்கள் வங்கி ஹைஜாக் செய்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

மரணத்திற்கு நீதியும் கதாபாத்திரத்தில் ராமராஜன் ஆக்சன் நாயகனாக வலம் வந்திருக்கிறார்
. மகளிடம் பாசம் காட்டுவதிலும் பேங்க்கை\ ஹைஜாக் செய்து காவல்துறையை மிரட்டுவதும் தன் பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார். அவர் யார் எதற்காக வங்கியை ஹைஜாக் செய்கிறார் என்ற காரணம் தெரியும் வரும்போது படம் பார்க்கும் அனைவரும் அவர் சொல்வது அவர் செய்வது சரி என்று சொல்ல வைக்கிறது. எம்.எஸ் பாஸ்கர், ராதாரவி இருவரும் அவருக்கு துணையாக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

வங்கிக்கடன் கொள்ளைகள் நம் மக்களை எப்படியெல்லாம் பாடுபடுத்துகிறது என்பதை அழுத்தமாக பேசியிருக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜா இல்லாமல் ராமராஜனா ? இந்தப் படத்தில் அவர் பங்குக்கு ராமராஜனுக்கு பாடலும் பின்னணி இசையும் அமைத்திருக்கிறார் ஆனால் பாடலும் பின்னணி இசையும் 80 களின் தரத்தில் இருப்பதுதான் சோகம்.

ஒரு நல்ல படத்திற்கான உழைப்பை தந்திருக்கிறார்கள் ஆனால் இந்தகால ஃபாஸ்ட் புட் சினிமா தரத்தில் இல்லை. ஆனால் இப்படம் ராமராஜன் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆகவே இருக்கும்