வதந்தி திரை விமர்சனம் !!

 

அமேசான் ப்ரைமில் வந்திருக்கும் புதிய தொடர்

இயக்கம் – ஆண்ட்ரூ லூயிஸ்
நடிப்பு – எஸ்ஜே சூர்யா, லைலா, நாசர், சஞ்சனா

ஒரு சிறு பெண்ணி கொலை அதன் விசாரணை அதை சுற்றிய உண்மைகளும் வந்தந்தியும் தான் கதை

சுழல் வெற்றிக்கு பிறகு புஷ்கர் காயத்திரி உருவாக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது தொடர். ஒரு வகையில் இணைய தொடரின் இலக்கணத்தை தமிழில் அவர்கள் மட்டுமே சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இணைய தொடருக்கு ஒரு களம் வேண்டும் நிறைய பாத்திரங்கள் பின்னணி கிளை கதைகள் வேண்டும். அதை சரியாக புரிந்து இதிலும் சொல்லி அடித்திருக்கிறாரகள்.

ஒரு இளம்பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. மேன்சன் வைத்திருக்கும் லைலாவின் 18 வயது மகள் என்பது தெரிய வருகிறது. அதை விசாரிக்க எஸ்ஜே சூர்யா வருகிறார். அவரது விசாரணையில் பொய்யும் உண்மையும் மாறி மாறி வருகிறது. இறுதியில் எது ஜெயிக்கிறது என்பதே கதை.

மக்களின் வாய்க்கு கொறிக்க எப்போதும் அவல் வேண்டும். ஏதாவது கிடைத்தால் இவர்களாகவே அதை சுற்றி நிறைய கட்டுகதைகள் கட்டி பேச ஆரம்பித்து விடுவார்கள் ஆனால் அதனால் பாதிப்படைபவர்கள் நிலைமை ?? இதைத்தான் இந்த தொடர் அழுத்தமாக பேசுகிறது.

கன்னியாகுமரி கதைகளம் அந்த மண்ணின் வாழ்க்கை அவர்கள் வட்டார மொழி என அனைத்தையும் நன்றாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

எஸ்ஜே சூர்யா தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார்.
சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்ம்ருதி வெங்கட், அஸ்வின் குமார் என அனைவருமே இத்தொடரில் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள்.

எஸ்ஜே சூர்யா வழக்கமான நடிப்பிலிருந்து மாறி மிக அழகாக பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். இந்த கேஸ் அவர் மண்டையை குடைவதை தண்ணி அடித்து கொண்டு புலம்பும் இடம் அட்டகாசம். அவர் தான் மொத்த தொடரையும் பார்க்க வைக்கிறார். அறிமுக நடிகை சஞ்சனாவிற்கு இந்த தொடர் பெரிய திருப்பு முனையாக அமையும். பல இடங்களில் சிறப்பாக நடித்துள்ளார், கதைக்கும் முக்கிய கதாபாத்திரமாக உள்ளார். லைலாவிற்கு சர்தார் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம். வழக்கம் போல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் நாசர்.

ஒரு எபிஸோடில் இருக்கும் பரபரப்பு இன்னொரு எபிஸோடில் குறைந்து போய் விடுகிறது. க்ளைமாக்ஸ் உண்மையில் மிகப்பெரிய மைனஸ் இதற்காகவா இத்தனையும் எனும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

 

போலீஸ் எப்படி ஒரு கொலையை துப்பு துலக்கும் என்பதை டீடைலாகவும், இன்ட்ரெஸ்டிங் ஆகவும் சொல்ல முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் ஆண்ட்ரு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் ஒரு சினிமா பார்க்கும் அனுபவத்தை தருகிறது.

தமிழில் வந்திருக்கும் ஒரு தரமான தொடராக மிளிர்கிறது வதந்தி.