இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை! ‘டீன்ஸ்’ பட இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இமான்!

இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை! ‘டீன்ஸ்’ பட இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இமான்!

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது. இந்த நிகழ்வில், நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது... "புதுமைகளின் பிறப்பிடம் பார்த்திபன் சார்.…
Read More
அருண் விஜயின் சினம் பட டிரைலர் வெளியீட்டு விழா!

அருண் விஜயின் சினம் பட டிரைலர் வெளியீட்டு விழா!

Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி, நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் இயக்குனர் ஹரி கூறியதாவது.., “படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது. படத்தின் கதைகரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு படமாக இருக்கும் என தெரிகிறது. பல ஆண்டுகள் கழித்து விஜயகுமார் சார் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்,இந்த படம் அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் அறிவழகன் கூறியதாவது.., “அருண் விஜய் உடைய அர்பணிப்பு அபாரமானது, அவர் எல்லாவற்றில் முழு கவனத்துடன் செயல்படகூடிய நபர். இந்த படத்திலும் முழு உழைப்பை தந்துள்ளார். விஜயகுமார் சார் உடன் சேர்ந்து…
Read More

சிங்கிள் ஷாட்யை தாண்டி இரவின் நிழலில் என்ன இருக்கு?

இரவின் நிழல் நந்து என்னும் 55 வயது இருக்க கூடிய ஆள் ஒரு வழக்கிற்காக போலீஸிற்கு பயந்து பதுங்கி இருக்க, அவனது வாழ்கையை ஒரு முறை பின்னோக்கி பார்த்து, அவன் கடந்து வந்த பாதையை நினைப்பதே இந்த கதை. உலகத்தின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட், 350 பேரின் உழைப்பு, தமிழ் சினிமாவின் பெருமை மிகு தருணம், பார்த்திபனின் புது முயற்சி என இந்த படத்தின் மேல் இருக்கும் அற்புத அம்சங்களை விலக்கி, ஒரு பார்வையாளனுக்கு படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மிகவும் டார்க் ஆன கதையை, டார்க் ஆன திரைக்கதை மூலமாக சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை நேராக சொல்வதை விட நான் லீனியர் முறையில் சொல்வதே புத்திசாலி தனம் என நினைத்து திரைக்கதை அமைத்த எழுத்தாளர் பார்த்திபனுக்கு பாராட்டுகளை கொடுக்கலாம். ஆனால் திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும். சுவாரஷ்யமான காட்சிகள்…
Read More
தங்கரின் அழகி-க்கு வயது 20

தங்கரின் அழகி-க்கு வயது 20

அழகி! தமிழில் ஏகப்பட்ட நபர்களை பாதித்த திரைப்படம். அந்த படத்தின் மூலம் காண்போர் ஒவ்வொருவரையும் நமது சொந்த ஊரின் நினைவுகளோடு ஒட்டி உறவாட வைத்தார் தங்கர்பச்சான். உணமையைச் சொல்லப் போனால் இன்றும் கூட எத்தனை தனம்....சண்முகம்..நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. அதனாலேயே அப்படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் நூற்றில் தொண்ணூறு பேருக்கு தன் முதல் காதலை நினைவுபடுத்தியது அதிலும் காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல், போன்ற எல்லா குணாதிசியங்களையும் ஒருங்கே காட்ட எப்படி முடிந்தது இந்த தங்கர்பச்சானால்? "என இந்த ஒற்றை படத்தை கண்டுவிட்டு வியந்தனர் ரசிகர்கள். சிம்பிளாக சொல்வதானால் மயிலிறகை கொண்டு கைகளில் வருடுவது போன்ற மென்மையான கதை. அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தை களும்தான் இந்த 'அழகி'யின் ஒன்லைன். பொதுவாக பெண்கள்தான் திரையில் துக்கமான காட்சிகள் வந்தால் உடனே…
Read More
கமல்+ரஜனி ரசிகன் நான்!- பார்த்திபன் ஸ்டேட்மென்ட்!

கமல்+ரஜனி ரசிகன் நான்!- பார்த்திபன் ஸ்டேட்மென்ட்!

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன்  ஆகியோர் தென் தமிழகம் முழுக்க சென்றனர்.  இதையொட்டி, நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நடிகர் பார்த்திபனிடம்,‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்று  கேட்டனர். அதற்கு பார்த்திபன் அவர் பாணியிலேயே “கமல் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டால் அவரிடமே வருகிறீர்களா, இல்லையா எனக் கேட்டு சொல்லிவிடுவேன். ரஜினியை பொறுத்தவரை அவர் ஆண்டவனை கேட்டுத்தான் சொல்வேன் என்பார். எனக்கு…
Read More