எப்படி இருக்கிறது ஷூ – திருப்திபடுத்தியதா?

யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரீப்பீட் ஷீ திரைப்படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது.

குழந்தைகளை சுற்றியே இக்கதை நகரும் படி வடிவமைக்கப்படு இருக்கிறது. ஷூ போன்ற கால இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார் திலீபன், அதனை சோதனை செய்யும் போது எதிர்பாராத விதமாக போலீசில் மாட்டிக் கொள்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் குழந்தைகளை விலைக்கு வாங்கி அவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்தும் கும்பல் ஒன்று இயங்கி வருகிறது. இன்னொரு கதையாக தாயில்லா குழந்தை குடிகார அப்பாவிடம் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறது. இந்த மூன்று கதையும் ஒரு புள்ளியில் இணையும் இடம் தான் ஷூ.

தொழில்நுட்ப வல்லுவனர்கள் வலுவாக இந்த படத்திற்கு அமைந்துள்ளனர். இசை, படதொகுப்பு என பல விஷயங்களில் இயக்குனர் கவனம் செலுத்தியுள்ளார். காமெடியும் அங்கங்கு வொர்க் ஆகிறது. ஆனால் புதுமையான காட்சியமைப்புகள் எதுவும் இல்லை.

அந்த குழந்தை நட்சத்திரம் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறது. படம் முழுவதும் எதார்த்தமான நடிப்பையே முக்கிய கதாபாத்திரங்கள் கொடுத்திருக்கிறார்கள். ஷூ தான் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக இருந்தாலும் அது வரும் காட்சிகள் குறைவு தான்.
எப்படி கெட்டவர்களிடம் இருந்து, அந்த குழந்தைகளை காப்பாற்ற அந்த ஷூ உதவுகிறது, அதற்கு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வழக்கமான திரைப்பட பாணியில் கூறி இருக்கிறார்கள்.