இயக்கம் – ராஜு முருகன்
கார்த்தி , அனுமோல்
ஜப்பான் கார்த்தியின் 25 வது திரைப்படம். தமிழ் சினிமாவில் கொஞ்சமேனும் கதைக்கு முக்கியத்துவம் தந்து, நல்ல இயக்குநர்களோடு நல்ல படங்கள் தரும் ஹீரோ என, பாராட்டு வாங்கி வைத்திருக்கும் கார்த்தி, நிறைய உழைப்பை போட்டு தந்திருக்கும் படம்.
கோவையில் ஒரு ஜீவல்லரி கடையில் 200 கோடி நகைகள் கொள்ளை போகிறது. செய்தது ஜப்பான் என தெரிய வருகிறது. அரசியல் வாதிகளின் அழுத்தம், போலீஸில் இரண்டு பிரிவுகள் ஜப்பானை தேடி அலைகிறது. பார்ட் டைம் நடிகர், பலே திருடன் கார்த்தி எங்கிருக்கிறார், போலீஸில் சிக்கினாரா ? அவருக்கு என்ன ஆனது? என்பதே படம்.
படம் பார்க்க ஆரம்பித்த கணத்திலிருந்து முடியும் என்ன படம் ஓடுகிறது? எதற்காக படம் பார்க்கிறோம் ? என்ன எடுத்துள்ளார்கள் எதுவும் தெரியவில்லை. மருந்துக்கூட நம்மை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு காட்சி கூட, படத்தில் இல்லை.
அனுமோல், விஜய் மில்டன், சுனில் என பெரிய நட்சத்திரக்கூட்டம், ஆனால் ஒருவர் கூட படத்திற்கு உதவ முடியவில்லை. படம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதே புரியவில்லை.
கார்த்தி குரல், முடி, பாணி என எல்லாவற்றையும் மாற்றி நடித்திருக்கிறார் ஆனால் ஏன் ? . உண்மையிலேயே நோக்கர் தந்த ராஜுமுருகன் படம் தானா ? நம்பவே முடியவில்லை !. கார்த்தி திரை வாழ்க்கையில் மிக மோசமான படமாக ஆகியிருக்கிறது ஜப்பான்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருந்த ஜப்பான் ஒரு கொடுங்கனவா எஞ்சி விட்டது.