விக்ரம் திரை விமர்சனம் !

இயக்கம்லோகேஷ் கனகராஜ்

நடிகர்கள்கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி.

தொடர்கொலைகளை விசாரிக்க நியமிக்கபடும் அதிகாரி, அந்த கொலைகளை பற்றி விசாரிக்கையில் அதுகொலைகள் இல்லை ஒரு போரின் அடித்தளம் என்பதை கண்டுபிடிக்கிறார். அந்த கொலைகளை செய்ததுயார்? ஏன் செய்தார்கள்? என்பதை திருப்பங்களுடன் சொல்வதே விக்ரம்.

கமல்ஹாசன் இப்படிபட்டவர், விக்ரம் 1986ல், கைதியில், என இழுத்தடிக்காமல், சுற்றலுக்கு செல்லாமல்விக்ரம் என்ற திரைப்படத்துடைய விமர்சனத்தை மட்டும் பார்க்கலாம்.

படத்தின் முக்கியமான இரண்டு சிறப்பம்சம் கமல்ஹாசன், பகத் பாசில் என்ற இரு நடிகர்களும் படம் முழுவதும்தெரியவில்லை. விக்ரம், அமர் என்ற கதாபாத்திரம் மட்டுமே தெரிகின்றது. இதுவே ஒரு நடிகனின் மிகப்பெரியசாதனை தான்.

யார் கொலை செய்வது? எங்கே பொருள்? இந்த இரண்டு கேள்விகளை நோக்கியே திரைக்கதைநகர்த்தப்பட்டுள்ளது. இதுபோக கதையின் கதாபாத்திரங்களுக்கு நிகழும் சொந்த பிரச்சனைகளுடன்நகர்வதாய் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்த்தியான திரைக்கதை ஆசிரியர் மிகவும் நுட்பமாகயோசித்து வைக்கும் ஐடியா தான் இந்த திரைக்கதை யுக்திகள். ஆனால் இது ஆழமாய் தேடினால் தான்கிடக்கிறது. ஆகச்சிறந்த திரைக்கதை விக்ரம் திரைக்கதை எனும் கூறும் அளவிற்கு பல விஷயங்கள்கதையினுள் புதைந்து கிடக்கிறது. ஆனால் வருத்தம் என்னவென்றால் அது எதுவும் வெளியே தலைக்காட்டாதபடி படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.

குறிப்பாக சொல்லபோனால், கதையின் ஹீரோ விக்ரம் உடைய மகனை கொன்றுவிட்டார்கள் பேரனை கொல்லமுயற்சிக்கிறார்கள், அவருக்கு துணையாய் இருக்கும் பிஜாய் (நரேன்) உடைய குடும்பத்தைகொன்றுவிட்டார்கள், அமர் உடைய காதல் மனைவி வில்லன் கையில் சிக்கி இறக்கிறாள், படத்தின் வில்லன்சந்தனம்(விஜய் சேதுபதி) போதை பொருளை கண்டுபிடிக்கவில்லை என்றால் அவனுடைய முதலாளி ரோலக்ஸ்அவன் குடும்பத்தில் உள்ள 64 பேரையும் கொலை செய்துவிடுவான், இதுபோக படத்தில் உள்ள மற்றகதாபாத்திரங்களும் யார் எப்போது கொல்வார்கள் என உயிரை கையில் பிடித்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி படத்தில் உள்ள அனைவரின் தலையின் மீதும் கத்தி தொங்குகிறது, சாவின் பயத்தை நோக்கியேஅவர்கள் பயணிக்கிறார்கள். இப்படிபட்ட நெருக்கடிகள் உள்ள நேர்த்தியான பின்கதைகளை வடிவமைத்தஎழுத்தாளர், இதை பார்வையாளர்களுக்கு கடத்தவில்லை. இத்தனை விஷயங்களையும் பார்வையாளர்களுக்குகடத்தி இருந்தால், பார்வையாளர்கள் யாருக்கு என்ன ஆகும் என சீட்டின் நுனியில் பதட்டத்துடன் உட்கார்ந்துஇருப்பார்கள். மட்டன் பிரியாணியை சமைத்து வைத்துவிட்டு, சுவையான வெஜிடபிள் பிரியாணியைரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ரத்தம் சூடேறும் ஆக்‌ஷன் காட்சிகளையும், பரபரக்கும் துப்பாக்கி சண்டைகளையும் கொடுத்து ரசிகர்களுக்குவிருந்து வைத்துள்ளதாக நினைக்கின்றனர் படக்குழு. ஆனால் அவர்கள் சமைத்த சாப்பாட்டை மறந்து, கடையில் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார்கள். சின்ன சின்ன விஷயங்களை விலாவரியாக பேசினால் மொத்தகதையும் உடைந்து விடும் அளவிற்கு இருக்கிறது படம்.

முகமூடி போட்டு விக்ரம் சண்டையிடும் காட்சியில் கமல் உடலமைப்பு போல் உள்ள ஒருவருக்கு டூப் போட்டுஇருக்கலாம், முகமூடிக்குள் இருப்பவர் உடைய பாவனை உடலசைவு ஒரு மாதிரியும், முகமூடியை கலட்டியதும்கமல் காட்டும் உடலசைவு ஒரு மாதிரியும் இருக்கிறது. அவ்வளவு பெரிய போதை பொருள் உலகத்தின் டான்ரோலக்ஸ், திருச்சியில் 800 கோடி மதிப்புள்ள போதை பொருள் போனபோதும் ஒன்னும் செய்யவில்லை. படத்தின் இண்டர்வல்லில் நீ ஆம்பளையா இருந்தா என வசனம் கூறி கமல் முகமூடி கழட்டுவது எல்லாம், அபத்தமான காட்சிகள். கமல் 30 வருடங்களுக்கு முன்னரே இது போன்று பல படங்களில் செய்துவிட்டார். கமல் முகத்தை திரையில் காட்டியது ஒட்டுமொத்த ரவுடி கும்பல், போலீஸ்ல் இருக்கும் சேம்பன் என எல்லோபர்த்துவிட்டனர். ஆனால்  ரோலக்ஸ்க்கு அது போகவில்லை. கிளைமேக்ஸில் கமல் அந்த கூட்டத்தில் இருந்தும்யாரும் அவரை சந்தேகபடவில்லை என்றால், அந்த கூட்டத்தில் இருந்த யாருமே விக்ரமை பார்க்கவில்லைபோல.

போதை பொருள் இருக்கும் இடம் இருவருக்கு மட்டுமே தெரியும் என கதை நகர்கிறது. ஆனால் கதையில்உங்க அப்பனே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது என காளிதாசும், கமலும் வசனம் பேசுகிறார்கள். வசனம்உண்மையென்றால் கதை பொய்யா, சரி அந்த இருவருக்கு எப்படி அந்த இடம் தெரிந்தது. அடுத்த கேள்விவிக்ரமுக்கு சரக்கு எங்கு இருக்கு என்பது தெரியும் அதை முதலிலயே அழிக்காமல், கிளைமேக்ஸ் வரைவில்லன் கேங் பொருளை எடுக்க செய்த முழு அழிவு வேலைகளையும் பார்த்துவிட்டு கிளைமேக்ஸில் போதைபொருளை CODE RED-ல் அழிப்பது ஏன்.

லோகேஷ் கண்டிப்பாக கமல்ஹாசனின் ரசிகர் தான் ஆனால் அது கதையிலும் அதற்கு பின்கதைஅமைப்பதிலும், திரை எழுத்திலும், மேக்கிங்கிலும் அவர் கமல் ரசிகர் அல்ல.

இந்த படத்தில் ஒரு கவிநயம் இருக்கிறது. அது கமல் ரசிகர்கள் தொடர்பு கொள்ளும் படியான கதையமைப்பு. அது என்னவென்றால் படத்தில் அமர் கதாபாத்திரம் விக்ரம் கதாபாத்திரத்தின் விசிறி. விக்ரம் கதாபாத்திரத்தையாராலும் கண்டுபிடிக்க முடியாது, ஒருவரால் மட்டுமே முடியும் அது விக்ரம் மட்டுமே. அமரும், விக்ரம் தான். விக்ரமின் விசிறி. இது உலகநாயகனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் உள்ள பந்தத்தை திரையில் சொல்வதாய்இருக்கிறது. ஏன் லோகேஷ்அமர், விக்ரம்கமல்ஹாசன் அப்படி கூட இருக்கலாம். இந்த மாதிரி பின்கதைகள்எழுத கமலால் மட்டுமே முடியும், ஆமாம் கமல் ரசிகர்களும் கமல் தான். லோகேஷும் கமல் தான், திரைக்குமுன்னால் உட்கார்ந்து உலகநாயகனை கைதட்டி ரசித்த பலரும் கமல் தான்.

கமலுக்கு இப்போதைய இந்த வெற்றி அவசியம் அது நடந்தது சந்தோஷம் ஆனால் இது ஒரு நிறைவானபடைப்பல்ல கமலின் படங்கள் காலம் கடந்தாலும் அசை போட நிறைய ஆழமான காட்சிகளால்நிரம்பியிருக்கும் இதில் அப்படி எதுவுமே இல்லை என்பது வருத்தமே !