The Flash திரை விமர்சனம்
டிசி Dc காமிக்ஸ்ல் ப்ளாஷ் சூப்பர் ஹீரோவை தனி ஹீரோவாக வைத்து வந்திருக்கும் படம்.
மார்வல் போல அல்லாமல் டிசி காமிக்ஸ் ஹிட் கொடுப்பதில் தத்தளித்து வருகிறது. Justice League படத்திற்கு பிறகு மொத்த சூப்பர் ஹீரோ உலகத்தையும் மாற்றியமைப்பதால அவர்கள் அறிவித்ததற்கு பிறகு, நிறைய குழப்பங்கள், பழைய சூப்பர் ஹீரோக்களுடன் டிசியில், வந்திருக்கும் கடைசி படம்.
அதுவும் மல்டிவெர்ஸ்சில் ஹீரோ பயணிப்பதால், பல பழைய சூப்பர் ஹீரோக்களின் கேமியோ எல்லாம் சேர்ந்து, இந்தப்படத்திற்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு வேறு.
முதலில் இப்படத்தின் கதையை பார்த்து விடலாம்.
பேரி ஆலன், தனது சூப்பர் பவர்களைப் பயன்படுத்திக் காலத்தின் பின்னால் சென்று சில நிகழ்வுகளை ஒழுங்கப்படுத்தினால் இறந்து போன தன் அம்மாவை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் தனது குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஏற்படும் பேரி ஆலனின் கவனக்குறைவால், எதிர்காலம் மாற்றியமைக்கப்பட்டு, கடந்த காலத்திலேயே மாட்டிக் கொள்கிறான். அந்த கடந்த காலத்தில் சூப்பர்மேனை தேடி ஜெனரல் Zod திரும்ப வருகிறான். பூமியைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்கள் யாருமில்லாததால், தனது ஓய்வுக்காலத்தில் இருக்கும் வினோதமான பேட் மேனின் (Bat Man) உதவியை நாடி, சிறைப்பட்டிருக்கும் க்ரிப்டோனியனை மீட்கிறான் பேரி. ஆனால், பேரி ஆலன் மீட்டதோ அவன் எதிர்பார்த்த சூப்பர்மேன் இல்லை.
தான் சிக்கிய காலத்தில் இருக்கும் பூமியைக் காப்பாற்றவும், எதிர்காலத்திற்கு மீண்டும் செல்லவும், பேரி ஆலனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் உயிரைப் பணயம் வைத்து ஓடுவதே! பேரி தன் முயற்சியில் ஜெயித்தானா என்பதே கதை.
கதை மிகபரபரப்பாம கதைதான் திரைக்கதையும் வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் தான் என்ன செய்வதென தெரியாமல் குழப்பி வைத்திருக்கிறார்கள். 3 பேட்மென், வொண்டர்வுமன், 3 சூப்பர்மேன் என் பல கேமியோல்க்கள் வருகிறது ஆனால் எதுவும் மனதில் நிற்கவில்லை.
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தான் அதிகம் ஆனால் சிஜி படு மொக்கையாக இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன், வந்த Man of Steel பட சம்பவங்கள் இதில் மீண்டும் வருகின்றன, ஆனால் அப்போதிருந்த சிஜி கிராபிக்ஸ் அட்டகாசம். இப்போது அதே காட்சிகள் படு மோசமாக வந்துள்ளது.
டிசியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமானால் அவர்கள் போட்டி போடும் மார்வலுக்கு இணையாக சிந்திக்க வேண்டும். ஆனால் அவர்கள் மார்வலின் கலர் டோனையும், கமர்ஷியலையும் கொண்டு வந்தால் போதுமென நம்புகிறார்ர்கள். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யுக்கு அலையும் கதை தான் டிசியுடையது. இந்தப்படத்திலும் அதே தான் நடந்திருக்கிறது. The Flash எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.