எழுத்து இயக்கம் – P. வாசு
ராகவா லாரண்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு, வடிவேலு
சந்திரமுகி இயக்குநர், காஞ்சனா நடிகர் இணைந்தால் என்ன நடக்கும் அது அப்படியே அச்சு பிசகாமல் நடந்திருக்கிறது. ஒரு கொலை, பழிவாங்க காத்திருக்கும் பேய். கொலையை விசாரிக்க வரும் போலீஸ் ஆபிசரின் மனைவி உடம்புக்குள் புகுந்து கொள்ளும் பேய். இவ்வளவுதான் கதை.
லாரன்ஸ்க்கு பழக்கப்பட்ட ஏரியா. புகுந்து விளையாடுகிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை விட இதில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். பேய்க்கு இன்னும் எத்தனை படத்தில் பயப்படப்போகிறார் என தெரியவில்லை. நடிப்பை விட அவருக்கு டான்ஸ் அட்டகாசாமாக வருகிறது. அவரிடம் யாரவது பஞ்ச் டயலாக்கை குறைக்க சொன்னால் நன்றாக இருக்கும். போன படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார். இந்த்ப்படத்தில் சின்ன கபாலி. வாழ்த்துக்கள்
ரித்திகா சிங் தான் படத்தின் தூண். அடக்கமான குறும்பு பெண், அன்பான மனைவி, பேய்பிடித்து ஆடும் வில்லி என நவரசங்களில் ஆச்சர்யப்படுத்துகிறார். பேய் பிடிக்கும் சமயங்களில் நம்ம்மையும் பயமுறுத்துகிறார். குத்துப்பாடலிலும் ஆட்டம் தூள் கிளப்புகிறார்.
வடிவேலுக்கு உணமையான கம்பேக் இதுதான். கிடைக்கும் பாலை எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார். ரொம்ப நாட்கள் கழித்து மனம் விட்டு சிரிக்க வைக்கிறார். ஆனால் அவருக்கான ரோல் ரொம்பவும் சின்னது.
சக்தி வாசு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் பேயை வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவா ஓட்டப்போகிறார்களோ!
சந்திரமுகி வாடை படத்தில் அதிகமாய் அடிக்கிறது. பி அன் ஸி என முடிவெடுத்தப்பின் தான் படமே எடுத்திருக்கிறார்கள். அதனால் படத்தின் கதையே ஒபனிங் சாங், சண்டை முடிந்து அரைமணிக்கு அப்புறம்தான் துவங்குகிறது. லாஜிக் அதற்கு கேள்வியே இல்லை.
மீண்டும் மீண்டும் லாரன்ஸ் பேய்ப் பிடித்து ஆடுவது சலிப்பைத் தந்து விடுகிறது. புதிதாய் சொலவதற்கு படத்தில் எதுவுமே இல்லை. அடிதட்டு ரசிகர்களுக்கான படம். அவர்களை திருப்திபடுத்தி விடும்.
“சிவலிங்கா”சந்திரமுகி ஸ்டைலில் ஒரு பேய்ப்படம் அவ்வளவே !