BAD BOYS : RIDE OR DIE மீண்டும் ஹிட்டடித்ததா?

அமெரிக்க திரை வரலாற்றில் மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் பேட் பாய்ஸ் (1995)
மயாமியைச் சேர்ந்த இரண்டு காமெடி போலீஸ் அதிகாரிகள் பண்ணும் அழிச்சாட்டியங்கள் அவர்கள் சிக்கிக் கொள்ளும் கேஸ்கள் பற்றியதுதான் இந்த திரைப்படம். இரண்டு கருப்பின் அதிகாரிகள், காமெடி, ஆக்சனுடன் கலக்கல் கமர்சியல் திரைப்படமாக வெளியான இந்த திரைப்படம் அமெரிக்க திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பேட் பாய்ஸ் தொடர் வரிசையாக 3 பாகங்கள் இதுவரை வந்திருக்கின்றன

‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் 3 வது பாகமான , ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தின் கதையின் தொடர்ச்சியாக இப்போது நான்காவது பாகம் இப்போது வந்துள்ளது .

இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி படம் வெளியிடப்பட்டுள்ளது.

உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ‘பேட் பாய்ஸ்’ அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர். இந்த முறை திரைக்கதையிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார்கள் அது படம் முழுக்க நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது


துப்பறியும் நிபுணர்கள் மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர். மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று போலீஸ் தலைமை அறிவிக்கிறது அதை போய் என தெரிந்து அதிலுள்ள உண்மையை கண்டுபிடிக்க நம்ம ஹீரோக்கள் கிளம்புகிறார்கள். அதில் அவர்களுக்கு வரும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் வழக்கம் போல் காமெடி கலந்து, ஆக்சனுடன் சொல்லியிருக்கிறாரகள்.

சமீப காலமாக ஹிட் கொடுக்காத வில் ஸ்மித்திற்கு இந்தப்படம் பெரிய திருப்பமாக அமைந்துள்ளது இளவயது ஸ்மித்தை மீண்டும் பார்க்கும் திருப்தி கிடைக்கிறது. மார்ட்டின் லாரன்ஸ் உடனான அவரது கூட்டணி இந்த முறையும் அட்டகாசமாக ஒர் அவுட்டாகியுள்ளது. பல சிக்கலான தருணங்களில் மார்ட்டின் லாரன்ஸ் அடிக்கும் காமெடி கமெண்ட்கள் சிரிப்பு சரவெடியாக அமைந்துள்ளது.

க்ளைமாக்ஸ் ஃபைட் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பேட் பாய்ஸியிடம் என்ன எதிர்பார்ப்போமோ அதை சரியாக தந்து ஜெயித்துள்ளார்கள் இயக்குநர் Adil & Bilall.

இந்திய ரசிகர்களுக்காக தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டிருக்கிறது. மீண்டும் பேட் பாய்ஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது இந்தப்படம்.