‘சந்திரமுகி 2’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்திய ரஜினிகாந்த்!

‘சந்திரமுகி 2’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்திய ரஜினிகாந்த்!

  லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் 'சந்திரமுகி 2'. இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் பி வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'சந்திரமுகி 2' வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.‌ படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாவதால் படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் முன் பதிவு செய்து படத்தை ரசிக்க காத்திருக்கிறார்கள்.‌ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில்…
Read More
சந்திரமுகி 2 திரை விமர்சனம்

சந்திரமுகி 2 திரை விமர்சனம்

இயக்கம் - பி.வாசு நடிகர்கள் - ராகவாலாரன்ஸ் , கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா இசை - கீரவாணி தயாரிப்பு - லைகா நிருவனம் பணக்கார குடும்பம் தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அந்த குடும்பத்தின் பிரச்சனை தீருவதற்கு குல தெய்வ வழிபாடு ஒன்றே தீர்வு என சாமியார் ஒருவர் கூறுகிறார். இதனால் அந்த குடும்பம் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறது. இவர்களுடன் குடும்பத்திற்கு சம்மந்தம் இல்லாத பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) உடன் வருகிறார். அவர்கள் அனைவரும் அந்த ஊரில் உள்ள வேட்டையாபுரம் அரண்மனையில் தங்குகின்றனர். அங்கு அவர்கள் செய்யும் சில விஷயங்களால் எதிர்பாராத அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுகிறது, இதன் பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை! பொதுவாக பேய் படங்களை பொறுத்துவரை, தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சினைக்கு உள்ளாகி, இறக்கும் நபர்களே பழிவாங்குவதற்காக பேயாக மாறுவார்கள். ஆனால், சந்திரமுகி படம் இதில் இருந்து வேறுபடுகிறது எந்தவொரு தொடர்பும்…
Read More
வித்தியாசமான முறையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் பி. வாசு

வித்தியாசமான முறையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் பி. வாசு

  தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி அறுபதிற்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் பி. வாசுவின் பிறந்த நாளை முன்னிட்டு, 'சந்திரமுகி 2' படக்குழுவின் சார்பில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதன் போது தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்பை பி. வாசு பரிசளித்தார். லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'சந்திரமுகி 2'. இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியிருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்சுடன் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.…
Read More
குஷ்புவுக்கு கோயில் கட்ட காரணமாக இருந்த “ சின்ன தம்பி” ரிலீஸ் டே!

குஷ்புவுக்கு கோயில் கட்ட காரணமாக இருந்த “ சின்ன தம்பி” ரிலீஸ் டே!

‘சின்னத்தம்பி’ திரைப்படம் கடந்த 1991-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகளாகியுள்ளது. அதில் பிரபுவின் அப்பாவி நடிப்பா? இளையராஜாவின் இசையா? மனோரமா வின் தாய்ப்பாசமா? எதை பற்றியும் தனித்தனியாக பேசமுடியாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக அன்றைய தமிழக மக்களை பேச வைத்த படமிது. 9 தியேட்டர்களில் வருடக்கணக்கில் ஓடிய படம். 27 வருடங்கள் கடந்து இன்றைக்கும் இதே சின்னதம்பி என்ற பெயரை தமிழக மக்கள் உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்தப் படம் குறித்து நடிகை குஷ்பு நெகிழ்ச்சியான ட்விட் ஒன்றைப் பகிர்ந்து உள்ளார். அதில், “ 'சின்னத்தம்பி’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாகி விட்டது என்பதை நம்ப முடியவே இல்லை. படம் வெளியாகி அந்த சமயத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. இந்தப் படம் வெளியான பிறகு என்மேல் நீங்கள் செலுத்திய அன்பை எப்போதும் மறக்க…
Read More
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்

  நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு…
Read More
சிவலிங்கா – விமர்சனம்!

சிவலிங்கா – விமர்சனம்!

எழுத்து இயக்கம் - P. வாசு ராகவா லாரண்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு, வடிவேலு சந்திரமுகி இயக்குநர், காஞ்சனா நடிகர் இணைந்தால் என்ன நடக்கும் அது அப்படியே அச்சு பிசகாமல் நடந்திருக்கிறது. ஒரு கொலை, பழிவாங்க காத்திருக்கும் பேய். கொலையை விசாரிக்க வரும் போலீஸ் ஆபிசரின் மனைவி உடம்புக்குள் புகுந்து கொள்ளும் பேய். இவ்வளவுதான் கதை. லாரன்ஸ்க்கு பழக்கப்பட்ட ஏரியா. புகுந்து விளையாடுகிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை விட இதில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். பேய்க்கு இன்னும் எத்தனை படத்தில் பயப்படப்போகிறார் என தெரியவில்லை. நடிப்பை விட அவருக்கு டான்ஸ் அட்டகாசாமாக வருகிறது. அவரிடம் யாரவது பஞ்ச் டயலாக்கை குறைக்க சொன்னால் நன்றாக இருக்கும். போன படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார். இந்த்ப்படத்தில் சின்ன கபாலி. வாழ்த்துக்கள் ரித்திகா சிங் தான் படத்தின் தூண். அடக்கமான குறும்பு பெண், அன்பான மனைவி, பேய்பிடித்து ஆடும் வில்லி என…
Read More