அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 90 -வது பிறந்த நாளை முன்னிட்டு ”சிவாஜியும் தமிழும்” என்ற தலைப்பில் மாபெரும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க தலைவர் முனைவர். எஸ். கவிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் நிறுவன வேந்தர் தா.இரா. பாரிவேந்தர் தலைமை வகித்தார். விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.பி. சந்தோஷம், வசந்த் அன்ட் கோ தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ., புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நக்கீரன் தமிழ் சங்க பொதுச்செயலாளர் மீடியா பாஸ்கர்  ​ மற்றும் கவிஞர் இன்பா ​ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார். ”தேசியத்திற்கு சிவாஜி” என்ற தலைப்பில் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அந்த காலத்தில்…
Read More
விக்ரம் மகளை தன் கொள்ளு பேரணுக்கு மணம் செய்து வைத்தார் கருணாநிதி!

விக்ரம் மகளை தன் கொள்ளு பேரணுக்கு மணம் செய்து வைத்தார் கருணாநிதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிகழ்வையொட்டி காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார். மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர். காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர். மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமண…
Read More
கார்த்திக் + கெளதம் கார்த்திக் இணைந்து வழங்க போகும் ‘ மிஸ்டர் சந்திரமெளலி’

கார்த்திக் + கெளதம் கார்த்திக் இணைந்து வழங்க போகும் ‘ மிஸ்டர் சந்திரமெளலி’

மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி நடிப்பில் தயாரான மௌனராகம் படம் இன்றளவும் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும் பொழுதும் பலரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது என்று சொல்வது மிகையல்ல . காரணம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை. அதிலும் கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமெளலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஒற்றை வார்த்தையையே தற்போது தயாராகப் போகும் ஒரு தமிழ்ச் சினிமாவின் தலைப்பாகவே வைத்திருக்கிறார்கள் என்பதும் அந்த நேமை உச்சரித்த அதே நாயகன் கார்த்திக்கை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் என்பது இன்னும் சிறப்பான விஷயம். இதில் அடிசினல் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் இதில் ஸ்பெஷல் ரோல் என்பதுதான் . ஆம்.. வளந்து ஓயெது விட்ட நடிகர்…
Read More
அஜித்தையே கலாய்ச்சவன் நான் – பரோட்டா சூரி மகிழ்ச்சி!

அஜித்தையே கலாய்ச்சவன் நான் – பரோட்டா சூரி மகிழ்ச்சி!

சூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது பரோட்டா தான் ’வெண்ணிலாக் கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த அவர் நடித்து வந்தப் படங்களின் காமெடி அனைத்தும் சூப்பர் ஹிட். இதனால இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிசி நடிகராக மாறிவிட்டார் சூரி தற்போதய தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவிற்கு நிகராகவேப் படம் முழுக்க நடிக்க வைக்கின்றனர். இந்த நிலையில் சினிமாவில் தான் அடியெடுத்து வைத்து இருபது வருடம் ஆகிவிட்டதையும் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இதுநாள் வரை இருந்துவரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சூரி பழைய நினைவுகளை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.. அப்போது. லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஜி’ படத்தில் இரண்டு காட்சிகளில் தான் நடித்ததாகவும், அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவரின் அடியாளாக நடித்த சூரி, படப்பிடிப்பில் ஒரு காட்சியின்போது அஜித்தை…
Read More
“நோ ஒன் கேன் ரீபிளேஸ் டி.எஸ்.பாலையா!

“நோ ஒன் கேன் ரீபிளேஸ் டி.எஸ்.பாலையா!

கோலிவு-ட்டுன்னு இப்ப ஷார்ட்டா சொல்ற நம்ம தமிழ்த் திரையில் உலகத்தரமான நடிகர்களுக்கு இடமிருக்கிறதா? கண்டிப்பாக இருக்கிறது. அந்தப் பட்டியலில் இடம்பெறும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் "நோ ஒன் கேன் ரீபிளேஸ் பாலையா" என்று 85 வயது வயது நிரம்பிய முதியவராக கடந்த 1990ஆம் சென்னை வந்தபோது தமிழ்சினிமாவின் முதுபெரும் இயக்குநர் எல்லிஸ் ஆர் டங்கன் சொன்னார். அவர் இயக்கிய வேறு எந்த நட்சத்திரத்துக்கும் இந்தப் பெருமையை அவர் கொடுக்கவில்லை. யார் இந்த பாலையா? என்ற கேள்விக்கு நம்ம கட்டிங் கண்ணையா வழங்கிய பேப்பர் கட்டிங்கில் இடம் பெற்ற கொஞ்சம் விரிவான ஆனால சுவையான தகவல் இது - இன்று வடிவேலு, கவுண்ட மணி, சந்தானம், சூரி நகைச்சுவை இணையாக டி.எஸ்.பாலையாவின் நகைச்சுவை காட்சிகள் தமிழ்தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருவதே அவர் காலம் கடந்த கலைஞர் என்பதற்கு சாட்சி. அவரது வாழ்க்கை இன்றைய தூத்துக்குடி மாவட்டம் சுண்டாங்கோட்டை என்ற…
Read More
முதல்ல நீங்க மாறுங்கப்பூ! – டாப் நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!

முதல்ல நீங்க மாறுங்கப்பூ! – டாப் நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அட்வைஸ்!

 ஏற்கெனவே மத்திய அரசின் ஜி எஸ் டி வரி வந்த சினிமா டிக்கெட்டுகளுக்கு தமிழக அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததற்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் கேளிக்கை வரியை ரத்து செய்யம்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந் நிலையில் நடிகையும், சினிமா டைரக்ட ருமான லட்சுமி ராமகிருஷ்ணன் திரையுலகினரின் போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டு உள்ளார். அதாவது “திரைப்படத் தொழிலை வியாபாரமாக பார்த்தால் எதற்காக வரிவிதிப்புகளை எதிர்க்க வேண்டும்..? நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி கொடுத்து விட்டு வரிவிலக்கு கேட்க வேண்டுமா…? வரி கட்டுபவர்கள் அரசாங்கத்தின் வீண் செலவுகளை கேள்வி கேட்பார்கள். படம் 100 கோடி ரூபாய் வசூலித்து விட்டது என்கிறார்கள். இதற்காக கோடிகளில் விளம்ப ரமும் செய்கிறார்கள். நடிகர்கள் சம்பள தொகையை ஏற்றுகிறார்கள். அதன் பிறகும் வரி விலக்கு கேட்டு…
Read More
என் தாம்பத்ய வாழ்க்கையின் வெற்றி ரகசியம்! – கின்னஸ் பக்ரூ ஓப்பன் டாக்!

என் தாம்பத்ய வாழ்க்கையின் வெற்றி ரகசியம்! – கின்னஸ் பக்ரூ ஓப்பன் டாக்!

கின்னஸ் பக்ரு புகழ்பெற்ற குள்ள நடிகர். முப்பது வருடங்களாக தென்னிந்திய திரைப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். முழு நீள படத்தில் நடித்த மிக சிறிய குள்ள நடிகராக கின்னசில் இடம்பிடித்த சாதனையாளர். திருமணமாகிவிட்டது. மூன்றாம் வகுப்பு படிக்கும் இவரது மகள் தீப்தகீர்த்தி, இப்போது தந்தையை விட வளர்ந்துவிட்டாள். பக்ரு, வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவளும் சென்று             விடுகிறாள். தந்தையோடு விளையாடுவதிலும், பொழுதுபோக்குவதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகம். ‘‘எனது மகள் படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நிகழ்ச்சியில் என் மகள் நடினமாடினாள். அவ்வளவு சிறப்பாக அவள் நடனமாடுவாள் என்பது எனக்கு தெரியாது. இப்போது நடனம், ஓவியம் இரண்டும் கற்றுக்கொண்டிருக்கிறாள். எனது மகளுக்கு நான் தந்தை என்பதைவிடவும், விளையாட்டுத் தோழன் என்பதுதான் சரி. எனது சிறுவயது பருவத்தில், என் தந்தையுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டது சுவாரஸ்யமான அனுபவம். அவரது சைக்கிளில் எனக்காக சிறிய சீட் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. நான் கதைபிரசங்க…
Read More
எனது இளமையின் ரகசியம் என்ன தெரியுமா? – சிவகுமார் ஓப்பன் டாக்!

எனது இளமையின் ரகசியம் என்ன தெரியுமா? – சிவகுமார் ஓப்பன் டாக்!

என்றும் மாறா இளமையான தோற்றதுக்குச் சொந்தக்காரர் பன்முகக் கலைஞர், நடிகர் சிவகுமார். 75 வயதை நிறைவு செய்திருக்கும் அவரிடம் ‘உங்கள் இளமையின் ரகசியத்தைப் பகிர முடியுமா’ என்றதும் உற்சாகத்துடன் கொட்ட ஆரம்பித்துவிட்டார். “கோவை மாவட்டத்தில் மிகச் சிறிய குக்கிராமத்தில் பிறந்தேன். நான் பிறந்த பத்தாவது மாதத்தில் என் அப்பா இறந்துவிட்டார். அப்பா விட்டுச் சென்றிருந்த 8 ஏக்கர் மானாவாரி நிலத்தில் பாடுபடுவதற்காக மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் அக்காவைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார் அம்மா. ஒரு பவுன் 12 ரூபாய்க்கு விற்ற அந்தக் காலத்தில், கழனியில் அரும்பாடுபட்டு உழைத்துக் கிடைத்த பணத்தில் என் அம்மா என்னைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்து ஆளாக்கிச் சென்னைக்கு அனுப்பினார். சென்னை வந்து நான் ஓவியனாகவும் பின்னர் திரையுலகில் ஒழுக்கமும் கடமையும் தவறாத நடிகனாக உயர முடிந்தது என்றால் அதில் என் தாய், சகோதரியின் தியாகத்துக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு என் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையதாக…
Read More