சூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது பரோட்டா தான் ’வெண்ணிலாக் கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த அவர் நடித்து வந்தப் படங்களின் காமெடி அனைத்தும் சூப்பர் ஹிட். இதனால இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிசி நடிகராக மாறிவிட்டார் சூரி தற்போதய தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவிற்கு நிகராகவேப் படம் முழுக்க நடிக்க வைக்கின்றனர்.
இந்த நிலையில் சினிமாவில் தான் அடியெடுத்து வைத்து இருபது வருடம் ஆகிவிட்டதையும் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இதுநாள் வரை இருந்துவரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சூரி பழைய நினைவுகளை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்..
அப்போது. லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஜி’ படத்தில் இரண்டு காட்சிகளில் தான் நடித்ததாகவும், அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவரின் அடியாளாக நடித்த சூரி, படப்பிடிப்பில் ஒரு காட்சியின்போது அஜித்தை கலாய்த்ததாகவும் கூறினார். ; ஒரு பெரிய ஹீரோவான அஜித் தன்னை கலாய்த்ததை சாதாரண எடுத்து கொண்டு தன்னுடைய நடிப்பை பாராட்டியதாகவும், லிங்குசாமி அப்போதே தன்னை ‘நீ பெரிய ஆளாக வருவாய்’ என்று வாழ்த்தியதாகவும் கூறினார் மேலும் சினிமாவில் இன்று வெற்றிகரமாக இருப்பதற்கு சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன் தான் காரணம் என்றும் அவரை தான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ என்றும் கூறினார்.
அத்துடன் தான் சினிமாவுக்கு வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த காலத்தில் சென்னையில் தான் வசித்துவந்த தெருவில் விசேஷ நாட்களில் நாடகம் போட்ட கதையையும் கூறினார்.. அந்த நேரத்தில் வீரப்பன் விவகாரம் பரபரப்பாக இருந்ததால், தான் எழுதிய நாடகம் ஒன்றில் தற்கொலைக்கு முயலும் நான்கு இளைஞர்கள், அதற்குமுன் நாட்டின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பவேண்டும் என்பதற்காக ஒரு ஆளை கடத்த திட்டமிடுவார்களாம்.. அவர்கள் அப்படி கடத்த திட்டமிட்டது யாரை தெரியுமா..? கடத்தல் மன்னன் வீரப்பனைத்தான்.
ஆனால் அதை ஸ்கிரிப்ட்டில் மாரப்பன் என மாற்றிவிட்டாராம் சூரி.. மாரப்பனை கடத்தி வந்தபின், அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள் வைப்பதாக நாடகம் போகுமாம். அந்த நாடகம் நடத்தி முடிந்ததும், அதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் சூரியை நெருங்கி அவரிடம் 400 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து பாராட்டி சென்றாராம்.. அதுதான் நடிப்பிற்காக தான் வாங்கிய முதல் ஊதியம் என கூறி நெகிழ்ந்தார் சூரி.
மேலும் சினிமாவில் இன்று வெற்றிகரமாக இருப்பதற்கு சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன் தான் காரணம் என்றும் அவரை தான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ என்றும் கூறினார். அத்துடன் ‘காமெடியில் என் ரோல் மாடல் என் அப்பா தான். அவர் தான் எனது ரோல் மாடல், எனது ஹீரோ எல்லாமே. அவர் செய்யும் காமெடியில் நான் பத்து சதவீதம் தான் செய்கிறேன் என்று எனது ஊர் மக்கள் சொல்கிறார்கள். அவரிடம் இருந்த காமெடியில் ஐம்பது சதவீதம் செய்தாலே, நான் பெரிய ஆளாகிவிடுவேன் என்றும் சொல்கிறார்கள்’ என்றார்.
மேலும், “ நான் நடித்த படங்களில் என் மனைவிக்கு பிடித்தது வெண்ணிலா கபடி குழுதான், ஆனால என் குழந்தைகளுக்கு பிடித்தது அரண்மணை 2தான். எனக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. வரவும் மாட்டேங்குது. காமெடியில் இன்னும் செய்ய வேண்டியதே அதிகமாக இருக்கிறது. அதை தான் செய்ய தோன்றுகிறது” என்றார்.