“நோ ஒன் கேன் ரீபிளேஸ் டி.எஸ்.பாலையா!

கோலிவு-ட்டுன்னு இப்ப ஷார்ட்டா சொல்ற நம்ம தமிழ்த் திரையில் உலகத்தரமான நடிகர்களுக்கு இடமிருக்கிறதா? கண்டிப்பாக இருக்கிறது. அந்தப் பட்டியலில் இடம்பெறும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் “நோ ஒன் கேன் ரீபிளேஸ் பாலையா” என்று 85 வயது வயது நிரம்பிய முதியவராக கடந்த 1990ஆம் சென்னை வந்தபோது தமிழ்சினிமாவின் முதுபெரும் இயக்குநர் எல்லிஸ் ஆர் டங்கன் சொன்னார். அவர் இயக்கிய வேறு எந்த நட்சத்திரத்துக்கும் இந்தப் பெருமையை அவர் கொடுக்கவில்லை.

யார் இந்த பாலையா? என்ற கேள்விக்கு நம்ம கட்டிங் கண்ணையா வழங்கிய பேப்பர் கட்டிங்கில் இடம் பெற்ற கொஞ்சம் விரிவான ஆனால சுவையான தகவல் இது – இன்று வடிவேலு, கவுண்ட மணி, சந்தானம், சூரி நகைச்சுவை இணையாக டி.எஸ்.பாலையாவின் நகைச்சுவை காட்சிகள் தமிழ்தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருவதே அவர் காலம் கடந்த கலைஞர் என்பதற்கு சாட்சி. அவரது வாழ்க்கை இன்றைய தூத்துக்குடி மாவட்டம் சுண்டாங்கோட்டை என்ற சின்ன கிராமத்திலிருந்து தொடங்குகிறது. ஆம் அங்குதான் ஆகஸ்ட் 23ஆம் தேதி 1914ஆம் ஆண்டு பிறந்தார்.

40 ஆண்டுகள் சாதனை வில்லனாகவும், பிறகு நகைச்சுவை வில்லனாகவும் கலங்க வைக்கும் குணச்சித்திர வேடங்களிலும் சுமார் 40 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்தவர். மதுரை ‘பால மொஹன சபா’ நாடகக் குழுவில் 15 வயது சிறுவனாக நடிக்க ஆரம்பித்தவர். பிறகு எல்லீஸ் ஆர். டங்கன் தமிழில் இயக்கிய முதல் படமான “சதிலீலாவதி” படத்தில் அறிமுகமானார். அறிமுகப்படத்தி லேயே வில்லன்தான். எம்.ஜி.ஆருக்கும் இதுதான் அறிமுகப்படம். 1934இல் வெளிவந்த இந்தப் படத்தில் நடித்தபோது பாலையாவுக்கு 20 வயது. அம்பிகாபதி 1937ஆம் ஆண்டு, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த “அம்பிகாபதி” படத்தில், தளபதியாக (வில்லன்) டி.எஸ். பாலையா நடித்தார். ஆரம்ப காலத்தில் பாலையாவுக்கு புகழ் தேடித்தந்த படம் இது. இதில், பாகவதரும், பாலையாவும் கத்திச்சண்டை போடுவார்கள்! 1940ஆம் ஆண்டு முதல், பி.யு.சின்னப்பா புகழ் பெற்று விளங்கினார். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் பாலையாதான் வில்லன் கதாநாயகன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலும் டி.எஸ்.பாலையா தொடர்ந்து இடம் பெற்றார். உலகப்போரை பின்னணியாக வைத்து, மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் “சித்ரா” என்ற படத்தைத் தயாரித்தார். அதில் டி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகி கே.எல்.வி.வசந்தா. பாலையா கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் “வெறும் பேச்சல்ல”. 1956இல் வெளியான இப்படத்தில் பாலையா “கௌவ்பாய்” வேடத்தில் வருவார். அவருக்கு ஜோடி பத்மினி! ஆச்சரியமாக இருக்கிற தல்லவா?

அறிஞர் அண்ணா கதை – வசனம் எழுதிய “வேலைக்காரி” படத்தில், கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி யின் நண்பனாக, முக்கிய வேடத்தில் பாலையா நடித்தார். அண்ணாவின் “ஓர் இரவு” படத்தில் வில்லனாக நடித்தார். ஏவி.எம். தயாரித்த படம் இது. எம்.ஜி.ஆருடன் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் “ராஜகுமாரி.” ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில், வில்லனாக பாலையா நடித்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆரும், பாலையாவும் போட்ட கத்திச்சண்டை மிகப்பிரபலம். தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களிலும், சிவாஜிகணேசன் படங்களிலும் வில்லனாக நடித்தார்.

இதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவற்றில் பெரும்பாலானவை நகைச்சுவை கலந்தவை. ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை படமான “காதலிக்க நேரமில்லை” பாலையாவின் சிறந்த நகைச்சுவை நடிப்புக்கு எடுத்துக்காட்டு. இப்படத்தில், ஒரு திகில் கதையை நாகேஷ் கூற, அப்போது பாலையா காட்டும் முகபாவம் எவரும் மறக்க முடியாத ஒன்று. “திருவிளையாடல்” படத்தில் வடநாட்டு பாகவதராக வந்து, “ஒரு நாள் போதுமா…!” என்று பாடி, ரசிகர்களைக் கவர்ந்தார். “தில்லானா மோகனாம்பாள்” படத்தில் தவில் வித்துவானாக நடித்தார். பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த பாலையா, 40 ஆண்டுகளில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார்.

பிரசன்னா படங்களில் நடனம் மட்டுமே ஆடிவந்த லலிதா – பத்மினி சகோதரிகள், முதன் முதலாக “பிரசன்னா” என்ற மலையாள படத்தில் கதாபாத்திரம் ஏற்று நடித்தனர். பட்சிராஜா தயாரித்த இப்படத்தின் கதாநாயகன் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது. ம் டி.எஸ்.பாலையாவின் குடும்பம் மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி பெயர் பத்மாவதி. இவருக்கு சாய்பாபா, அரவிந்தன், சோனையா, ரகுராம், கணேஷ் ஆகிய 5 மகன்கள். துர்க்கா, தேவி என்ற 2 மகள். 2ஆவது மனைவி பெயர் லீலா (இவர் டி.எஸ்.பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.) அம்புஜம், பொன்னி, சிவகாமி, ரமா என்ற 4 மகள்கள். நாகராஜன், முனிபாலன் என்ற 2 மகன்கள். 3ஆவது மனைவி பெயர் நவநீதம். இவர் நடிகை சந்திரகாந்தாவின் அக்காள். இவருக்கு மனோகரி என்ற மகள். 61 வயதில் மரணம் சென்னை தி.நகரில் வசித்து வந்த டி.எஸ்.பாலையாவுக்கு, 61 வயது நிரம்பியபோது உடல்நிலை பாதிக்கப்பட்டு இதே நாளில் காலமானார்!