கார்த்திக் + கெளதம் கார்த்திக் இணைந்து வழங்க போகும் ‘ மிஸ்டர் சந்திரமெளலி’

மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி நடிப்பில் தயாரான மௌனராகம் படம் இன்றளவும் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும் பொழுதும் பலரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது என்று சொல்வது மிகையல்ல . காரணம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை. அதிலும் கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமெளலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஒற்றை வார்த்தையையே தற்போது தயாராகப் போகும் ஒரு தமிழ்ச் சினிமாவின் தலைப்பாகவே வைத்திருக்கிறார்கள் என்பதும் அந்த நேமை உச்சரித்த அதே நாயகன் கார்த்திக்கை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் என்பது இன்னும் சிறப்பான விஷயம். இதில் அடிசினல் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் இதில் ஸ்பெஷல் ரோல் என்பதுதான் .

ஆம்.. வளந்து ஓயெது விட்ட நடிகர் கார்த்திக்கும் அவரது வளரும் மகன் கௌதம் கார்த்திக்கும்தான் இந்தப் படத்தில் இணைந்து நடிக்க போகிறார்கள்..மேலும் பாப்டா திரைப்படக் கல்லூரியின் நிறுவனரும், தயாரிப்பாளருமான தனஞ்செயன் தனது ‘Creative Entertainers and Distributors’ என்ற நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார். இயக்குநர் திரு இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த அப்பா- புள்ளையுடன் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கேஸான்ட்ரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த செய்தி இப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பையும், பலத்தையும் கூட்டியுள்ளது. அதை விட ஸ்பெஷல் என்னவென்றால் ஒரு முக்கியமான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளார். இதை எல்லாம் மிஞ்சும் விதத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் மகேந்திரனும், அகத்தியனும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். நடிகர் சதீஷ் தனது பாணி காமெடியில் அசத்த தயாராகி உள்ளார். ஆக இந்த மெகா கூட்டணி ரசிகர்களை ஒரு விருந்தாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநர் திரு பேசுகையில், “இந்தப் படத்தின் நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவெலுக்கு கொண்டு போயுள்ளது. இயக்குநர் மகேந்திரன் சார், கார்த்திக் சார் மற்றும் அகத்தியன் சார் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது. பல மடங்கு கூடியுள்ள எனது பொறுப்பை நான் நன்கு அறிவேன்.

படத்தின் தலைப்பே எங்களுக்கு ஒரு பெரும் பலமாகியுள்ளது. இந்த எல்லா விஷயங்களின் சங்கம்மும், இந்தப் படத்தை மிகப் பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கியுள்ளது…” என நம்பிக்கையோடு தெரிவித்தார்.

ஆல் த பெஸ்ட் டீம்..