15
Sep
தமிழ் சினிமாவை மண் மணம் வீசும் கிராமத்து வாழ்வியலுக்கு எடுத்து சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் சகாப்தம் தொடங்கிய 16 வயதினிலே திரைப்படம் இன்றுடன் வெளியாகி 47 ஆண்டுகள் ஆகுது. கோலிவுட்டில் முதன் முதலில் என்ற வார்த்தையை பல்வேறு விஷயங்களில் செஞ்சு காட்டிய படம்தான் 16 வயதினிலே. அந்தக் காலத்துலே நம் தமிழ் சினிமாக்கள் அம்புட்டு, ஷூட்டிங்கும் அரங்குகளிலேயே எடுக்கப்பட்டு வந்துச்சு. அப்பாலே அந்த அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முறையாக முழுப்படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்றால், அது 16 வயதினிலேதான்.இது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரமிப்பா பேசப்பட்டுச்சு. ‘இதெப்படி இருக்கு?’ என்று காட்சிக்குக் காட்சி இவர் சொல்லும் வசனம்... பஞ்ச் வசனம்... ரஜினி பஞ்ச் வசனம் பேசிய வகையிலும் முதல்படம். ஸ்ரீதேவி அப்படியொரு அழகு தேவதையாக நாயகியானதும் இதுவே முதல் படம். எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகையாக இருந்தாலும் காந்திமதிக்கு அப்படியொரு நடிகையாகக் கிடைத்த…