’பெளத்தம் ஓ கே.. ஆனால் நோ கடவுள்’! – அக்‌ஷராஹாசன் விளக்கம்!

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள ‘விவேகம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அக்‌ஷரா ஹாசன். அப்படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக அவர் அளித்த பேட்டியில் கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விக்கு, “கடவுள் நம்பிக்கை விஷயத்தில் நானும் அப்பா மாதிரிதான். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன்” என்றார்.

 மேலும் அவர், “என் அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அளவுக்கு நான் கடவுள் பற்றி யோசிப்பதில்லை. எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்விய லோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்கள் கற்றுவருகிறேன். அதனால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன்” என்றார்.

இதையடுத்து அக்‌ஷரா ஹாசன் பெளத்த மதத்தை தழுவி விட்டார் என்று செய்திகள் பரவின. உடனே கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாய் அக்‌ஷு, நீ மதம் மாறிவிட்டாயா? நீ மாறியிருந்தா லும் எனக்கு உன்னைப் பிடிக்கும். அன்பு மதம் போல அல்ல. அது நிபந்தனையற்றது. வாழ்க்கையைக் கொண்டாடு” என்றார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அக்‌ஷரா ஹாசன், “அப்பா, நான் இன்னும் கடவுள் நம்பிக்கை இல்லாதவள்தான். ஆனால் நான் பௌத்தத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், அது ஒரு வாழ்க்கை முறை” என்று பதிலளித்துள்ளார்.