ச்சிச்சீ.. இந்த கமல் வேஸ்ட்! – நடிகர் ரித்திஷ் ரியாக்‌ஷன்!

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களும் கமலஹாசனை விமர்சித்து உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கண்டன சுவரொட்டிகளை ரசிகர்கள் ஒட்டி வருகிறார்கள்.

மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன.அதில், “தோற்றால் போராளி, முடிவெடுத்தால் முதல்வர். இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூபம் ஆட்டம் ஆரம்பம்” என்றும், “எங்களின் முதல்வா, தமிழகம் தலை நிமிர வா…வா…, எம் தலைவன் அல்ல கோழை. தலைவனை தவறாக பேசும் முட்டாள் அரசியல்வாதிகளே நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை” என்றும் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் பத்திரிகையாளர்களிடம், “தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கடுமையாக விமர்சித்து வரும் கமல்ஹாசன் முதலில் தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும். கமல் சின்ன வயதிலிருந்தே நடித்து கொண்டிருக்கலாம். வெவ்வேறு வேடங்களும் நடித்திருக்கலாம். ஆனால் அவரை நம்பி படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை என்பது தான் உண்மை. ஒரு தயாரிப்பா ளருக்கு லாபம் சம்பாதித்து கொடுக்கும் அளவுக்கு அவருடைய படங்கள் ஓடுவது இல்லை.

ரஜினி, அஜீத், சிவகார்த்திகேயன் போன்றவர்களை தயாரிப்பாளர்கள் தேடி ஓடுகிறார்கள். கமலைத் தேடி எந்த தயாரிப்பாளரும் செல்வதில்லை. எந்த அமைச்சரும் தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். தன்னிடம் ஆதாரம் இருந்தால் தாராளமாக முதல் வரை சந்தித்து கமல் கொடுக்கலாம். அதை விடுத்து டுவிட்டரில் கொடு, வாட்ஸ்-அப்பில் கொடு என்று மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை.”என்று அவர் கூறியுள்ளார்.

உடன் இருந்த நடிகர் வராகி கூறுகையில், “நடிகர் சங்கத்தில் 20 கோடி ரூபாய் முறைகேடு நடந்து  உள்ளது. அதில் கார்த்தி, விஷால், நாசர் மற்றும் கமலுக்கு பங்கு உண்டு. அது குறித்து ஆதாரத்துடன்  புகார் கொடுத்துள்ளேன். முதலில் அதற்கு கமல் பதில் கூறட்டும். பின்னர் ஊழல் பற்றி அவர் பேசலாம். கமல்ஹாசன் எந்த ஆதாரமும் கொடுக்காமல் அமைச்சர்கள் பற்றி ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். நீட் தேர்வு குறித்து மத்திய அரசை அல்லவா அவர் கேட்க வேண்டும். மத்திய அரசு ஆளும் மாநிலங்களின் ஊழல் குற்றச்சாட்டு பற்றி அவர் வாய் திறக்கவில்லையே” என்றார்.