எப்படி இருக்கு இந்த வாய்தா?

எப்படி இருக்கு இந்த வாய்தா?

வாய்தா விமர்சனம் : நடிகர்கள்: மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் மற்றும் பலர்
எழுத்து &; இயக்கம்: மதிவர்மன்
இசை: லோகேஸ்வரன்
ஒளிப்பதிவு: சேது முருகவேல்
படத்தொகுப்பு: நரேஷ் குணசீலன்
தயாரிப்பு: கே வினோத் குமார் கதைக்களம்.. ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் ஒரு விபத்து நடக்கிறது. சாலை ஓரம் அயர்னிங் கடை போட்டு நடத்தி வருகிற பெரியவர் மு ராமசாமிக்கு அடி படுகிறது. இதை சுற்றி மேல் ஜாதிக்காரர் இருவர் கோர்ட் வழக்கு வரை சென்று சண்டையிடுகிறார்கள் இதில் அந்த எளியவர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதே கதை. ஒரு சிறு பைக் விபத்து அதை சுற்றி சுழலும் கதை அதில் நம் சமூக அமைப்பையும், ஏழை மக்களின் வாழ்வியலையும், கோர்ட் நடவடிக்கைகளையும் தத் ரூபமாக எடுத்துள்ளார்கள். பைக் பெரியவர் மீது மோதிவிட்டு பைக்காரன் பயத்தில் ஓடிவிடுகிறான். இதனால் பெரியவரின் பையன் வண்டியை தன் வீட்டுக்குள் எடுத்து வைத்து பூட்டி விடுகிறான். பைக்காரன்…
Read More
இந்த போத்தனூர் தபால்நிலையம் வேலை செய்யுதா?

இந்த போத்தனூர் தபால்நிலையம் வேலை செய்யுதா?

போத்தனூர் தபால்நிலையம்   நடிகர்கள்: பிரவீன் அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே) எழுத்து & இயக்கம்: பிரவீன் தயாரிப்பு: பேசன் ஸ்டூடியோஸ் ஒடிடி: ஆஹா தபால்நிலையத்திற்கு சொந்தமான மக்கள் பணம் காணாமல் போகிறது. அதனை கண்டுபிடிக்க அந்த தபால்நிலைய அதிகாரி உடைய மகன் முயற்சி செய்கிறான். அவன் அந்த பணத்தை ஒருநாளுக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவனது அப்பா சிறை செல்வார். இது தான் கதை. 90களில் நடக்கும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது, அதற்கான கலையமைப்பு, அதற்கெடுத்த மெனக்கெடல்கள் படத்தில் தெரிகிறது. 90களின் காலகட்டம் ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் இவ்வளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது பாராட்டுதலுக்கு உரியது. படத்தின் முக்கியமான சிக்கலே படத்தின் தொய்வு தான். கதைக்கே இடைவேளைக்கு தான் வருகிறார்கள். முதல் பாதி காட்சிகள் தேவையில்லாத ஒன்றை போல் சோர்வை அளிக்கிறது. அது மட்டும் இல்லாமல் அடுத்து அடுத்து நகரும் காட்சிகளில் சுவாரஷ்யம்…
Read More
சேத்துமான் அப்படினா என்ன?

சேத்துமான் அப்படினா என்ன?

சேத்துமான் இயக்கம் : தமிழ் கதை : ‘வறுகறி’ - பெருமாள் முருகன் சிறுகதை இசை பிந்து மாலினி கேமரா - பிரதீப் காளிராஜ்   சேத்துமான் என தெரியப்படும் பன்றியை சமைத்து சாப்பிட சிலர் விருப்பபட அது எவ்வளவு பெரிய பிரச்சனையில் போய் முடிகிறது என்பது தான் கதை. உணவு அரசியலை பற்றி பேசிய முக்கியமான படங்களில் சேத்துமான் திரைப்படமும் ஒன்று. ஒரு பன்றி கறியை சாப்பிட எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது என்பதை காட்சிகள் மூலமாக விவரிக்க முயற்சி செய்துள்ளனர். அது பாராட்டுதலுக்கு உரியதே. பார்வையாளர்களும் பன்றி கறி மீதான அனுபவத்தை இந்த படம் மூலமாக தான் உணருவார்கள் என்னும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுயாதீன திரைப்பட உருவாக்குதல் முயற்சியில் இந்த சேத்துமான் உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன திரைப்படங்களின் வரவு என்பது ஒவ்வொரு மொழிகளிலும் தேவையான ஒன்று. அது தான் அந்த மொழி மக்களின் நுட்பமான வாழ்வியல் முறையை…
Read More
எப்படி இருக்கு டாப் கன்?

எப்படி இருக்கு டாப் கன்?

மற்ற நாடுகளை அழிக்கும் விதமான அணுசக்தி ஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளது ஒரு நாடு, அதனை அழிக்க ஒரு குழுவை அனுப்ப முடிவெடுக்கிறது ராணுவம், அந்த குழுவை தயார்படுத்த நியமிக்கபடுகிறார் ஹீரோ, அந்த வேலையை முடிக்கும் பொழுது எப்படியும் சில உயிர் பழி நிகழும், அந்த உயிர் பழி நிகழாமல் அந்த பணியை முடிக்க முயற்சிக்கிறார் ஹீரோ. சரியாக 36 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ள இந்த இரண்டாம் பாகம், முதல் பாகத்திற்கான நியாயத்தை சேர்த்திருக்கிறதா என்று பார்த்தால், நிச்சயம் சேர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும். திரைக்கதையின் நேர்த்தி தான் படத்தை 36 வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் வந்தாலும் அது உயிர்ப்புடன் அமைய காரணம். படத்தின் மிகப்பெரிய பலம் டாம் க்ரூஸ் தான். அவருடைய நடிப்பும், படத்தில் அவருடைய பங்கும் சரி பாராட்டுதலுக்குரியது. போர் விமான காட்சிகளையும், அதன் சிக்கல்களையும் சாதாரண மக்களுடைய புரிதலுக்கு கொண்டு வர, கதையின் அழுத்தத்தை மக்கள்…
Read More
ஒரிஜினலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறதா நெஞ்சுக்கு நீதி…..

ஒரிஜினலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறதா நெஞ்சுக்கு நீதி…..

  உதயநிதி நடிப்பில், அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில், ஆர்டிகள் 15 என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 29 அம்று வெளியாகியுள்ளது. இரு சிறுமிகள் தூக்கில் தொங்குகிறார்கள், அவர்களது தோழி ஒருத்தரை காணவில்லை, இவர்களுக்கு என்ன ஆனது, ஜாதிய காரணங்களால் இவர்களுக்கு நிகழ்ந்த அநீதி என்ன, என்பதை விசாரிக்க முயற்சிக்கும் ஒரு காவல் அதிகாரி இதுவே கதை கரு. ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது தமிழில் சற்று திணரும் ஒன்று தான், அதுவும் தேசிய விருது பெற்ற ஒரு திரைப்படம், ஜாதிய அடக்குமுறைகளை பற்றி பேசிய படம் இப்படி பல அடுக்கடுக்கான காரணிகளை தாண்டி உருவாகி இருக்கிறது நெஞ்சுக்கு நீதி. ஒரிஜினல் பதிப்பிற்கு சற்றும் சமரசம் இல்லாத நேர்மையான ஒரு படத்தை வழங்கியுள்ளனர் படக்குழு. தமிழ் நிலப்பரப்பிற்காக மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதையும், காட்சிகளும் படத்தி அந்நியமாக்காமல் பார்வையாளர்களை இழுத்து பிடித்தி உட்கார வைத்துள்ளது. இயக்குனர் அருண்…
Read More
ரங்கா திரை விமர்சனம்

ரங்கா திரை விமர்சனம்

நடிகர்கள்: சிபிராஜ், நிகிலா விமல், மோனிஷ் ரகேஜா, சதிஷ், தயாரிப்பு: Boss Movies இயக்குனர்: DL வினோத் இசையமைப்பாளர்: ராம் ஜீவன் ஏலியன் ஹாண்ட் சிண்ட்றோம் என்ற வியாதி இருக்கும் ஒருவனுக்கு திருமணம் ஆகி, வெளியூர் செல்லும் போது, அங்கு தம்பதிகளின் அந்தரங்களை ரகசியமாய் வீடியோ எடுக்கும் கும்பலிடம் மாட்டினால், அவனும், அவன் பேச்சை கேட்காத அந்த கையும் என்ன செய்யும் என்பதே கதை. கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் ஒன்லைனை நம்பி அமைக்கப்பட்ட கதையும், திரைக்கதையும் சொதப்பல் தான். சோர்வடைய வைக்கும் திரைக்கதை படம் பார்ப்பதற்கான சுவாரஷ்யத்தை தரவில்லை. ஒவ்வொரு காட்சியும், அடுத்த காட்சிக்கு தொடர்பில்லாதது போல் தனியாக தொங்குகிறது. முதல் பாதி பொழுதுபோக்காகவும், இரண்டாம் பாதி சீரியசாகவும் இருக்க வேண்டும் என்ற ஐடியா சூப்பராக இருந்தாலும், அதற்கேற்ற திரைக்கதையை அமைக்காதது படத்தின் பலவீனம். படத்தில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், எல்லா பாடல்களுக்கும் ஏற்கனவே வேறு படங்களில் கேட்ட பாடல்களை…
Read More
டான் திரைப்பட விமர்சனம்

டான் திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, RJ விஜய், பால சரவணன், முனீஸ்காந்த், காளி வெங்கட், சிவாங்கி தயாரிப்பு: லைகா புரொடக்‌ஷன், SK புரொடக்‌ஷன் இயக்குனர்: சிபி சக்ரவர்த்தி இசையமைப்பாளர்: அனிருத் ஒளிப்பதிவு: KM பாஸ்கரன் படத்தொகுப்பு: நாகூரான் ராமசந்திரன் கல்லூரியில் யாருக்கும் அடங்காமல் தன் போக்கில் டானாக சுற்றி கொண்டிருக்கும் ஒருவன், தன்னை எப்படி கண்டுணர்ந்தான் என்பதே கதை. படத்தின் மொத்த பலமும் சிவகார்த்திகேயன் தான். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தனது திரை ஆளுமையால் படத்தை கட்டி இழுத்துள்ளார். காமெடி, செண்டிமெண்ட், காதல் என மூன்றும் கலந்து அமைந்த திரைக்கதையில் ஹீரோவுடைய பங்கு மிகவும் முக்கியமானது. இவை அனைத்தையும் தேவையான இடத்தில் தேவையான அளவு வழங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் கமர்சியல் பார்முலா மறைந்து போய், வேறு பக்கம் திசை திரும்பியிருந்த படங்களுக்கு மத்தியில், மீண்டும் ஒரு முழுக்க முழுக்க கமர்சியல் எலமெண்ட்க்குகளை அள்ளி…
Read More
ஐங்கரன் படம் எப்படி இருக்கு

ஐங்கரன் படம் எப்படி இருக்கு

ஐங்கரன் திரைப்பட விமர்சனம் இயக்குநர் - ரவி அரசு நடிகர்கள் - ஜீவி பிரகாஷ், ஆடுகளம் நரேன், மஹிமா நம்பியார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க, ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கும் பட்டதாரி இளைஞன், அவனை சுற்றி நிகழும் பிரச்சனைகள் இது தான் ஐங்கரன் கதை. எப்போதும் ஒரு ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் அதை சுற்றிய திரைக்கதையும் அதை சொல்லும் விதமும் தான் தமிழ் சினிமாவில் பிரச்சனையாக இருக்கிறது. நாயகனை சுற்றி கதை அமைக்க வேண்டிய அவசியமும் அதற்காக நாயகன் பல பராக்கிரம்ங்கள் புரிவதும் தான் பிரச்சனை. சமூகத்தில் நிகழும் பிரச்சனையை மையமாக வைத்து, அதனை சுற்றி அமைக்கபட்ட திரைக்கதை, படத்தின் மீதான் சுவராஸ்யத்தை கூட்டுகிறது. ஆனால் சுற்றி சுழன்றடிக்கும் திரைக்கதை இதில் பெரும் பிரச்சனையாகிறது உண்மையில் படம் இடைவேளைக்கு பிறகே ஆரம்பிக்கிறது நகைக்கடைகளை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், பட்டதாரி இளைஞனுக்கும் ஒரு பண்ணை அதிபருக்கும் இடையே நிகழும் மோதல், நேர்மையான…
Read More
கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

  இயக்கம்: சபரி, சரவணன் இசை: ஜிப்ரான் நடிகர்கள்: கே எஸ் ரவிக்குமார், தர்ஷன், லோஸ்லியா, யோகிபாபு, பூவையார் கூகுள் குட்டப்பா வயதான தன் தந்தையை பார்த்துகொள்ள ரோபோவை பணியமர்த்தும் மகன், ரோபோவை மகனாக பாவிக்கும் தந்தை இவர்களுக்கிடையே நிகழும் சம்பவங்கள் தான் கதை. மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பா. மலையாளத்தில் ஏற்படுத்திய பாதிப்பை தமிழ் பதிப்பு ஏற்படுத்தவில்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோடியாக நடித்துள்ள தர்ஷன் மற்றும் லோஸ்லியா உடைய நடிப்பு ஈர்க்கும் படியில்லை. அவர்களுக்கிடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் சரி, உரையாடல் காட்சிகளும் சரி பாதிப்பை ஏற்படுத்தாமல் காட்சியை தொய்வுபடுத்துகிறது. படத்திற்கு ஆறுதலான இரு விஷயங்களில் ஒன்று கே எஸ் ரவிகுமார் நடிப்பு. தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுக்க, தனது முழு பங்கையும் அளித்துள்ளார். மற்றொன்று இசை, படத்தில் இரு பாடல்கள் கேட்கும் படி உள்ளது. மற்றபடி…
Read More
கோர்டு டிராமாவாக உருவாகியுள்ள “வாய்தா” திரைப்பட விமர்சனம்!

கோர்டு டிராமாவாக உருவாகியுள்ள “வாய்தா” திரைப்பட விமர்சனம்!

  எழுத்து & இயக்கம்: மதிவர்மன் தயாரிப்பு: கே வினோத் குமார் இசை: லோகேஸ்வரன் ஒளிப்பதிவு: சேது முருகவேல் படதொகுப்பு: நரேஷ் குணசீலன் நடிகர்கள்: மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் ஒரு அப்பாவி முதியவர் மேல் ஒருவன் பைக்கால் மோதுகிறான்,  அது வழக்காய் பதியபடுகிறது. இந்த வழக்கு விசாரணையும், அதனை சுற்றி நிகழும் சம்பவங்களுமே திரைப்படம். முழுக்க புதுமுகங்களால் உருவாக்கபட்ட இந்த திரைப்படம், சமூகத்தில் இருக்கும் அவலங்களையும், ஏற்ற தாழ்வுகளையும், எளியவர்களிடமிருந்து நீதியும், நியாயமும் எப்படி பறிக்கபடுகிறது என்பதை கூற முயற்சிக்கிறது. ஜாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதும், இழிவு நிலைக்கு தள்ளபடுவதுமாய் ஒரு சமூகம் இருக்கிறது. அந்த சமூகத்திற்கு ஏற்படும் அநீதிகளுக்கு நீதிமன்றத்தில் கூட நியாயம் கிடைக்கவில்லை என்ற சமூக நடப்பை ஆணித்தனமாக கூறுகிறது இந்த வாய்தா திரைப்படம். லோ பட்ஜெட் திரைப்படங்களுக்கே உண்டான சமரசங்களால் படத்தின் மேக்கிங்க் இருக்கிறது, முழுவதுமாய் திரை நேர்த்தி இல்லை. இதுபோன்ற குறைகள்…
Read More