இந்த போத்தனூர் தபால்நிலையம் வேலை செய்யுதா?

போத்தனூர் தபால்நிலையம்

 

நடிகர்கள்: பிரவீன் அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே)
எழுத்து & இயக்கம்: பிரவீன்
தயாரிப்பு: பேசன் ஸ்டூடியோஸ்
ஒடிடி: ஆஹா

தபால்நிலையத்திற்கு சொந்தமான மக்கள் பணம் காணாமல் போகிறது. அதனை கண்டுபிடிக்க அந்த தபால்நிலைய அதிகாரி உடைய மகன் முயற்சி செய்கிறான். அவன் அந்த பணத்தை ஒருநாளுக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவனது அப்பா சிறை செல்வார். இது தான் கதை.

90களில் நடக்கும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது, அதற்கான கலையமைப்பு, அதற்கெடுத்த மெனக்கெடல்கள் படத்தில் தெரிகிறது. 90களின் காலகட்டம் ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் இவ்வளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது பாராட்டுதலுக்கு உரியது.

படத்தின் முக்கியமான சிக்கலே படத்தின் தொய்வு தான். கதைக்கே இடைவேளைக்கு தான் வருகிறார்கள். முதல் பாதி காட்சிகள் தேவையில்லாத ஒன்றை போல் சோர்வை அளிக்கிறது. அது மட்டும் இல்லாமல் அடுத்து அடுத்து நகரும் காட்சிகளில் சுவாரஷ்யம் இல்லை.

படத்தின் சுவாராஷ்யமே இரண்டாம் பாதி தான், ஒரு தபால்நிலைய கொள்ளை தான் படத்தின் மையக்கரு, அதனை சுற்றி நிகழும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அது சுவாரஷ்யமான ஒன்றாக தான் உள்ளது. சந்தேகபடும் நபர்களை தேடுவதும், அவர்களுக்கு பின்னால் இருக்கும் கதைகளையும் விவரித்து கொள்ளையுடன் அதனை இணைப்பது போன்று அமைக்கப்பட்ட திரைக்கதை நல்ல ஐடியா. ஆனால் திரைக்கதையில் இன்னும் மெனக்கெடவேண்டும். இழுத்து பிடித்து கட்டிவைப்பது போன்ற திரைக்கதை வேண்டும்.

படத்தில் வரும் பல கதாபாத்திரங்களுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் அமைத்திருந்தால் நிச்சயம் இது தமிழில் ஒரு முக்கியமான முழுநீள கொள்ளை திரைப்படமாக அமைந்திருக்கும். அதற்கான அனைத்து கூறுகளும் இந்த படத்தில் உள்ளது.

நேரம் இருந்தால், ஒருமுறை பார்க்ககூடிய ஒரு திரைப்படமாக வந்துள்ளது.