கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

 

இயக்கம்: சபரி, சரவணன்
இசை: ஜிப்ரான்

நடிகர்கள்: கே எஸ் ரவிக்குமார், தர்ஷன், லோஸ்லியா, யோகிபாபு, பூவையார்

கூகுள் குட்டப்பா

வயதான தன் தந்தையை பார்த்துகொள்ள ரோபோவை பணியமர்த்தும் மகன், ரோபோவை மகனாக பாவிக்கும் தந்தை இவர்களுக்கிடையே நிகழும் சம்பவங்கள் தான் கதை.

மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பா.

மலையாளத்தில் ஏற்படுத்திய பாதிப்பை தமிழ் பதிப்பு ஏற்படுத்தவில்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோடியாக நடித்துள்ள தர்ஷன் மற்றும் லோஸ்லியா உடைய நடிப்பு ஈர்க்கும் படியில்லை. அவர்களுக்கிடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் சரி, உரையாடல் காட்சிகளும் சரி பாதிப்பை ஏற்படுத்தாமல் காட்சியை தொய்வுபடுத்துகிறது.

படத்திற்கு ஆறுதலான இரு விஷயங்களில் ஒன்று கே எஸ் ரவிகுமார் நடிப்பு. தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுக்க, தனது முழு பங்கையும் அளித்துள்ளார். மற்றொன்று இசை, படத்தில் இரு பாடல்கள் கேட்கும் படி உள்ளது. மற்றபடி பிண்ணனி இசையெல்லாம் ஓகே ரகம் தான்.

மலையாளத்தில் காட்சிகள் மூலமாகவும், கதாபாத்திரங்களின் நடிப்பு மூலமாகவும், திரை அழகியல் மூலமாகவும் ரசிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்த படம், தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் ரகம் என்று கூற ஒன்றுமில்லை.

கூகுள் குட்டப்பா சரியாக ஷோபிக்கவில்லை.