ஐங்கரன் படம் எப்படி இருக்கு

ஐங்கரன் திரைப்பட விமர்சனம்

இயக்குநர் – ரவி அரசு
நடிகர்கள் – ஜீவி பிரகாஷ், ஆடுகளம்
நரேன், மஹிமா நம்பியார்.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க, ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கும் பட்டதாரி இளைஞன், அவனை சுற்றி நிகழும் பிரச்சனைகள் இது தான் ஐங்கரன் கதை.

எப்போதும் ஒரு ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் அதை சுற்றிய திரைக்கதையும் அதை சொல்லும் விதமும் தான் தமிழ் சினிமாவில் பிரச்சனையாக இருக்கிறது.

நாயகனை சுற்றி கதை அமைக்க வேண்டிய அவசியமும் அதற்காக நாயகன் பல பராக்கிரம்ங்கள் புரிவதும் தான் பிரச்சனை.

சமூகத்தில் நிகழும் பிரச்சனையை மையமாக வைத்து, அதனை சுற்றி அமைக்கபட்ட திரைக்கதை, படத்தின் மீதான் சுவராஸ்யத்தை கூட்டுகிறது. ஆனால் சுற்றி சுழன்றடிக்கும் திரைக்கதை இதில் பெரும் பிரச்சனையாகிறது உண்மையில் படம் இடைவேளைக்கு பிறகே ஆரம்பிக்கிறது

நகைக்கடைகளை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், பட்டதாரி இளைஞனுக்கும் ஒரு பண்ணை அதிபருக்கும் இடையே நிகழும் மோதல், நேர்மையான காவலாளிக்கும்-நேர்மையற்ற காவலாளிக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் என தனிதனியாய் பல கதைகள் பயணிக்கிறது. இந்த கதை ஒன்று சேரும் இடம் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை.

படத்தில் பட்டதாரி இளைஞனாக துள்ளல் நடிப்பை வழங்கி இருக்கிறார் ஜீவி பிரகாஷ், அவரது காதல் எபிஸோடுகள் படத்தில் ஒட்டவில்லை.

படத்தின் இரண்டாம் பாதியில் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்க எடுக்கும் முயற்சிகள் உண்மை சம்பங்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. பட்டதாரி விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு உரிமை பெற முடியாமல் எப்படி சிக்கலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை காட்ட முயல்கிறது இந்த படம்.

 

ஆடுகளம் நரேன் அப்பாவாக கவர்கிறார். மஹிமாவுக்கு பெரிய பாத்திரம் இல்லை. பல காட்சிகள் வெட்டப்படிருக்கலாம் போல் தெரிகிறது ஏனெனில் கதையில் அங்கங்கே தொடர்பு அறுந்து போகிறது. தனித்தனியே துண்டு துண்டாக பல படங்கள் பார்ப்பது போல் உள்ளது

ஒளிப்பதிவு இசை படத்திற்கு தேவையானதை கச்சிதமாக செய்துள்ளது. ஆழ்துளை கிணற்றில் இருந்து, பட்டதாரி விஞ்ஞானிகளின் அவமானங்கள் வரை அனைத்தையும் திரையில் வெளிச்சம் போட்டு காட்டிய விதத்தில் சமூக பொறுப்புள்ள படமாக மிளிர்கிறது ஐங்கரன்.