எப்படி இருக்கு டாப் கன்?

மற்ற நாடுகளை அழிக்கும் விதமான அணுசக்தி ஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளது ஒரு நாடு, அதனை அழிக்க ஒரு குழுவை அனுப்ப முடிவெடுக்கிறது ராணுவம், அந்த குழுவை தயார்படுத்த நியமிக்கபடுகிறார் ஹீரோ, அந்த வேலையை முடிக்கும் பொழுது எப்படியும் சில உயிர் பழி நிகழும், அந்த உயிர் பழி நிகழாமல் அந்த பணியை முடிக்க முயற்சிக்கிறார் ஹீரோ.

சரியாக 36 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ள இந்த இரண்டாம் பாகம், முதல் பாகத்திற்கான நியாயத்தை சேர்த்திருக்கிறதா என்று பார்த்தால், நிச்சயம் சேர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

திரைக்கதையின் நேர்த்தி தான் படத்தை 36 வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் வந்தாலும் அது உயிர்ப்புடன் அமைய காரணம்.

படத்தின் மிகப்பெரிய பலம் டாம் க்ரூஸ் தான். அவருடைய நடிப்பும், படத்தில் அவருடைய பங்கும் சரி பாராட்டுதலுக்குரியது.

போர் விமான காட்சிகளையும், அதன் சிக்கல்களையும் சாதாரண மக்களுடைய புரிதலுக்கு கொண்டு வர, கதையின் அழுத்தத்தை மக்கள் மனதில் விதைக்க படக்குழு படத்தை எடுத்த விதம் பாராட்டுதலுக்கு உரியது.

மேவரிக் என்ற கதாபாத்திரம் பலருக்கு பிடித்தமான கதாபாத்திரம், அதற்கு சரியான தொடர்ச்சி இந்த படத்தின் திரைக்கதையில் உள்ளது.

டாம் க்ரூஸ் தாண்டி, ரோஸ்டராக நடித்த மில்லர், பென்னி, பீனிக்ஸ் என அனைத்து கதாபாத்திரங்களும் அதற்குண்டான நியாயம் சேர்த்திருக்கின்றனர்.

கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு நாஸ்டாலஜிக் மெமரியாக இருக்கும்.