ஒரிஜினலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறதா நெஞ்சுக்கு நீதி…..

 

உதயநிதி நடிப்பில், அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில், ஆர்டிகள் 15 என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 29 அம்று வெளியாகியுள்ளது.

இரு சிறுமிகள் தூக்கில் தொங்குகிறார்கள், அவர்களது தோழி ஒருத்தரை காணவில்லை, இவர்களுக்கு என்ன ஆனது, ஜாதிய காரணங்களால் இவர்களுக்கு நிகழ்ந்த அநீதி என்ன, என்பதை விசாரிக்க முயற்சிக்கும் ஒரு காவல் அதிகாரி இதுவே கதை கரு.


ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது தமிழில் சற்று திணரும் ஒன்று தான், அதுவும் தேசிய விருது பெற்ற ஒரு திரைப்படம், ஜாதிய அடக்குமுறைகளை பற்றி பேசிய படம் இப்படி பல அடுக்கடுக்கான காரணிகளை தாண்டி உருவாகி இருக்கிறது நெஞ்சுக்கு நீதி. ஒரிஜினல் பதிப்பிற்கு சற்றும் சமரசம் இல்லாத நேர்மையான ஒரு படத்தை வழங்கியுள்ளனர் படக்குழு.

தமிழ் நிலப்பரப்பிற்காக மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதையும், காட்சிகளும் படத்தி அந்நியமாக்காமல் பார்வையாளர்களை இழுத்து பிடித்தி உட்கார வைத்துள்ளது. இயக்குனர் அருண் ஒரு நேர்த்தியான திரைக்கதையை, திறம்பட இயக்கி அளித்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்த நடிகர்கள் ஆகட்டும், தொழில்நுட்ப குழுக்கள் ஆகட்டும், சிறந்த பணியை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு காட்சியும், அடுத்த காட்சிக்கு நகரும் போது, பார்வையாளர்களை சிதறவிடாமல் கூட்டி அழைத்து செல்கிறது. அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என அனைவரது உழைப்பும் தான் காரணம்.

படத்தின் மிகப்பெரிய பலமே வசனங்கள் தான் ஒவ்வொரு வசனமும், அதற்கு கொடுக்கப்படும் கவுண்டர் வசனமும், அதிகாரத்திற்கும், அறியாமைக்கும் ஆன நேரடி தாக்குதலாக இருக்கிறது. உதயநிதி காவல் அதிகாரியாக பக்காவாக பொருந்தி இருக்கிறார். ரொம்பவும் சிக்கலான, அதிக உழைப்பு தேவைப்பட கூடிய இந்த கதைக்கும் உதயநிதியும், படக்குழுவும் முழுமையாக உழைத்துள்ளனர்.

பார்வையாளர்களுக்கு அறிவுரையும், ஒரிஜினல் பதிப்பிற்கு நியாயத்தையும் சேர்த்திருக்கிறது இந்த நெஞ்சுக்கு நீதி