நடிகர்கள்: சிபிராஜ், நிகிலா விமல், மோனிஷ் ரகேஜா, சதிஷ்,
தயாரிப்பு: Boss Movies
இயக்குனர்: DL வினோத்
இசையமைப்பாளர்: ராம் ஜீவன்
ஏலியன் ஹாண்ட் சிண்ட்றோம் என்ற வியாதி இருக்கும் ஒருவனுக்கு திருமணம் ஆகி, வெளியூர் செல்லும் போது, அங்கு தம்பதிகளின் அந்தரங்களை ரகசியமாய் வீடியோ எடுக்கும் கும்பலிடம் மாட்டினால், அவனும், அவன் பேச்சை கேட்காத அந்த கையும் என்ன செய்யும் என்பதே கதை.
கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் ஒன்லைனை நம்பி அமைக்கப்பட்ட கதையும், திரைக்கதையும் சொதப்பல் தான்.
சோர்வடைய வைக்கும் திரைக்கதை படம் பார்ப்பதற்கான சுவாரஷ்யத்தை தரவில்லை. ஒவ்வொரு காட்சியும், அடுத்த காட்சிக்கு தொடர்பில்லாதது போல் தனியாக தொங்குகிறது. முதல் பாதி பொழுதுபோக்காகவும், இரண்டாம் பாதி சீரியசாகவும் இருக்க வேண்டும் என்ற ஐடியா சூப்பராக இருந்தாலும், அதற்கேற்ற திரைக்கதையை அமைக்காதது படத்தின் பலவீனம்.
படத்தில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், எல்லா பாடல்களுக்கும் ஏற்கனவே வேறு படங்களில் கேட்ட பாடல்களை நியாபகபடுத்துவது போன்ற உணர்வை தருகிறது.
சதீஷ், மனோபாலா, ஷாரா என்ற மூன்று காமெடியன்களை வைத்து அமைக்கப்பட்ட ஒரு காட்சிக்கும் சிரிப்பு வரவில்லை, இரண்டாம் பாதியில் வில்லன் துரத்தும் போது பரபரப்பும் நமக்கிடையே ஏற்படவில்லை.
நடிகர்களும் வசனங்களை பேசுவது போன்றே உள்ளது, நடிப்பு யாரிடம் இருந்தும் வரவில்லை. பல காட்சிகள் எழுதி, சில காட்சிகள் மட்டுமே எடுக்கபட்டது போல், பாதி கதையை காணதது போன்ற உணர்வு இருக்கிறது. லாஜிக் இல்லாத பல காட்சிகளும், மேஜிக் இல்லாத திரைக்கதையும் படத்தை தொங்கலில் விட்டுவிட்டது.
சிபிராஜ் நிச்சயமாக சரியான திரைக்கதை அமைத்த கதையையும், அதற்கு தேவையான நடிப்பையும் தர முயற்சிக்க வேண்டும்.