மாதவன் உடைய ராக்கெட்ரி சரியாக ஏவப்பட்டதா?

மாதவன் உடைய ராக்கெட்ரி சரியாக ஏவப்பட்டதா?

‘ராக்கெட்ரி’ திரைப்படத்தையை மாதவன் எழுதி இயக்கி நடிப்பதோடு மட்டுமின்றி சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜித் பாலா படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, கடினமாகவும், பல தடைகளை தகர்ந்தெரிந்தும் ஓடிகொண்டிருக்கும் ஒரு விஞ்ஞானியை பொய் வழக்கு போட்டு, அவரது வாழ்கையையே முடிக்கிறார்கள். விண்வெளியில் தன் சாதனைகளை புரிய வேண்டிய அவர் தன் மீது உள்ள கலங்கத்தை துடைக்க ஓட வேண்டியுள்ளது அவர் மேல் இருக்கும் கலங்கத்தை அவர் துடைத்தாரா, இந்தியாவின் விண்வெளி கனவு என்ன ஆனது என்பது தான் கதை. முதலில் நம்பி நாராயணன் போன்ற விஞ்ஞானி பட்ட கஷ்டங்களையும், கொடுமைகளையும் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி எடுத்த மாதவனை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு உண்மை கதை என்பதாலும், நம்பி நாராயணன் போன்ற…
Read More
யானை ஹரியின் வழக்கமான மசாலா ஆனால் …!

யானை ஹரியின் வழக்கமான மசாலா ஆனால் …!

  யானை இயக்கம் - ஹரி நடிகர்கள் - அருண் விஜய், சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர் இராமேஸ்வரம் பெரிய குடும்பம் நாயகன் இளைய தாரத்து மகன், மற்றொரு ஜாதி தலைவர்ருக்கும் இவர்கள் குடும்பத்திற்கும் பிரச்சனை இந்த நிலையில் குடும்பத்திற்குள் பிரச்சனை நிகழ அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதே படம். தமிழ் சினிமாவில் ஹரி கமர்ஷியல் படங்கள் செய்வதிலும், நாயகர்களை ஆக்சன் ஹீரோவாக குடும்பங்களுக்குள் கொண்டு சேர்ப்பதிலும் கை தேர்ந்தவர். அவரது அனைத்து படங்களுமே கிட்டதட்ட பிளாக்பஸ்டர். ஆர்ட் சினிமாவுக்குள் அவர் படங்கள் அடங்காது அடங்கவும் தேவையில்ல்லை. அவரது பாணி கமர்ஷியல். அதில் நம் தினந்தோறும் பார்க்கும் இடங்களின் மனிதர்களை வைத்து திரைக்கதையில் விளையாட்டு காட்டினால் போதும். பெரிய செட்டப், உறவுகள், பரபரக்கும் வண்டிகள், நகரம் முழுக்க விரியும் கேமரா, எல்லாம் ஓடிக்கொண்டே இருக்கும் திரைக்கதை, நாயகியுடன் ஊடல் இதெல்லாம் ஹரியின் வழக்கம் எல்லாமும் இதில்…
Read More
Anya’s Tutorial விமர்சனம் !

Anya’s Tutorial விமர்சனம் !

  ஆஹா தயாரிப்பில் வந்திருக்கும் புதிய ஹாரர் தொடர். கொரோனா காலகட்டத்தில் குடும்பப் பிரச்சினைகல்யில் நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார். கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்படும் நேரமும் இதுதான். அவர் வேலைக்காக அன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டா வகுப்பை தொடங்குகிறார். அவர் வீட்டில் பயமுறுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடக்க தொடங்குகிறது. நிவேதிதா அமானுஷ்ய நடவடிக்கைகளில் சிக்கும்போது கதையில் திருப்பம் எழுகிறது. நிவேதிதாவின் வாழ்க்கையில் உண்மையில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்பதுதான் கதை நிவேதிதா தான் நாயகி ஹாரர் கதையில் வரும் டிபிகல் பாத்திரம் ஆனால் முடிந்தவரை கச்சிதமாக செய்துள்ளார். அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியிருக்கிறார். ரெஜினா கசாண்ட்ரா ஒரு துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அவரது பங்கும் சிறப்பாக உள்ளது. ரெஜினாவுக்கு குறைவான காட்சிகள் என்றாலும் தனித்து தெரிகிறார். ஹாரர் என்பது எப்போதும் போணியாகும் விசயம் அதை உணர்ந்து…
Read More
விஜய் சேதுபதி கொடுத்த மாமனிதன் எப்படி இருக்கிறார்?

விஜய் சேதுபதி கொடுத்த மாமனிதன் எப்படி இருக்கிறார்?

மாமனிதன் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் காயத்திரி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இசையில் உருவான வாழ்வியல் சார்ந்த திரைப்படம். யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.   ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒரு நல்லவன் சூழ்ச்சியில் தோற்றுப்போக, அந்த ஊரிலிருந்து அவன் ஓடுகிறான். பின்னர் அவன் தன் குடும்பத்தை காக்க என்ன செய்கிறான் அந்த குடும்பம் என்ன ஆனது என்பதே படம் 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. யுவன் சங்கர் ராஜா, இளையராஜா முதல் முறை இணைந்து இசையமைத்துள்ள படம் என்பது கூடுதல் சிறப்பு. தோற்றுப்போகும் ஒருவனின் கதையை சொல்லவும் இங்கு ஆள் வேண்டும் அந்த வகையில் தோற்றுப்போனவனின் கதையை தொடர்ந்து சொல்லி வருகிறார் சீனு ராமசாமி. ஏமாற்றுக்காரன் ஓடிப்போவதில்லை நல்ல மனதுக்காரன் மட்டுமே ஓடுகிறான் என்ற ஆழ்ந்த அர்த்தம் நிறைந்த கதையை…
Read More
எப்படி இருக்கிறது சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயோன்?

எப்படி இருக்கிறது சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயோன்?

ஒரு மாய மந்திரங்கள் நிறைந்த விஷ்ணு கோவிலில் உள்ள புதையலை எடுக்க ஒரு கொள்ளை கூட்டம் திட்டமிடுகிறது நாயகனும் அதில் இருக்கிறான். கடவுளை தாண்டி கொள்ளையடித்தார்களா இறுதியில் என்னவாகிறது என்பதே படம் மாயோன்” திரைப்படத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்க, அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படத்தை N. கிஷோர் இயக்கியுள்ளார். Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். அவரே திரைக்கதை எழுதியுள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜாவின் ஒரு கடவுள் ஆல்பத்திலிருந்து இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டது K.S. ரவிக்குமார், ராதா ரவி, பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மாயோன் திரைப்படம் கருத்தாக்கம்: ஹீரோ சிபிராஜ் கே.எஸ்.ரவிகுமாரால் அனுப்பப்பட்ட திறமையான நுண்ணறிவுள்ள நம் பாரம்பரியத்தை காக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இவர்குழுவில் தான்யரவிச்சந்திரன் ,பகவதி பெருமாள் இன்னும் சிலர் இருக்கின்றனர் .இவர்கள் 5000 ஆண்டுகள் பழமையான…
Read More
தமிழின் முதல் அமேசான் ஒரிஜினல் சிரிஸ் எப்படி இருக்கிறது! – சுழல் விமர்சனம்

தமிழின் முதல் அமேசான் ஒரிஜினல் சிரிஸ் எப்படி இருக்கிறது! – சுழல் விமர்சனம்

  எழுத்து மற்றும் உருவாக்கம்: புஷ்கர் காயத்ரி இயக்கம் : பிரம்மா - அனுசரன் நடிகர்கள்: கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் தமிழ் அமேசான் ஒரிஜினாலாக வந்திருக்கிறது இந்த சுழல். ஒரு கிராமத்தில் இருக்கும் சிமெண்ட் பாக்டரி பற்றி எரிகிறது. அதே நேரத்தில் அந்த பாக்டரி யூனியன் லீடர் மகள் காணாமல் போகிறாள். இந்த இரண்டையும் யார் செய்தது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என விசாரிப்பதே கதை. இந்த தொடரின் பலமே திரைக்கதை தான். மொத்தம் எட்டு எபிசோடுகளுக்கு எழுதப்பட்ட திரைக்கதை தேவையில்லாத பாதையில் பயணிக்காமல், கதையை ஒட்டியே பயணிக்கிறது. காணமல் போன ஒரு பெண்ணை கண்டுபிடிக்கும் வழக்காக ஆரம்பித்து, கதை நாம் யூகிக்காத பல இடங்களுக்கு பயணிக்கிறது. இது பார்ப்பவர்களை சீட் நுனிக்கு வரவைக்கிறது.  படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு ஒவ்வொன்றும் ஆழமாக உள்ளது. வெப்சீரிஸ்களில் ஒரு கதாபாத்திர வடிவமைப்பு என்பது ஒரு இடத்தில் ஆரம்பித்து…
Read More
ஒரு கிராமத்து வெப் சீரிஸ்: அம்முச்சி – எப்படி இருக்கு?

ஒரு கிராமத்து வெப் சீரிஸ்: அம்முச்சி – எப்படி இருக்கு?

  பெண்களின் படிப்பு யாராலும் தடைபட கூடாது, அதற்கு யாருக்கு உரிமையில்லை என்பதை அடிநாதமாக வைத்து, அந்த கருத்தை விதைக்கும் நோக்கில் உருவாக்கபட்டது தான் இந்த அம்முச்சி சீரிஸ் கதாநாயகனின் கிராமத்து காதலில், தன் பெற்றோரால் படிப்பை நிறுத்தும் சூழலில் இருக்கிறாள். இதை கேள்விப்பட்ட நாயகன் எத்தனை தடங்கல் வந்தாலும், அதை சமாளித்து தன் காதலியை படிக்க வைப்பேன் என முடிவெடுத்து அவன் சந்திக்கும் சிக்கல்கள் தான் கதை . படத்தின் பெரிய பலமே நடிகர்கள் பட்டாளம் தான். அவர்களுடைய பேச்சு மொழி தான், இந்த தொடரை நம்மை பார்க்க வைக்கிறது. யூடுயூப்-ல் முதல் சீசன் வந்து, இரண்டாவது சீசன் ஓடிடி தளத்தில் வந்திருக்கிறது. படத்தின் முதல் மைனஸ் ஆக தெரிவது நேர்த்தி இல்லாத மேக்கிங். படம் பல இடங்களில் ஒரு யூடுயூப் வீடியோ பார்ப்பது போல் இருக்கிறது. முழுமையாக ஆக்கபடாத சினிமாவாக தான் இந்த சீரிஸ் இருக்கிறது. மற்றபடி கிராமத்து…
Read More
மகனை காக்க போராடும் தாய் 0’2 விமர்சனம்

மகனை காக்க போராடும் தாய் 0’2 விமர்சனம்

! இயக்கம் - விக்னேஷ் GS நயன்தாரா நடிப்பில் SR பிரபு தயாரிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள படம் 0 2. ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் என்னவாகும் உலகம் என்பதை மறைமுகமாக ஒரு திரில்லர் படத்தில் வைத்து சொல்ல முயன்றிருக்கிறார்கள் ஆனால்… சுவாசித்தல் பிரச்சனை இருக்கும் மகன் அவனது ஆபரேஷனுக்காக பஸ்ஸில் செல்லும் போது பஸ் நடுவழியில் மணல் சரிவு விபத்தில் சிக்கி கொள்கிறது பஸ்ஸில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிஜன் குறைய, நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட இன்னொரு காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகின்றாள் என்பது தான் கதை. நல்ல கதைக்கரு சமூகத்திற்கு சொல்ல வந்த விசயமும் நன்றாக உள்ளது ஆனால் வெகு மோசமான திரைக்கதை, லாஜிக் இல்லாத காட்சிகள், கவராத மேக்கிங் என படத்தை சொதப்பியிருக்கிறார்கள். ஒரு முன்னணி நாயகி, ஒரு பஸ்ஸிற்குள் நான்கு பேர்,…
Read More
எப்படி இருக்கு RJ பாலாஜியின் வீட்ல விசேஷம்

எப்படி இருக்கு RJ பாலாஜியின் வீட்ல விசேஷம்

  ரயில்வே வேலை பார்க்கும் சத்யராஜ், மனைவி ஊர்வசி மகன்கள் ஆர்.ஜே.பாலாஜி, விஸ்வேஷ் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஆசிரியராக பணிபுரியும் ஆர் ஜே பாலாஜி, பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளி காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, தனது தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஊர்வசியின் கர்ப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளும் அதை கடந்து தன் காதலியை ஆர் ஜே பாலாஜி கைப்பிடித்தாரா என்பது தான் கதை இந்தியில் வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆனால் இந்தியில் இருந்த பல விசயங்களை தவிர்த்து விட்டு தமிழுக்கு ஏற்றார் போல் செய்திருக்கிறார்கள் சமீபமாக பாக்யராஜ் விக்ரமன் படங்கள் வருவது குறைந்து விட்டது குடும்பத்தோடு சிரிப்பதற்கு என படங்கள் எடுக்கப்படுவதில்லை அந்த ஏக்கத்தை இந்தப்படம் போக்கியிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, நடிப்பு வரவில்லை என்றாலும் நல்ல கதை செட்டப்பில்…
Read More
விக்ரம் திரை விமர்சனம் !

விக்ரம் திரை விமர்சனம் !

இயக்கம் - லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் - கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி. தொடர்கொலைகளை விசாரிக்க நியமிக்கபடும் அதிகாரி, அந்த கொலைகளை பற்றி விசாரிக்கையில் அதுகொலைகள் இல்லை ஒரு போரின் அடித்தளம் என்பதை கண்டுபிடிக்கிறார். அந்த கொலைகளை செய்ததுயார்? ஏன் செய்தார்கள்? என்பதை திருப்பங்களுடன் சொல்வதே விக்ரம். கமல்ஹாசன் இப்படிபட்டவர், விக்ரம் 1986ல், கைதியில், என இழுத்தடிக்காமல், சுற்றலுக்கு செல்லாமல்விக்ரம் என்ற திரைப்படத்துடைய விமர்சனத்தை மட்டும் பார்க்கலாம். படத்தின் முக்கியமான இரண்டு சிறப்பம்சம் கமல்ஹாசன், பகத் பாசில் என்ற இரு நடிகர்களும் படம் முழுவதும்தெரியவில்லை. விக்ரம், அமர் என்ற கதாபாத்திரம் மட்டுமே தெரிகின்றது. இதுவே ஒரு நடிகனின் மிகப்பெரியசாதனை தான். யார் கொலை செய்வது? எங்கே பொருள்? இந்த இரண்டு கேள்விகளை நோக்கியே திரைக்கதைநகர்த்தப்பட்டுள்ளது. இதுபோக கதையின் கதாபாத்திரங்களுக்கு நிகழும் சொந்த பிரச்சனைகளுடன்நகர்வதாய் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்த்தியான திரைக்கதை ஆசிரியர் மிகவும் நுட்பமாகயோசித்து வைக்கும் ஐடியா தான் இந்த…
Read More