சீதா ராமம் அழகான பேரானுபவம்!

சீதா ராமம் அழகான பேரானுபவம்!

  இயக்குநர் - ஹனு ராகவாப்புடி நடிப்பு - துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா கதை - ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவன் ஒரு வீர தீர செயல் மூலம் பிரபலமாகிறான். அவன் அநாதை என்பது வானொலி மூலம் தெரியவர இந்தியா முழுவதிலிமிருந்து அவனுக்கு உறவுகள் என கடிதம் வருகிறது. அதில் ஒரு கடிதம் நான் உன் மனைவி என வருகிறது, அவன் அவளை தேடி போகிறான் அவளால் இவன் காதலை ஏற்க முடியவில்லை. அது ஏன்? அவர்களின் காதல் சேர்ந்ததா? என்பதே கதை. வெகு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு அழகான நாவல் போன்றதொரு கதை. காட்சிகள் மனதில் ரம்மியமாய் ஒட்டிக்கொள்ள ஒரு நாவலின் அத்தியாங்கள் போல் கதை நகர்கிறது. கதை முழுதும் ராஷ்மிகா பாத்திரத்தின் பார்வையில் விசாரணையில் நமக்கு சொல்லப்படுகிறது. அதன் மூலமே பல முடிச்சுகள் அவிழ்கின்றன. மொத்த படமும் முடிந்து நிமிர்கின்ற பொழுது ஒரு…
Read More
குலுகுலு எப்படி இருக்கு

குலுகுலு எப்படி இருக்கு

குலுகுலு கடத்தபட்ட தன் நண்பனை மீட்க ஒரு நாடோடியின் உதவியை நாடும் நண்பர்கள். இவர்கள் அனைவரும்செய்யும் சாகசங்களே இந்த திரைப்படம். படத்தில் சந்தானம் தான் ஆச்சர்யம். இதுவரை அவர் நடித்த எந்த படத்தின் சாயல் இல்லாமலும், புதுவிதகதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது, அனைத்திற்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது. அனைத்தும்தனித்துவமாக இருக்கிறது. எழுத்தாக சிறப்பான ஒரு கதையை உருவாக்கியுள்ளார் ரத்னா. இந்த படம் மற்ற படங்களை போல் அல்லாமல், ஒரு குவர்கி அனுபவத்தை கொடுக்க கூறியது. ஒரு கற்பனைகாமெடி உலகத்தை உருவாக்குவது போல தான் இந்த படம். இந்த படங்கள் தமிழ் சினிமாவிற்கு அதிகம்பரிட்சயம் இல்லாதவை. அதனால் இதை பார்ப்பதற்கு வித்தியசமாக இருக்கும். ஆனால் இது தான் சினிமா. சினிமா இதை நோக்கி தான் நகரும். படத்தின் இசை ஒரு தனித்துவமான ஒன்று, இந்த கதையோட்டத்திற்கு ஏற்றார் போலும், படத்தின் விதத்திற்குஏற்றார் போலும் ஒரு துள்ளலான, வித்தியாசமான பாடலும், இசையும்…
Read More
“பேப்பர் ராக்கெட்”  இணைய தொடர் விமர்சனம் !

“பேப்பர் ராக்கெட்” இணைய தொடர் விமர்சனம் !

இயக்குநர் - கிருத்திகா உதயநிதி நடிப்பு -  காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், ஜீ5 ஒரிஜினலாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தொடர். வாழ்வை கற்றுத்தரும் அழகான 7 எபிஸோடுகள் கொண்ட பயணம் தன் தந்தை இறப்பிற்கு பிறகு மனமுடையும் இளைஞன், பிரச்சனைகளில் சிக்கி வாழ்வை வெறுத்து சிகிச்சைஎடுத்து கொண்டிருக்கும் சிலரை கூட்டிக்கொண்டு ஒரு பயணம் கிளம்புகிறான். அந்த பயணத்தில் அவர்கள்வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் அவர்கள் குணங்களிலும் மனங்களிலும் ஏற்படும் மாற்றமே இந்த பேப்பர்ராக்கெட். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பெரிய மாற்றம் பெரும் வாழ்வியல் தத்துவங்களை ஒரு கதைக்குள் அடக்கிஅதை ரசிக்கும் படி சொல்லி ஜெயித்திருக்கிறார். கோரோனா கால கட்டம் நம் கண் முன் பலரது வாழ்வை அடித்து சென்றுவிட்டது. பலர் மறைந்து விட்டனர் நாம்ஏன் வாழ்கிறோம் எனும் கேள்வியும் மன அழுத்தமும் பலரிடமும் இருக்கிறது. அதற்கெல்லாம் பதில் இந்ததிரைக்கதையில் இருக்கிறது. ஒவ்வொரு எபிஸோடும்…
Read More
தி லெஜண்ட் விமர்சனம்

தி லெஜண்ட் விமர்சனம்

தி லெஜெண்ட் திரை விமர்சனம் இயக்கம் - ஜேடி – ஜெரி நடிப்பு - சரவணா, கீத்திகா திவாரி சில பல விளம்பரங்களுக்கு, விமர்சனங்களுக்கு பிறகு, சரவணன் அருள் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். சரவவணன் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. ஜேடி கேரி ஒரு முன்னணி நட்சத்திரத்திற்கு எப்படி படம் செய்வார்களோ அதே போல் ஒரு செட்டப்பை உருவாக்கியிருக்கிறார்கள் வெளிநாட்டிலிருந்து வரும் விஞ்ஞானி சர்க்கரை நோயுக்கு இலவச மருந்து கண்டுபிடிக்க முயல்கிறார். மருந்து மாஃபியா அவரை தடுக்க நினைக்கிறது அதை முறியடித்து எப்படி ஜெயிக்கிறார் என்பதே படம். ரஜினியின் சிவாஜி படத்தினுடைய மினி வெர்ஷன் போல் தான் படம் இருக்கிறது. படம் முழுக்க பணமும் பிரமாண்டமும் தெரிகிறது. பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட்,…
Read More
விக்ராந்த் ரோனா எனும் பாண்டஸி உலகத்திற்கு நம்மை அழைத்து செல்வார்கள்!

விக்ராந்த் ரோனா எனும் பாண்டஸி உலகத்திற்கு நம்மை அழைத்து செல்வார்கள்!

விக்ராந்த் ரோனா ஒரு கிராமத்தில் குழந்தைகள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்துகொண்டு இருக்கிறார்கள். அதைவிசாரித்த காவல்துறை அதிகாரியும் இறக்கிறார். இந்த இரண்டு வழக்குகளையும் விசாரிக்க வரும் புதுகாவல்துறை அதிகாரி, அந்த கிராமத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்கிறாரா இல்லையா என்பதே கதை. முதலில் இந்த படம் தமிழ் மக்கள் முற்றிலும் பழக்கபடாத ஒரு வகையான படம். இந்த படத்தின் இயக்குனர்அனுப் பந்தாரிக்கு தனித்துவமான ஒரு திரைமொழி இருக்கிறது, அதன் மூலம் கன்னடத்தில் தனக்கென ஒருதனி முத்திரை பதித்துள்ளார். அவரது முதல் படமான ‘RaangiTaranga’ படம் வெளியான போது, அது  கன்னடமக்களுக்கு புதுவிதமாக இருந்தது. அதுபோல அவரது படம் இப்பொழுது தான் முதன்முதலாக தமிழில்வெளியாவதால், தமிழ் பார்வையாளர்கள் பலருக்கும் இந்த படம்  நல்லா இல்லாத படமாக தோன்றும். ஆனால்இது தான் சினிமாவி வளர்ச்சி. இதுபோன்ற திரைப்படங்களும், கதை சொல்லும் விதமும் தான் சினிமாவின்பரிணாம வளர்ச்சி. அடுத்ததாக இந்த பாராட்டியே ஆக வேண்டிய முக்கிய காரணம்…
Read More
மஹாவீர்யார் திரை விமர்சனம் !

மஹாவீர்யார் திரை விமர்சனம் !

இயக்கம் - அப்ரித் ஷைனி நடிப்பு - நிவின் பாலி, ஆஷிப் அலி நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள திரைப்படம் “மஹாவீர்யார்”. இயக்குநர் அப்ரித் ஷைனி, நிவின் பாலி, ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை கொடுத்த நிலையில் இந்தப்படம் மீது ஒரு எதிர்பார்ப்பு நிலவியது அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா பார்க்கலாம். விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையை தழுவி இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். மண்னர் காலத்தில் நிகழும் ஒரு அநீதிக்கு இன்றைய வழக்காடு மன்றத்தில் வழக்கு நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்ற கற்பனை தான் படம். ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சுற்றி, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், பொழுதுபோக்கையும் கலந்து ஒரு அட்டகாசமான படமாகவே வந்திருக்கிறது இப்படம். பொதுவாக ஃபேண்டஸி படங்கள் நான் நம்பும்படி மேக்கிங் அமைந்துவிட்டால் அதில் மேற்கொண்டு லாஜிக் கேள்விகள் கேட்கமாட்டோம். அந்த வகையில் திரைக்கதையில் இந்தப்படத்தில் அசத்தி விட்டார்கள். மொத்தப்படமும்…
Read More

யார் உண்மையிலயே நிலை மறந்தவன்?- நிலை மறந்தவன் விமர்சனம்

நிலை மறந்தவன் விமர்சனம் ! இயக்கம் - அன்வர் ரசீத் நடிகர்கள் - பகத் பாசில் , கௌதம் மேனன், நஸ்ரியா கதை - வாழ்வில் தோற்ற ஒருவனுக்கு கடைசி வாய்ப்பு வருகிறது. கடவுளின் தூதுவன் வேடம் போட ஆரம்பிக்கிறான். அவனை வைத்து, மக்களிடம் பணம் பிடுங்கி கார்ப்பரேட் சம்பாதிக்க ஆரம்பிக்கிறது. அவனின் மனசாட்சி குத்த ஆரம்பிக்க அவன் என்ன செய்கிறான் என்பதே கதை மலையாளத்தில் டிரானஸ் என்ற பெயரில் வந்து ஹிட்டடித்த படம். கேரளாவில் கிறிஷ்டியன்ஸ் அதிகம். அங்கு மதத்தையும் மக்களின் நம்பிக்கையும் வைத்து எப்படி கார்பரேட் சம்பாதிக்கிறது என்பதை அடித்து உடைத்த படம் தான் இது. டெவலப்மெண்ட் ஸ்பீச் கொடுக்கும் பகத் பாசில் தம்பியின் இறபிற்கு பிறகு, உடைந்து போகும்போது அவரை கார்பரேட் மத பிரச்சாகராக மாற்றுகிறது அவர் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் மனம் மாறிய பிறகு என்ன செய்கிறார் என்பதே படம். நடிப்பு அரக்கன் பகத் அவருக்காகவே செய்த…
Read More

குழந்தைகளை ஈர்க்குமா இந்த பூதம் – மைடியர் பூதம் விமர்சனம்

மைடியர் பூதம். இந்த படம் குழந்தைகளுக்கான படம். அந்த வகையில் இந்த திரைப்படம் திருப்திகரமான ஒரு பணியை செய்திகிறதா என பார்க்கலாம். திக்கி பேசும் பிரச்சனையுள்ள ஒரு பள்ளி சிறுவனுக்கு தோழனாக ஒரு பூதம் வருகிறது. அந்த பூதம் வந்த பிறகு அந்த சிறுவனின் வாழ்கை என்ன ஆனது, அந்த பூதம் என்ன ஆனது என்பது தான் கதை. சிறுவர்களுக்கான படம் எப்பொழுதும் பஞ்ச தந்திர கதைகள், நீதி நெறி கதைகள் போன்றே வடிவமைக்க பட்டிருக்கிருக்கும். ஒவ்வொரு காட்சி தொகுப்பும் ஒரு நீதிநெறி கதைகளாக தான் இருக்கும். இந்த படமும் அதே போன்று தான் இருக்கிறது. வித்தியாசமாக எதுவும் இந்த படத்தில் இல்லை. சிறப்பான நடிப்பு, சிறப்பான இசை, சிறப்பான திரைக்கதை என எதுவும் இல்லை. ஒரு நேர்த்தியான திரைக்கதையும் இல்லை. குழந்தைகளுடன் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும் ஒரு படமாக இருக்கிறதா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.…
Read More

நியாயத்தின் பக்கம் நிற்பாளா கார்கி?- கார்கி விமர்சனம்

கார்கி பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட தன் அப்பா நிரபராதி என நிரூபிக்க போராடும் ஆசிரியாய் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கதை. படத்தின் மிகப்பெரிய பிளஸ் படம் ஆரம்பிக்கும் இடமும், முடியும் இடமும் தான். சிறிது நேரம் கூட தாமதிக்காமல் முதல் பிரேமில் இருந்து கதைக்குள் போக ஆரம்பித்துவிட்டார்கள். எடுத்துகொண்ட கதைக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து படத்தை நிமிர செய்துவிட்டார் படத்தின் எழுத்தாளர். லைவ் சவுண்ட், லைவ் லோகேஷன், நிஜத்தில் வாழும் கதாபாத்திரங்கள் என படத்தை நம்முடன் இணைக்க கடினமாக உழைத்து அதில் வெற்றி கண்டு இருக்கிறார்கள் படக்குழு. ஒளிப்பதிவாக இருக்கட்டும், எடிட்டாக இருக்கட்டும், இசையாக இருக்கட்டும் தனியாய் தெரியாமல் கார்கி உலகத்தோடு இணைந்திருக்கிறது. அதுவே திரைப்படத்தை மிகச்சிறப்பாக மாற்றி இருக்கிறது. அடுத்தாக இந்த திரைப்படத்தின் நடிகர்கள் பற்றி கூற வேண்டும். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். முதலில் இந்த படத்தில் ஆச்சர்ய…
Read More

சிங்கிள் ஷாட்யை தாண்டி இரவின் நிழலில் என்ன இருக்கு?

இரவின் நிழல் நந்து என்னும் 55 வயது இருக்க கூடிய ஆள் ஒரு வழக்கிற்காக போலீஸிற்கு பயந்து பதுங்கி இருக்க, அவனது வாழ்கையை ஒரு முறை பின்னோக்கி பார்த்து, அவன் கடந்து வந்த பாதையை நினைப்பதே இந்த கதை. உலகத்தின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட், 350 பேரின் உழைப்பு, தமிழ் சினிமாவின் பெருமை மிகு தருணம், பார்த்திபனின் புது முயற்சி என இந்த படத்தின் மேல் இருக்கும் அற்புத அம்சங்களை விலக்கி, ஒரு பார்வையாளனுக்கு படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மிகவும் டார்க் ஆன கதையை, டார்க் ஆன திரைக்கதை மூலமாக சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை நேராக சொல்வதை விட நான் லீனியர் முறையில் சொல்வதே புத்திசாலி தனம் என நினைத்து திரைக்கதை அமைத்த எழுத்தாளர் பார்த்திபனுக்கு பாராட்டுகளை கொடுக்கலாம். ஆனால் திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும். சுவாரஷ்யமான காட்சிகள்…
Read More