யார் உண்மையிலயே நிலை மறந்தவன்?- நிலை மறந்தவன் விமர்சனம்

நிலை மறந்தவன் விமர்சனம் !

இயக்கம் – அன்வர் ரசீத்
நடிகர்கள் – பகத் பாசில் , கௌதம் மேனன், நஸ்ரியா

கதை – வாழ்வில் தோற்ற ஒருவனுக்கு கடைசி வாய்ப்பு வருகிறது. கடவுளின் தூதுவன் வேடம் போட ஆரம்பிக்கிறான். அவனை வைத்து, மக்களிடம் பணம் பிடுங்கி கார்ப்பரேட் சம்பாதிக்க ஆரம்பிக்கிறது. அவனின் மனசாட்சி குத்த ஆரம்பிக்க அவன் என்ன செய்கிறான் என்பதே கதை


மலையாளத்தில் டிரானஸ் என்ற பெயரில் வந்து ஹிட்டடித்த படம். கேரளாவில் கிறிஷ்டியன்ஸ் அதிகம். அங்கு மதத்தையும் மக்களின் நம்பிக்கையும் வைத்து எப்படி கார்பரேட் சம்பாதிக்கிறது என்பதை அடித்து உடைத்த படம் தான் இது.

டெவலப்மெண்ட் ஸ்பீச் கொடுக்கும் பகத் பாசில் தம்பியின் இறபிற்கு பிறகு, உடைந்து போகும்போது அவரை கார்பரேட் மத பிரச்சாகராக மாற்றுகிறது அவர் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் மனம் மாறிய பிறகு என்ன செய்கிறார் என்பதே படம்.

நடிப்பு அரக்கன் பகத் அவருக்காகவே செய்த ரோல் மாதிரி அதிலும் இடைவேளைக்கு பிறகான காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

கௌதம் மேனன் முடுக்காக மிரட்டியிருக்கிறார். நஸ்ரியாவும் கலக்கியிருக்கிறார். காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இசை படத்த்திற்கு பெரிய பலம்.

படத்தில் மிக முக்கியம் கிறிஷ்டியன் பரப்புரையில் நடக்கும் தகிடுதத்தங்களை உடைக்கும் காட்சிகள். தைரியமாக இதை சொன்னதே பெரிய விசயம் தான் இந்தியாவில் எல்லா மதங்களிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆனால் இந்தப்படம் கிறிஸ்டியானிட்டிக்கு எதிரான படமாக புரிந்து கொள்ளப்படும் என்பது சோகம்

இந்தப்படம் இங்கு எடுக்கப்பட்டிருந்தால் இந்து மத சாமியார்களை பற்றியதாக இருந்திருக்கும்.

உடம்பு சரியில்லை என்றால் ஹாஸ்பிடல் போ, கடவுளை தேடி போகாதே என்பது தான் படம் சொல்கிறது..