மஹாவீர்யார் திரை விமர்சனம் !

இயக்கம் – அப்ரித் ஷைனி
நடிப்பு – நிவின் பாலி, ஆஷிப் அலி

நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள திரைப்படம் “மஹாவீர்யார்”.

இயக்குநர் அப்ரித் ஷைனி, நிவின் பாலி, ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை கொடுத்த நிலையில் இந்தப்படம் மீது ஒரு எதிர்பார்ப்பு நிலவியது அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா பார்க்கலாம்.

விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையை தழுவி இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். மண்னர் காலத்தில் நிகழும் ஒரு அநீதிக்கு இன்றைய வழக்காடு மன்றத்தில் வழக்கு நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்ற கற்பனை தான் படம். ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சுற்றி, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், பொழுதுபோக்கையும் கலந்து ஒரு அட்டகாசமான படமாகவே வந்திருக்கிறது இப்படம்.

பொதுவாக ஃபேண்டஸி படங்கள் நான் நம்பும்படி மேக்கிங் அமைந்துவிட்டால் அதில் மேற்கொண்டு லாஜிக் கேள்விகள் கேட்கமாட்டோம். அந்த வகையில் திரைக்கதையில் இந்தப்படத்தில் அசத்தி விட்டார்கள்.

மொத்தப்படமும் ஒரு கோர்டில் நிகந்தாலும் பரபரப்பாக கதையை நகர்த்தி ஒரு அருமையான படம் பார்த்த திருப்தியை தந்துள்ளார்கள். நிவின் பாலி இடைவேளைக்கு பிறகு கௌரவ வேடமென்றாலும் மனிதர் அசத்தியிருக்கிறார். நாயகியாக நடித்தவர் மிக தைரியமாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் வேறு யாரும் இவ்வாறு நடிக்க முடியாது.

 

இஷான் சாப்ரா இசை படத்திற்கு பலம்
ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு ஃபேண்டஸி உலகத்தை கண் முன் கொண்டு வந்துள்ளார்.

மேக்கிங் திரைக்கதையில் அசத்தி போகிற போக்கில் இன்றைக்கு அரசாள்பவர்களையும் நீதிமன்றங்களையும் ஒரு பிடி பிடித்திருக்கிறார். இயக்குநர் மஹாவீர்யார் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய திரை அனுபவம்