குழந்தைகளை ஈர்க்குமா இந்த பூதம் – மைடியர் பூதம் விமர்சனம்

மைடியர் பூதம்.

இந்த படம் குழந்தைகளுக்கான படம். அந்த வகையில் இந்த திரைப்படம் திருப்திகரமான ஒரு பணியை செய்திகிறதா என பார்க்கலாம்.

திக்கி பேசும் பிரச்சனையுள்ள ஒரு பள்ளி சிறுவனுக்கு தோழனாக ஒரு பூதம் வருகிறது. அந்த பூதம் வந்த பிறகு அந்த சிறுவனின் வாழ்கை என்ன ஆனது, அந்த பூதம் என்ன ஆனது என்பது தான் கதை.

சிறுவர்களுக்கான படம் எப்பொழுதும் பஞ்ச தந்திர கதைகள், நீதி நெறி கதைகள் போன்றே வடிவமைக்க பட்டிருக்கிருக்கும். ஒவ்வொரு காட்சி தொகுப்பும் ஒரு நீதிநெறி கதைகளாக தான் இருக்கும். இந்த படமும் அதே போன்று தான் இருக்கிறது. வித்தியாசமாக எதுவும் இந்த படத்தில் இல்லை. சிறப்பான நடிப்பு, சிறப்பான இசை, சிறப்பான திரைக்கதை என எதுவும் இல்லை. ஒரு நேர்த்தியான திரைக்கதையும் இல்லை.

குழந்தைகளுடன் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும் ஒரு படமாக இருக்கிறதா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். குழந்தைகள் மனதிற்குள் இருக்கும் பாண்டஸிகள் இந்த படத்தில் இருக்கிறது. ஆனால் எந்த குழந்தைகள் என்பதில் சிக்கல் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் குழந்தையாய் இருப்பவர்களுக்கு இந்த படம் பிடிக்கலாம், இப்போது திரைப்படங்களும், உலகமும் முன்னேறி போய் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு படம் எடுத்திருப்பது இயக்குனர் இன்னும் அப்டேட் ஆகவில்லை என காட்டுகிறது.

தமிழ் திரையுலகில் குழந்தைகளுக்கான படங்களும், அனிமேஷன் கதைகளும் குறைவாகவே வந்து கொண்டு இருக்கிறது. அதனால் இது போன்ற கதைகளை நாம் எடுத்து தான் ஆக வேண்டும், ஆனால் இந்த படத்தின் திரைக்கதையிலும், படமாக்கும் விதத்தில் குறைவாய் இருக்கும் நேர்த்தியை சரிசெய்ய வேண்டும். பிரபு தேவா போன்ற நடிகர் இம்த திரைப்படத்திற்குள் வந்தது சிறப்பான விஷயம், குழந்தைகளுடன் சென்று இந்த திரைப்படத்தை பாருங்கள், முழு திருப்தியை இந்த படம் கொடுக்காவிட்டாலும், இது போன்ற படங்களை பார்க்கும் வாய்ப்பாவது உங்களுக்கு கிடைக்கும்.