விக்ராந்த் ரோனா எனும் பாண்டஸி உலகத்திற்கு நம்மை அழைத்து செல்வார்கள்!

விக்ராந்த் ரோனா

ஒரு கிராமத்தில் குழந்தைகள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்துகொண்டு இருக்கிறார்கள். அதைவிசாரித்த காவல்துறை அதிகாரியும் இறக்கிறார். இந்த இரண்டு வழக்குகளையும் விசாரிக்க வரும் புதுகாவல்துறை அதிகாரி, அந்த கிராமத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்கிறாரா இல்லையா என்பதே கதை.

முதலில் இந்த படம் தமிழ் மக்கள் முற்றிலும் பழக்கபடாத ஒரு வகையான படம். இந்த படத்தின் இயக்குனர்அனுப் பந்தாரிக்கு தனித்துவமான ஒரு திரைமொழி இருக்கிறது, அதன் மூலம் கன்னடத்தில் தனக்கென ஒருதனி முத்திரை பதித்துள்ளார். அவரது முதல் படமான ‘RaangiTaranga’ படம் வெளியான போது, அது  கன்னடமக்களுக்கு புதுவிதமாக இருந்தது. அதுபோல அவரது படம் இப்பொழுது தான் முதன்முதலாக தமிழில்வெளியாவதால், தமிழ் பார்வையாளர்கள் பலருக்கும் இந்த படம்  நல்லா இல்லாத படமாக தோன்றும். ஆனால்இது தான் சினிமாவி வளர்ச்சி. இதுபோன்ற திரைப்படங்களும், கதை சொல்லும் விதமும் தான் சினிமாவின்பரிணாம வளர்ச்சி.

அடுத்ததாக இந்த பாராட்டியே ஆக வேண்டிய முக்கிய காரணம்விக்ராந்த் திபா என்ற உலகிற்கு நம்மைஅழைத்து சென்றது. இந்த படத்தில் வரும் கிராமமும், பின்னணியும் உண்மையான இடங்கள் அல்ல. ஒருகற்பனை நிறைந்த பான்டா உலகம், ஹாலிவுட்டில் நாம் பார்த்து வியந்து நிற்கும் ஹாரிபாட்டார் போன்றபாண்டஸி உலகம். அப்படி உருவாக்கபட்ட உலகத்திற்குள் நம்மை ஒருவர் அழைத்து போகிறார் என்றால், அவர்மிகச்சிறந்த திறமைசாலி தான். அந்த வகையில் அனுப் பந்தாரி பாராட்டபட வேண்டியவர்.

இந்த விக்ராந்த் ரோனா என்ற உலகத்தை மூன்று பிரம்மாக்கள் உருவாக்கியுள்ளனர். முதல் ஆள் எழுத்தாளரும், இயக்குனருமான அனுப் பந்தாரி, இரண்டாவது ஒளிப்பதிவாளர் பில்லியன் டேவிட், மூன்றாவது கலைஇயக்குனர் ஷிவகுமார். இந்த மூவரும் உருவாக்கிய இந்த உலகத்தினுள் பார்வையாளர்கள் தங்களை அறியாமல்சென்றுவிடுவார்கள். இந்த திரைப்படத்தை தாண்டி இந்த படக்குழு மேலும் பல கதைகளையும், இன்னும் சிலபடங்களையும் இந்த உலகத்தை வைத்து உருவாக்கலாம்.

கால்களின் பெர்னாண்டஸ் உடைய திரை தரிசனத்தை ரசிகர்கள் மனதில் ஆழமாய் பதிய வைக்கஉழைத்தவர்களில் இசையமைப்பாளர் தான் முதல் பங்கு வகிக்கிறார். அவருடையரா ரா ரக்கம்மாபாடல்படத்தை துருத்தாமல், ரசிக்கும் படி இருப்பதால் தான் ஜாக்குலின் நடித்த காதபாத்திரம் பார்வையாளர்களைஈர்க்கும் படி அமைந்துள்ளது.

கிச்சா சுதீப் பக்காவாக விக்ராந்த் ரோனா பாத்திரத்திற்கு பொருந்தியுள்ளார். அவரது திரை மொழி படத்தைவிட்டு நகராமல், அந்த கதாபாத்திரத்தின் ஊடே பயணிக்க வைக்கிறது. படத்தின் மத்த நடிகர், நடிகையர்களும்படத்தோடு ஒன்றி போய் உள்ளனர்.

படத்தின் முதல் பாதி ஸ்லோ, இரண்டாம் பாதி தான் வொர்த் என யாராவது கூறினால் அதை தவிர்த்துவிட்டுபோய் படம் பாருங்கள். இந்த உலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் படம் இப்படி தான் படம் செல்லவேண்டும்.

அப்புறம் இன்னொரு முக்கிய தகவல், படத்தை தயவுசெய்து 3D-யில் பாருங்கள். ஒரு நல்ல அனுபவமாகஇருக்கும்.

எப்பொழுதும் ஒரே மாதிரியான திரைப்படங்களையும், காட்சிகளையும், கதாபாத்திரங்கள் உலாவும்உலகத்தையும் பார்த்து சலித்து போயிருக்கும் ரசிகர்களுக்கான சிறந்த ஆப்ஷன் இந்த திரைப்படம்.

தவிர்க்காமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.