குலுகுலு
கடத்தபட்ட தன் நண்பனை மீட்க ஒரு நாடோடியின் உதவியை நாடும் நண்பர்கள். இவர்கள் அனைவரும்செய்யும் சாகசங்களே இந்த திரைப்படம்.
படத்தில் சந்தானம் தான் ஆச்சர்யம். இதுவரை அவர் நடித்த எந்த படத்தின் சாயல் இல்லாமலும், புதுவிதகதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது, அனைத்திற்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது. அனைத்தும்தனித்துவமாக இருக்கிறது. எழுத்தாக சிறப்பான ஒரு கதையை உருவாக்கியுள்ளார் ரத்னா.
இந்த படம் மற்ற படங்களை போல் அல்லாமல், ஒரு குவர்கி அனுபவத்தை கொடுக்க கூறியது. ஒரு கற்பனைகாமெடி உலகத்தை உருவாக்குவது போல தான் இந்த படம். இந்த படங்கள் தமிழ் சினிமாவிற்கு அதிகம்பரிட்சயம் இல்லாதவை. அதனால் இதை பார்ப்பதற்கு வித்தியசமாக இருக்கும். ஆனால் இது தான் சினிமா. சினிமா இதை நோக்கி தான் நகரும்.
படத்தின் இசை ஒரு தனித்துவமான ஒன்று, இந்த கதையோட்டத்திற்கு ஏற்றார் போலும், படத்தின் விதத்திற்குஏற்றார் போலும் ஒரு துள்ளலான, வித்தியாசமான பாடலும், இசையும் இருக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கென்றஒரு பிரத்யேக வண்ணத்தை கொடுத்திருக்கிறது. இவையனைத்தும் சேர்ந்து இந்த படத்தை தனித்துவமானஉலகம் ஆக்குகிறது.
மொத்தத்தில் இந்த திரைப்படம் புது அனுபவமாக இருக்கும், அனைவரும் கண்டிப்பாக பார்க்கலாம்.