எப்படி இருக்கிறது ஷூ – திருப்திபடுத்தியதா?

எப்படி இருக்கிறது ஷூ – திருப்திபடுத்தியதா?

யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரீப்பீட் ஷீ திரைப்படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. குழந்தைகளை சுற்றியே இக்கதை நகரும் படி வடிவமைக்கப்படு இருக்கிறது. ஷூ போன்ற கால இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார் திலீபன், அதனை சோதனை செய்யும் போது எதிர்பாராத விதமாக போலீசில் மாட்டிக் கொள்கிறார். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் குழந்தைகளை விலைக்கு வாங்கி அவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்தும் கும்பல் ஒன்று இயங்கி வருகிறது. இன்னொரு கதையாக தாயில்லா குழந்தை குடிகார அப்பாவிடம் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறது. இந்த மூன்று கதையும் ஒரு புள்ளியில் இணையும் இடம் தான் ஷூ. தொழில்நுட்ப வல்லுவனர்கள் வலுவாக இந்த படத்திற்கு அமைந்துள்ளனர். இசை, படதொகுப்பு என பல விஷயங்களில் இயக்குனர் கவனம் செலுத்தியுள்ளார். காமெடியும் அங்கங்கு வொர்க் ஆகிறது. ஆனால்…
Read More
பொன்னியின் செல்வன் : விமர்சனம்

பொன்னியின் செல்வன் : விமர்சனம்

பொன்னியின் செல்வன் : விமர்சனம் இயக்கம் - மணிரத்னம் நடிகர்கள் - விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஷ்வர்யா ராய், திரிஷா பொன்னியின் செல்வன் நாவல் தமிழர்களின் வரலாற்றிலும் வாழ்விலும் இரண்டறக் கலந்த ஒரு புதினம். பலர் படமாக்க நினைத்து கைவிடப்பட்ட நிலையில் பெரிய நடிகர் பட்டாளத்துடன் நினைத்து பார்க்க முடியாத பிரமாண்டத்தில் அதை கண்முன் கொண்டு வர முயன்றிருக்கிறார் மணிரத்னம் புத்தகம் படித்தர்வர்களின் முழு கற்பனையை நெருங்கா விட்டாலும் இப்படம் தமிழின் மிக முக்கிய படமாக ஒரு அற்புத திரை அனுபவமாக மிளிர்கிறது. நாவல்ல இருக்க கதாபாத்திரங்ளுக்கு கச்சிதமான நடிகர்கள் ஆதித்த கரிகாலனா விக்ரம் மிரட்டியிருக்கிறார் அவரின் ஓபனிங் போர்க்காட்சி புத்தகத்தில் பெரிதாக இல்லையென்றாலும் அதை பிரமாண்டமாக காட்டி தன் பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் மணிரத்னம் இடைவேளை காட்சியில் விக்ரம் நடிப்பு பட்டாசு. வல்லவரையன் சேட்டை பிடித்தவனாக குறும்புக்காரனாக நாயகனாக கார்த்தி இனிமேல் எல்லார் மனதிலும் இருப்பார். ஆழ்வார்க்கடியான், பூங்குழலி,…
Read More
சினம் திரை விமர்சனம் !!!

சினம் திரை விமர்சனம் !!!

  இயக்கம் - GNR குமரவேலன் நடிகர்கள் - அருண் விஜய், காளி வெங்கட் கதை - ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி அவரின் மனைவி திடீரென கொலையாக, தன் மனைவி மீதான களங்கத்தை போக்கி உண்மையான குற்றவாளியை கண்டறிய போராடுகிறார். இந்தப்படத்தின் ஒரே நல்ல விசயம் அருண் விஜய் காளி வெங்கட் இருவரின் நடிப்பு. அருண் விஜய் மிடுக்காக போலீஸ் பாத்திரத்திற்குள் உட்கார்ந்து கொள்கிறார். அவருக்கு எந்த பாத்திரமும் கன கச்சிதமாக பொருந்திப் போகிறது. மனைவி கொலைக்கு காரணமானவர்களை தேடுவது, மனைவையியை இழந்து சாடுவது என அனைத்து இடங்களிலும் அசத்துகிறார். காளி வெங்கட் தன் பாத்திரத்தோடு ஒன்றி அசத்தியிருக்கிறார். ஆனால் இந்தப்படம் இவர்கள் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லாமல் இருக்கிறது. நாயகி நன்றாக நடித்தும் விழலுக்கு இறைத்த நீர். கதை திரைக்கதை காட்சிகள் சொல்லப்படும் அறம் என் அனைத்தும் மிக மோசமான அனுபவத்தை தருகிறது. ஒரு நல்ல கதை திரைக்கதையாலும் மிக…
Read More
சியானின் கோப்ரா எப்படி இருக்கு?

சியானின் கோப்ரா எப்படி இருக்கு?

கோப்ரா இயக்கம் - அஜய் ஞானமுத்து நடிகர்கள் - விக்ரம் , ஶ்ரீனிதி ஶ்ரீஷெட்டி, மிருணாளினி, இர்ஃபான் பதான். சர்வதேசமாக கூலிக்கொலையாளியாக செயல் படும் மேத் ஜீனியஸ் அவனை தேடும் போலீஸுக்கு ஒருவன் துப்பு கொடுக்கிறான். நிஜ வாழ்வில் அநாதை இல்ல வாத்தியாராக இருக்கும் நாயகனின் அடையாளம் கல்யாண நாளுக்கு முதல் நாள் உடைந்து விட, உடைத்தது யார் என நாயகன் தேட ஆரம்பிக்கிறான் அவன் கண்டுபிடித்தானா ? இதற்கிடையில் போலீஸ் அவனை பிடித்ததா ? வில்லன் இவர்களை பிடித்தானா என்பதே கதை. ஆளவந்தான், வில்லன் என இரு படங்களில் வந்த கதையை கொஞ்சம் மசாலா தூவி பிரமாண்டம் சேர்த்து சமைத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் நீளமும் குழப்பமான திரைக்கதையும் படத்திம் பெரு மைனஸாக அமைந்திருக்கிறது. படத்தின் பிரமாண்டம் மலைக்க வைக்கிறது ஆனால் இது தேவையா என யோசித்திருந்தால் பல காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் காட்டும் பிரமாண்டமான கொலை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில்…
Read More
எப்படி இருக்கிறது அருள்நிதியின் அடுத்த திரில்லர் “டைரி”?

எப்படி இருக்கிறது அருள்நிதியின் அடுத்த திரில்லர் “டைரி”?

16 வருடங்களுக்கு முன்னால் தடயங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் மூடப்பட்ட ஒரு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுக்கும் ஒரு புது காவல்துறை அதிகாரி, அந்த வழக்கை விசாரிக்கும் போது சந்திக்கும் அமானுஷ்யம் நிறைந்த சம்பவங்கள் தான் கதை. 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்து இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இதன் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் அருள்நிதியுடன் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து, தணிகை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராஜா சேதுபதி படத்தொகுப்பினை செய்துள்ளார். ரோன் ஏதன் யோஹன் இசையமைத்து உள்ளார். படத்தின் கதையும், கதையில் இருக்க கூடிய சில தருணங்களும் சுவாராஷ்யம் நிறைன்டஹ் ஒன்றாக தான் இருக்கிறது. பீட்சா, டிமாண்டி காலனி திரைப்படங்கள் போன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அள்ள கூடிய…
Read More
எப்படி இருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்?

எப்படி இருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்?

தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது, அவர் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட அதிரடி ஸ்டார் ஆதித்யா உடைய புதிய படமான கருடா தமிழ்ராக்கர்ஸ் எனும் இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார். அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த தொடரில் அருண்விஜய் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த நிகழ்ச்சியை மனோஜ் குமார் கலைவாணன் எழுதி ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. அதிக பொருட்செலவில் உருவான ஒரு படத்தை திருட்டுதனமாக வெளியிட போவதாக அறிவிக்கும் ஒரு கும்பலை, காவல்துறை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதே கதை. தமிழ் ராக்கர்ஸ் எனும் சட்டவிரோதமான வலைதளம் தமிழ் சினிமாவில் செய்துவந்த குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு வலைதொடர் தான் இந்த தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ரசிகர்கள் பார்த்து பழக்கபட்ட சினிமாவின் பார்க்காத முகத்தை…
Read More
ஜீவி 2 விமர்சனம்???

ஜீவி 2 விமர்சனம்???

  இயக்கம் - கோபிநாத் நடிகர்கள் - வெற்றி, கருணாகரன், மைம் கோபி கதை - நல்ல வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டோம் என நாயகன் நினைக்கையில் அவனுக்கு மீண்டும் பண நெருக்கடி ஏற்பட, திருட நினைக்கிறான் முக்கோண விதி மீண்டும் அவனை சூழ்கிறது அதிலிருந்து மீள்கிறானா ? என்பதே கதை. ஜீவி முதல் பாகம் ஒரு சர்ப்ரைஸ். ஒரு மிக சாதாரணமான கதையை முக்கோண விதி என்பதை புகுத்தி ஃபேண்டஸி வகையில் நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்திருந்தார்கள். இப்போது அதன் இரண்டாம் பாகம் வந்திருக்கிறது. முதல் பாகம் முடிந்த அதே இடத்தில் படம் ஆரம்பிக்கிறது. இந்தப்படத்திலும் நாயகன் திருட நினைக்க முக்கோண விதி அவனை சூழ்கிறது. அவன் அதிலிருந்து வெளிவர நண்பனை கொலை செய்தது யாரென கண்டுபிடிக்க முயல்கிறான். படத்தின் திரைக்கதை மோசமில்லை பரபரவென்று நகர்கிறது. வெற்றி நடிப்பில் நல்ல முன்னேற்றம் மொத்த படத்தையும் தாங்குகிறார். கருணாகரன் பல இடங்களில் இளைப்பாற…
Read More
எமோஜி இணைய தொடர் எப்படி இருக்கிறது ?

எமோஜி இணைய தொடர் எப்படி இருக்கிறது ?

எமோஜி இணைய தொடர் எப்படி இருக்கிறது ? இயக்கம் - ரங்கசாமி நடிகர்கள் - மஹத் , மானஷா சௌத்திரி, தேவிகா சதீஷ் ஒரு இளைஞனின் காதல் செக்ஸ் பயணமும் நினைவுகளும் தான் எமோஜி. ஆம் படித்தது சரி தான் செக்ஸ் பயணம். செக்ஸ் காட்சிகளை வல்கர் இல்லாமல் திரையில் காட்டுவது ஒரு கலை. அந்த வகையில் அடல்ட் காமெடியில் உணர்வு பூர்வமான காமெடி டிராமா என்றவுடன் நிமிர்ந்து ஆவலுடன் அமரும் நம்மை சோதிக்கிறது இந்த தொடர். அடல்ட் காமெடி கத்தி மேல் நடப்பது போன்றது. விகாரமில்லாமல் நம்மை சிரிக்க ரசிக்க வைக்க வேண்டும். ஆனால் இது எதற்கும் இவர்கள் கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லை. ஒவ்வொரு எபிஸோடும் ஒரு பெண்ணை மடக்குவதும் அவர்களுக்குள்ளான தழுவல்களுமாக செல்கிறது கதை. இம்மி அளவிற்கு கூட எங்கும் சுவாரஸ்யம் இல்லை. திரைக்கதை கடுமையான அயர்ச்சியை தருகிறது. நடிப்பு, மேக்கிங் இசை டப்பிங் என எதிலும் மெனக்கிடல்…
Read More
குருதி ஆட்டம் எப்படி இருக்கு?

குருதி ஆட்டம் எப்படி இருக்கு?

எழுத்து & இயக்கம் : ஸ்ரீ கணேஷ் நடிகர்கள்: அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதா ரவி, கண்ணா ரவி, ஆறுமுகம், வட்சன். இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: ராக்போர்ட் முருகானந்தம் கபடி ஆட்டத்தில் தொடங்கும் சிலரின் வாழ்கை எப்படி குருதி ஆட்டத்தில் போய் முடிகிறது என்பதே கதை. ஒரு பக்காவான ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான ஒன்லைன் கதையை வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். அதுமட்டுமில்லாமல் அவர் கதையை டீல் செய்யும் விதம் அபாரம், ஒரே நோக்கில் கதையை பயணிக்கவிடாமல், பல கோணங்களுக்கு கதையை எடுத்து செல்லும் வித்தை அவரிடம் இருக்கிறது. இது தனித்துவமான ஒரு வித்தை, ஒரு நாவலை போன்று திரைப்படத்தை கையாளும் யுக்தி இது. ராதிகாவின் ஒப்பனிங் காட்சி, பல கேங்க்கள், கபடி ஆட்டம் என திரைக்கதையின் ஆரம்பம் பரபரவென தொடங்குகிறது. ஒரு ராவான கேங்ஸ்டர் படத்திற்கான அத்தனை அம்ஷங்களும் அழகாய் பொருந்திய ஒரு திரைப்படமாக வரவேண்டிய அனைத்து…
Read More
பொய்க்கால் குதிரை எப்படி இருக்கு?

பொய்க்கால் குதிரை எப்படி இருக்கு?

நடிகர்கள்: பிரபுதேவா, ரைசா வில்சன், வரலக்‌ஷ்மி சரத்குமார் இசை: இமான் இயக்கம்: சந்தோஷ் பி. ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி, இரண்டா குத்து போன்ற ஏ சான்றிதழ் படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் படத்துக்கு பிறகு மீண்டும் U சான்றிதழ் படமாக இயக்கி உள்ள இந்த பொய்கால் குதிரை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். விபத்து ஒன்றில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் நாயகன். ஒரு கால் இல்லாமல் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என வாழ்ந்து வரும் அவருக்கு, ஒரு நாள் திடீரென மகளுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது, அதை பல லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது தெரிய வருகிறது. பணத்திற்காக பணக்கார குடும்பத்தின் வாரிசை கடத்தி பணம் பரிக்க திட்டம் போடுகிறார். அந்த திட்டம் எப்படி பல சிக்கலுக்குள் சிக்குகிறது என்பதே…
Read More