“பேப்பர் ராக்கெட்” இணைய தொடர் விமர்சனம் !

இயக்குநர்கிருத்திகா உதயநிதி

நடிப்பு  காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன்,

ஜீ5 ஒரிஜினலாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தொடர்.

வாழ்வை கற்றுத்தரும் அழகான 7 எபிஸோடுகள் கொண்ட பயணம்

தன் தந்தை இறப்பிற்கு பிறகு மனமுடையும் இளைஞன், பிரச்சனைகளில் சிக்கி வாழ்வை வெறுத்து சிகிச்சைஎடுத்து கொண்டிருக்கும் சிலரை கூட்டிக்கொண்டு ஒரு பயணம் கிளம்புகிறான். அந்த பயணத்தில் அவர்கள்வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் அவர்கள் குணங்களிலும் மனங்களிலும் ஏற்படும் மாற்றமே இந்த பேப்பர்ராக்கெட்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பெரிய மாற்றம் பெரும் வாழ்வியல் தத்துவங்களை ஒரு கதைக்குள் அடக்கிஅதை ரசிக்கும் படி சொல்லி ஜெயித்திருக்கிறார்.

கோரோனா கால கட்டம் நம் கண் முன் பலரது வாழ்வை அடித்து சென்றுவிட்டது. பலர் மறைந்து விட்டனர் நாம்ஏன் வாழ்கிறோம் எனும் கேள்வியும் மன அழுத்தமும் பலரிடமும் இருக்கிறது. அதற்கெல்லாம் பதில் இந்ததிரைக்கதையில் இருக்கிறது.

ஒவ்வொரு எபிஸோடும் மிக அழகாக ஒரு கதையையும் அதில் நமக்கு  ஒரு படிப்பினையையும் இணைந்துசொல்கிறது.

முடம் முடக்கி போடாது முடங்கிவிடாதீர்கள். இறப்பு ஒரு நிகழ்வு கலங்காதீர்கள், பணம் மட்டுமே வாழ்க்கைஅல்ல என ஒவ்வொரு எபிஸோடும்  ஒரு தத்துவம் சொல்கிறது.

காளிதாஸ் ஜெயராம் நாயகன் மனிதர் கேரக்டரை புரிந்து கொண்டு கலக்கியிருக்கிறார். பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணாக தன்யா கோபம் கொப்பளிக்க பொங்குவதும், காளிதாஸ் மீதான அன்பில்உருகுவதும் தேவதையாய் கவர்கிறார். கருணாகரன் தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். ரேணுகா நிர்மல் பாலாழிமனதை கொள்ளை கொள்கிறார்கள் பலர் ஒற்றை எபிஸோடில் வந்தாலும் கலக்கியிருக்கிறார்கள்.

ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில் பல ஊர்களை சுற்றிக்காட்டுகிறார்.  லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் கச்சிதம். தமிழ்ஓடிடிக்கு சரியான கதையாக மிளிர்கிறது  பேப்பர் ராக்கெட்.

அங்கங்கே காட்சிகளில் பழைய நெடி அடித்தாலும் முழுதாய் ஒரு நிறைவான பயணம்