தி லெஜண்ட் விமர்சனம்

தி லெஜெண்ட் திரை விமர்சனம்

இயக்கம் – ஜேடி – ஜெரி
நடிப்பு – சரவணா, கீத்திகா திவாரி

சில பல விளம்பரங்களுக்கு, விமர்சனங்களுக்கு பிறகு,
சரவணன் அருள் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார்.

சரவவணன் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.

ஜேடி கேரி ஒரு முன்னணி நட்சத்திரத்திற்கு எப்படி படம் செய்வார்களோ அதே போல் ஒரு செட்டப்பை உருவாக்கியிருக்கிறார்கள்

வெளிநாட்டிலிருந்து வரும் விஞ்ஞானி சர்க்கரை நோயுக்கு இலவச மருந்து கண்டுபிடிக்க முயல்கிறார். மருந்து மாஃபியா அவரை தடுக்க நினைக்கிறது அதை முறியடித்து எப்படி ஜெயிக்கிறார் என்பதே படம்.

ரஜினியின் சிவாஜி படத்தினுடைய மினி வெர்ஷன் போல் தான் படம் இருக்கிறது.

படம் முழுக்க பணமும் பிரமாண்டமும் தெரிகிறது. பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட
பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது.

பாலிவுட் நடிகை Urvashi Rautela-வின் நடிப்பு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. படத்தில் வில்லனாக சுமன் வருகிறார். அவர் வழக்கம்போல் கமர்சியல் கதைக்கேற்ப வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்

லெஜெண்டை தவிர்த்து அனைவரும் அவரவர் பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

அருள் சரவணன் முகம் முழுக்க மேக்கப், முக பாவனை நடிப்பு அவருக்கு ஏனோ வரவில்லை, நடையில் கூட ஒரு ரோபோத்தனம், ஆனால் இது எல்லாவற்றையும் தாண்டி இவர் இவ்வளவு செய்வதே பெரிய விசயம் என்பதில் கவர்கிறார்.

ஒளிப்பதிவு, இசை இரண்டும் படத்தை தாங்கி பிடிக்கின்றன. திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இந்தப்படத்தை கொண்டாடும் மனநிலையில் வரும் இளைஞர்களுக்கு தேவையானதை படம் தந்துள்ளது.

அண்ணாச்சி மக்களுக்காக வசனம் பேசும்போது ஏனோ அங்காடி தெரு காட்சிகள் மனதில் வருவதை தடுக்க முடியவில்லை.

அண்ணாச்சி இந்தப்படத்தில் தான் நினைத்ததை நிறைவேற்றி விட்டார் அடுத்த படம் நடிப்பாரா என்பதில் தான் அவர் திரை வாழ்க்கை இருக்கிறது.