ஜீவி 2 விமர்சனம்???

 

இயக்கம் – கோபிநாத்

நடிகர்கள் – வெற்றி, கருணாகரன், மைம் கோபி

கதை – நல்ல வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டோம் என நாயகன் நினைக்கையில் அவனுக்கு மீண்டும் பண நெருக்கடி ஏற்பட, திருட நினைக்கிறான் முக்கோண விதி மீண்டும் அவனை சூழ்கிறது அதிலிருந்து மீள்கிறானா ? என்பதே கதை.

ஜீவி முதல் பாகம் ஒரு சர்ப்ரைஸ். ஒரு மிக சாதாரணமான கதையை முக்கோண விதி என்பதை புகுத்தி ஃபேண்டஸி வகையில் நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்திருந்தார்கள். இப்போது அதன் இரண்டாம் பாகம் வந்திருக்கிறது.

முதல் பாகம் முடிந்த அதே இடத்தில் படம் ஆரம்பிக்கிறது. இந்தப்படத்திலும் நாயகன் திருட நினைக்க முக்கோண விதி அவனை சூழ்கிறது. அவன் அதிலிருந்து வெளிவர நண்பனை கொலை செய்தது யாரென கண்டுபிடிக்க முயல்கிறான்.

படத்தின் திரைக்கதை மோசமில்லை பரபரவென்று நகர்கிறது. வெற்றி நடிப்பில் நல்ல முன்னேற்றம் மொத்த படத்தையும் தாங்குகிறார். கருணாகரன் பல இடங்களில் இளைப்பாற வைக்கிறார். மைம் கோபி பாத்திரத்தில் பொருத்தம். நாயகி கொடுத்த வேலையை செய்துள்ளார்.

படம் சூடுபிடிடிக்க இடைவேளை வந்துவிடுகிறது. அதன் பிறகு தான் படமே. முக்கோண விதி முதல் படத்திலேயே சொல்லி விட்டார்கள் இதில் புதுசாக இருக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் அதே விதி அதே கதை அவ்வளவே. ஆனால் அதையும் பதட்டம் குறையாமல் சொன்னதில் ஈர்த்துள்ளார்கள்.

கேம்ராவும் இசையும் கச்சிதமாக படத்துக்குள் பொருந்தியிருக்கிறது. சின்ன படஜெட் படமென்பது மேக்கிங்கில் தெரிகிறது.

ஜீவி திரில்லர் விரும்பிகள் கண்டிப்பாக பார்க்கலாம்.