சியானின் கோப்ரா எப்படி இருக்கு?

கோப்ரா

இயக்கம் – அஜய் ஞானமுத்து

நடிகர்கள் – விக்ரம் , ஶ்ரீனிதி ஶ்ரீஷெட்டி, மிருணாளினி, இர்ஃபான் பதான்.

சர்வதேசமாக கூலிக்கொலையாளியாக செயல் படும் மேத் ஜீனியஸ் அவனை தேடும் போலீஸுக்கு ஒருவன் துப்பு கொடுக்கிறான். நிஜ வாழ்வில் அநாதை இல்ல வாத்தியாராக இருக்கும் நாயகனின் அடையாளம் கல்யாண நாளுக்கு முதல் நாள் உடைந்து விட, உடைத்தது யார் என நாயகன் தேட ஆரம்பிக்கிறான் அவன் கண்டுபிடித்தானா ? இதற்கிடையில் போலீஸ் அவனை பிடித்ததா ? வில்லன் இவர்களை பிடித்தானா என்பதே கதை.

ஆளவந்தான், வில்லன் என இரு படங்களில் வந்த கதையை கொஞ்சம் மசாலா தூவி பிரமாண்டம் சேர்த்து சமைத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் நீளமும் குழப்பமான திரைக்கதையும் படத்திம் பெரு மைனஸாக அமைந்திருக்கிறது. படத்தின் பிரமாண்டம் மலைக்க வைக்கிறது ஆனால் இது தேவையா என யோசித்திருந்தால் பல காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும்.

ஆரம்பத்தில் காட்டும் பிரமாண்டமான கொலை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது, ஆனால் அடுத்தடுத்து வரும் காட்சிகள் கொட்டாவிவிட வைக்கிறது. விக்ரம் வழக்கம்போல் உயிரை தந்து நடித்திருக்கிறார். போலீஸ் விசாரணை காட்சி உண்மையில் பிரமிப்பு தருகிறது.ஆனால் அவர் இத்துடன் மாறு வேஷம் போடுவதை நிறுத்துவது நல்லது.

ஶ்ரீனிதி, மீனாக்‌ஷி இருவரை விட இரண்டாம் பாதியில் வரும் மிருணாளினி ஈர்க்கிறார். ஶ்ரீனிதி கல்யாண பாடலில் மட்டும் கவர்கிறார்.

ஒரு நல்ல காட்சி பத்து மொக்கை காட்சி என்பதாக படம் நகர்கிறது. ஷங்கர் ஸ்டைல் படமெடுக்கலாம் ஆனால் அதில் திரைக்கதையை எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் அமைக்க வேண்டும். ரோபோ ஷங்கர், ஆனந்தராஜ் பலர் காணாமல் போய்விடுகிறார்கள்.

ஒளிப்பதிவு இசை எடிட்டிங் அத்தனையும் ஒரு ஹாலிவுட் படத்தை பார்க்கும் உணர்வை தருகிறது. ஆனால் கதை தான் அதை பயன்படுத்திகொள்ளவில்லை.

கோப்ரா நல்ல முயற்சி ஆனால் இலக்கை எட்டாத முயற்சி.