எமோஜி இணைய தொடர் எப்படி இருக்கிறது ?
இயக்கம் – ரங்கசாமி
நடிகர்கள் – மஹத் , மானஷா சௌத்திரி, தேவிகா சதீஷ்
ஒரு இளைஞனின் காதல் செக்ஸ் பயணமும் நினைவுகளும் தான் எமோஜி. ஆம் படித்தது சரி தான் செக்ஸ் பயணம். செக்ஸ் காட்சிகளை வல்கர் இல்லாமல் திரையில் காட்டுவது ஒரு கலை. அந்த வகையில் அடல்ட் காமெடியில் உணர்வு பூர்வமான காமெடி டிராமா என்றவுடன் நிமிர்ந்து ஆவலுடன் அமரும் நம்மை சோதிக்கிறது இந்த தொடர்.
அடல்ட் காமெடி கத்தி மேல் நடப்பது போன்றது. விகாரமில்லாமல் நம்மை சிரிக்க ரசிக்க வைக்க வேண்டும். ஆனால் இது எதற்கும் இவர்கள் கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லை.
ஒவ்வொரு எபிஸோடும் ஒரு பெண்ணை மடக்குவதும் அவர்களுக்குள்ளான தழுவல்களுமாக செல்கிறது கதை. இம்மி அளவிற்கு கூட எங்கும் சுவாரஸ்யம் இல்லை. திரைக்கதை கடுமையான அயர்ச்சியை தருகிறது.
நடிப்பு, மேக்கிங் இசை டப்பிங் என எதிலும் மெனக்கிடல் இல்லை.
ஆனால் கொஞ்சம் காமெடி, நிறைய செக்ஸ் ஜோக்குகள் இருக்கிறது அது பிடிக்குமென்றால் நீங்கள் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.