16 வருடங்களுக்கு முன்னால் தடயங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் மூடப்பட்ட ஒரு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுக்கும் ஒரு புது காவல்துறை அதிகாரி, அந்த வழக்கை விசாரிக்கும் போது சந்திக்கும் அமானுஷ்யம் நிறைந்த சம்பவங்கள் தான் கதை.
5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்து இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இதன் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தில் அருள்நிதியுடன் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து, தணிகை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராஜா சேதுபதி படத்தொகுப்பினை செய்துள்ளார். ரோன் ஏதன் யோஹன் இசையமைத்து உள்ளார்.
படத்தின் கதையும், கதையில் இருக்க கூடிய சில தருணங்களும் சுவாராஷ்யம் நிறைன்டஹ் ஒன்றாக தான் இருக்கிறது. பீட்சா, டிமாண்டி காலனி திரைப்படங்கள் போன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அள்ள கூடிய அனைத்து அம்சங்களும் இந்த திரைப்படத்தில் இருந்தும், அந்த இடத்தை அடைய முடியாமல் திரைப்படம் தள்ளாடுகிறது. அதற்கு காரணம் படத்தின் திரைக்கதை தான்.
கதையை ஆரம்பிக்கும் இடமும், ரசிகர்களுக்கு கொடுக்க கூடிய தகவல்களும் ஆரம்பத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் சிறிது ஏமாற்றம் வருகிறது. நேர்த்தியான திரைக்கதை அமைக்கபடாத காரணத்தால் சிறப்பாக வரவேண்டிய திரைப்படம் தொங்கலில் நிற்கிறது. ஆனால் படத்தில் பல சுவாரஷ்யமான அம்சங்கள் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்துகிறது.
பேய் கதையா, கிரைம் திரில்லர் கதை, ஒரு விசாரணை கதையா என யோசிக்க வைக்க கூடிய அளவிற்கு அனைத்து பாதைகளிலும் திரைப்படம் பயணித்து வருகிறது. திரில்லர் படத்திற்கே உண்டான டிவிஸ்டுகள் சுவாரஷ்யமான முறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்தாக அருள்நிதி படத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறார். பல திரில்லர் படங்களில் நடித்த அனுபவம், அவரை திரில்லர் படங்களுக்கு உண்டான ரியாக்சன்களை கொடுக்க உதவுகிறது. ஆனால் பல திரில்லர் படங்கள் அவர் நடிப்பதால், அவருடைய நடிப்பு நாம் கணிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
இந்த படத்தின் தலைப்பு தான் படத்துடன் ஒன்றி போகவே இல்லை, தலைப்பை பதிவு பண்ணியே ஆக வேண்டும் என்று ஒரு காட்சி வைத்து, அது திரைப்படத்துடன் ஒட்டவே இல்லை.
ஆனால் இந்த திரைப்படம் பொது பார்வையாளர்களுக்கு ஒரு புது அனுபவமாக தான் இருக்கும். நிச்சயமாக தியேட்டரில் பார்க்க கூடிய அளவிற்கு தகுதியான படம் தான் இந்த டைரி.