வி3 என்ன சொல்ல வருது?

வி3 என்ன சொல்ல வருது?

Team A Ventures தயாரிப்பில் அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள "வி3" படத்திற்கு ஆலன் செபாஸ்டியன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆடுகளம் நரேன் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். ஒரு நாள் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய பாவனா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பாவனாவுக்கு நீதி கேட்டு போராட்டம் வெடித்தது. இந்த வழக்குஅரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி 5 இளைஞர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். என்கவுண்டர் செய்யப்பட்ட ஐந்து பேரின் உடலையும் அவர்கள் பெற்றோர் கேட்க, அதற்கு காவல்துறை மறுக்கிறது. பின்னர் இது பெரும் சர்ச்சையாக வெடிக்க, மனித உரிமை ஆணையம் இந்த வழக்கிற்குள் வருகிறது. மனித உரிமை அதிகாரியாக வரலக்ஷ்மி சரத்குமார் இந்த வழக்கை விசாரித்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். படத்தின் அனைத்து…
Read More
டிரைவர் ஜமுனா திரை விமர்சனம் !!

டிரைவர் ஜமுனா திரை விமர்சனம் !!

இயக்கம் - கிங்ஸ்லின் நடிகர்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சினி, மணிகண்டா, கவிதா பாரதி ஒரு பெண் கால் டாக்ஸி ஓட்டுனர் கூலிக்கு கொலை செய்யும் ஆட்களிடம் ஒரு டிரிப்பில் மாட்டிக்கொள்கிறார். வேறொரு பக்கம் முன்னாள் எம் எல் ஏவை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. போலீஸ் அந்தகொலையாளிகளை பிடிக்க நினைக்கிறது இந்த கதைகள் எப்படி இணைகிறது.  இறுதியில் என்ன ஆனதுஎன்பதே படம். தந்தையை இழந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அவரின் கால் டாக்ஸி ஓட்டுநர் பணியை தன் கையில் எடுத்துக்கொள்கிறார். வீட்டை அடைமானம் வைத்துவிட்டு ஓடிய தம்பி, வியாதியால் அவதிப்படும் அம்மா எனப்போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் ஓட்டுநராக தன் தொழிலைச் செய்கிறார்.  அரசியல்வாதியான ஆடுகளம் நரேனைக் கொலை செய்யக் கிளம்பும் ஒரு கூலிப்படை, ஐஸ்வர்யா ராஜேஷின்கால் டாக்சியில் ஏறுகின்றனர்.  அந்தக் கூலிப்படையைத் துரத்தி வரும் காவலர்களால் ஐஸ்வர்யா ராஜேஷ்என்னவானார், கூலிப்படையின் திட்டம் நிறைவேறியதா என்பதே படம் .. ஒரு…
Read More
ஆஹாவின் அடுத்த படைப்பான உடன்பால் எப்படி இருக்கு!

ஆஹாவின் அடுத்த படைப்பான உடன்பால் எப்படி இருக்கு!

ஒரு திரைப்படம் பார்க்க இப்போது வழிகள் பல வந்துவிட்டன. திரையங்கு மட்டுமே செல்ல வேண்டிய அவசியமில்லை மொபைல் திரை வீட்டு திரை வரை சினிமா வந்துவிட்டது. ஆனால் ஓடிடிக்கான திரைப்படம் திரையரங்குக்கான திரைப்படம் வேறு இந்த வேறுபாடை அதற்கான கதைகளை கண்டடைவதில் தான் தமிழ் சினிமா தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை சொல்லியடித்து ஜெயித்திருக்கிறது உடன்பால். இப்படம் ஓடிடி படம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு அட்டாகாசமான உதாரணம். சார்லியின் மகனும் மகளும் சேர்ந்து பணக்கஷ்டத்தில் அவர்கள் வாழும் வீட்டை விற்றுத்தர கேட்கிறார்கள் சார்லி மறுத்து விட்டு வேலைக்கு செல்ல அவர் வேலை பார்க்கும் பில்டிங் இடிந்து ஆக்ஸிடெண்ட் ஆகிறது. அங்கு இறந்தவர்களுக்கு அரசு 20 லட்சம் தருகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன் மொத்தமும் தலைகீழாக மாறுகிறது அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து ஆச்சர்ய திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள். பெரியவர்களை மதிப்பது உறவுகளின் மீதான அன்பு எல்லாம்…
Read More
நாய் சேகர் ரிட்டன்ஸ் எப்படி இருக்கு!

நாய் சேகர் ரிட்டன்ஸ் எப்படி இருக்கு!

நாய் சேகர் கேரக்டரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலுவிற்கு இந்த படம் சிறப்பானதாக அமைந்ததா என்று பார்க்கலாம். நாய் கடத்தல்காரன் என்ற கதாபத்திரத்தில், தனது கேங்க் ஓடு வரும் வடிவேலுவின் அதகளத்தை எதிர்பார்த்து உட்கார்ந்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால், ஆனந்தராஜின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. மேலும் வடிவேல், ஆனந்த்ராஜ் இருவரின் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தவிர படத்தில் ஈர்க்கும் படி எதுவும் இல்லை. இப்படத்தில் ஷிவானி நாராயணன் வில்லன் மேக்ஸின் சகோதரியாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் தான் வருகிறார். ஷிவானியின் நடிப்பு பாராட்டுக்குரியது. படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் இயக்குனர் கதைக்களத்தில் தொலைந்துவிட்டார். பின்னணி இசை படத்துக்குக் கைகொடுக்கிறது. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கின்றன. ஆனால், படம் தான் வடிவேலு நினைத்தபடி ஆடியன்ஸ் மனதில் ஒன்றவில்லை. படத்தில் ஒரு சில நகைச்சுவை…
Read More
வதந்தி திரை விமர்சனம் !!

வதந்தி திரை விமர்சனம் !!

  அமேசான் ப்ரைமில் வந்திருக்கும் புதிய தொடர் இயக்கம் - ஆண்ட்ரூ லூயிஸ் நடிப்பு - எஸ்ஜே சூர்யா, லைலா, நாசர், சஞ்சனா ஒரு சிறு பெண்ணி கொலை அதன் விசாரணை அதை சுற்றிய உண்மைகளும் வந்தந்தியும் தான் கதை சுழல் வெற்றிக்கு பிறகு புஷ்கர் காயத்திரி உருவாக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது தொடர். ஒரு வகையில் இணைய தொடரின் இலக்கணத்தை தமிழில் அவர்கள் மட்டுமே சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இணைய தொடருக்கு ஒரு களம் வேண்டும் நிறைய பாத்திரங்கள் பின்னணி கிளை கதைகள் வேண்டும். அதை சரியாக புரிந்து இதிலும் சொல்லி அடித்திருக்கிறாரகள். ஒரு இளம்பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. மேன்சன் வைத்திருக்கும் லைலாவின் 18 வயது மகள் என்பது தெரிய வருகிறது. அதை விசாரிக்க எஸ்ஜே சூர்யா வருகிறார். அவரது விசாரணையில் பொய்யும் உண்மையும் மாறி மாறி வருகிறது. இறுதியில் எது ஜெயிக்கிறது என்பதே கதை. மக்களின் வாய்க்கு கொறிக்க எப்போதும்…
Read More
எப்படி இருக்கிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” திரை விமர்சனம் !!

எப்படி இருக்கிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” திரை விமர்சனம் !!

எப்படி இருக்கிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” திரை விமர்சனம் !! நடனத்தை வைத்து உருவாகியிருக்கும் முதல் இந்திய தொடர் என்ற அடையாளத்துடன் வந்திருக்கும் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” தொடர் எப்படி இருக்கிறது ? இயக்குநர் AL விஜய் உருவாக்கத்தில் பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ள இந்த தொடர் முழுக்க நடனத்தை பின்னணி கதைகளமாக கொண்டு உருவாகியுள்ளது. நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் சில டீனேஜ் சிறுவர்கள் நடன போட்டியில் கலந்து கொண்டு சாதிப்பது தான் கதை. AL விஜய் இதே கதையில் ஏற்கனவே பிரபு தேவா மற்றும் தித்யா நடிப்பில் ஒரு படம் எடுத்திருந்தார். இப்போது அதே கதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து முழு நீள தொடராக மாறியிருக்கிறது. கஷ்டபடும் குடும்ப பின்னணியில் வாழும் சிறுவர்கள் அவர்களின் ஆசை லட்சியமான நடனத்தில் சாதிக்க துடிக்கிறார்கள் அதற்கு வரும் தடைகளை தகர்த்தெறிந்தார்களா ? ஜெயித்தார்களா என்பது தான்…
Read More
ஆஹா ஒரிஜினலாக வந்து இருக்கும் ” பேட்டைக்காளி” எப்படி இருக்கு?

ஆஹா ஒரிஜினலாக வந்து இருக்கும் ” பேட்டைக்காளி” எப்படி இருக்கு?

பேட்டைக்காளி இயக்கம் - ராஜ்குமார் நடிப்பு - கலையரசன், லீலா அண்ணனுக்கு ஜே மூலம் கவனம் ஈர்த்த ராஜ்குமார் பேட்டைக்காளி எடுத்திருக்கிறார். ஒரு படமாக வந்திருக்க வேண்டியது கதையின் டீடெயில்களால் வெப் சீரிஸாக மாறியிருக்கலாம். ஜல்லிக்கட்டு அதன் பின்னணி அதிலுள்ள வன்மம் அன்பு நடைமுறை பழக்க வழக்கம் இதெல்லாம் இணைந்தது தான் இந்த சீரிஸ். பண்ணை குடும்பத்திற்கும், அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையில் இருந்து தொடங்குகிறது கதை. நிலம் கேட்ட கூலிப்பணியாளர்களை விரட்டியடிக்கும் பண்ணையாரின் பகை, தலைமுறைகளாக தொடர்கிறது. நிலமின்றி, பணியின்றி அகதிகளாக தனித்து வாழும் விவசாய கூலிகளுக்கு தலைமை ஏற்கிறார் கிஷோர். மலைகாட்டில் வசிக்கும் அவர்களுக்கு காட்டு மாடுகளின் தலைவன் மாடு கிடைக்கிறது. அதை கட்டிப் போடும் போது, அதை தேடி வரும் மாட்டுக் கூட்டத்தை வைத்து தங்கள் தொழிலை தொடங்குகிறார்கள் விவசாய கூலிகள்.   இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம், கவுரவம், ஆதிக்கம்…
Read More
‘செஞ்சி ‘ திரைப்பட விமர்சனம்

‘செஞ்சி ‘ திரைப்பட விமர்சனம்

கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம்.கதை எழுதி ,இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது . ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது.18-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. ஒரு புதையல் வேட்டை சார்ந்த கதையாக உருவாகி இருக்கும் படம் தான் செஞ்சி. பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ரசித்து ரசித்துப் பார்க்கிறாள் .ஆனால் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. எவ்வளவு தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது. அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை…
Read More
வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிர்களை ஈர்த்த பரோல்!

வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிர்களை ஈர்த்த பரோல்!

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “பரோல்” தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். தொடர் குற்றங்கள் மூலம் குற்றவாளியாக சிறைவாசம் அனுபவிக்கும் அண்ணன், அண்ணன் மீது துளியும் ஈர்ப்பு இல்லாமல் கோபத்தில் இருக்கும் தம்பி என இரண்டு கதாபத்திரங்களின் வாழ்கை தான் கதை . இவ்விருவரின் தாய் இறக்க, அவர்களுடைய இறுதி சடங்கிற்கு அண்ணன் வர வேண்டும் என சுற்றி இருந்தோர் கூற, அதற்காக தனக்கு பிடிக்காத அண்ணனை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர பரோல்-க்கு முயற்சிக்கும் தம்பி. அதனால் அவன் சந்திக்கும் சிக்கல்கள் என்ன என்பதை வித்தியாசமான கதையமைப்பின் மூலம் கூற வருகிறது 'பரோல்' திரைப்படம். படத்தில் அண்ணன் தம்பியாக லிங்கா- கார்த்திக்யை தேர்ந்தெடுத்தது, முதல் பலம். இருவரும்…
Read More
எப்படி இருக்கிறது காந்தாரா!!!!

எப்படி இருக்கிறது காந்தாரா!!!!

காந்தாரா இயக்கம் - ரிஷப் ஷெட்டி நடிகர்கள் - ரிஷப் செட்டி, கிஷோர், அஜ்யுத் குமார். எளிய மக்களின் நிலம் பறிக்க போடப்படும் திட்டம், குடைச்சல் கொடுக்கும் அரசாங்கம், பண்ணையார் மக்களுக்கு மீண்டும் நிலமும் உரிமையும் வந்து சேர்வது காலம்காலமாக திரையில் சொல்லப்பட்ட இந்த கமர்ஷியல் கதையில் நாட்டார் வழக்கு கதையை இணைத்து மிக அற்புதமான அனுபவமாக மாற்றியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தின் மிகப்பெரும் பலம் படத்தின் பின்னணி கதைக்களம் கதை மாந்தரகள் அதை திரையில் கொண்டு வந்த விதம் தான். பூர்வகுடி மலைவாழ் மக்கள் அவர்களின் சடங்குகள், நம்பிக்கை, அவர்களின் வாழ்வியல் எல்லாம் படத்தில் அச்சு அசலாய் உயிரிபிக்கப்பட்டிருக்கிறது. எருமை ரேஸ், கோலா திருவிழா, பன்றி வேட்டை ஒவ்வொன்றும் சினிமாவுக்கே புதுசு. இதை திரையில் கொண்டு வந்ததில் தொழில் நுட்ப குழு மொத்தமாக போட்டி போட்டு உழைத்திருக்கிறார்கள். திரையில் வைத்த கண்னை எடுக்க முடியவில்லை. கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும்…
Read More