சினம் திரை விமர்சனம் !!!

 

இயக்கம் – GNR குமரவேலன்

நடிகர்கள் – அருண் விஜய், காளி வெங்கட்

கதை – ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி அவரின் மனைவி திடீரென கொலையாக, தன் மனைவி மீதான களங்கத்தை போக்கி உண்மையான குற்றவாளியை கண்டறிய போராடுகிறார்.

இந்தப்படத்தின் ஒரே நல்ல விசயம் அருண் விஜய் காளி வெங்கட் இருவரின் நடிப்பு. அருண் விஜய் மிடுக்காக போலீஸ் பாத்திரத்திற்குள் உட்கார்ந்து கொள்கிறார். அவருக்கு எந்த பாத்திரமும் கன கச்சிதமாக பொருந்திப் போகிறது. மனைவி கொலைக்கு காரணமானவர்களை தேடுவது, மனைவையியை இழந்து சாடுவது என அனைத்து இடங்களிலும் அசத்துகிறார்.

காளி வெங்கட் தன் பாத்திரத்தோடு ஒன்றி அசத்தியிருக்கிறார். ஆனால் இந்தப்படம் இவர்கள் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லாமல் இருக்கிறது.

நாயகி நன்றாக நடித்தும் விழலுக்கு இறைத்த நீர்.

கதை திரைக்கதை காட்சிகள் சொல்லப்படும் அறம் என் அனைத்தும் மிக மோசமான அனுபவத்தை தருகிறது. ஒரு நல்ல கதை திரைக்கதையாலும் மிக மட்டமான மேக்கிங்கிலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

பல கமர்சியல் படங்களில் ஒரு காட்சியில் வரும் டிவிஸ்ட் மொத்த படத்தை எப்படி தாங்கும். கேமரா இசை என்ன வேண்டுமோ அதை தந்திருக்கிறது ஆனால் படம் நெளிய வைக்கிறது.

குப்பத்து ஆட்கள் விளிம்பு நிலை மனிதரகளை குற்றவாளிகளாக்கும் மனநிலை என்று தான் மாறுமோ ??

சினம் ஒர்ததில்லை