நடிகர்கள்: பிரபுதேவா, ரைசா வில்சன், வரலக்ஷ்மி சரத்குமார்
இசை: இமான்
இயக்கம்: சந்தோஷ் பி. ஜெயக்குமார்
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி, இரண்டா குத்து போன்ற ஏ சான்றிதழ் படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் படத்துக்கு பிறகு மீண்டும் U சான்றிதழ் படமாக இயக்கி உள்ள இந்த பொய்கால் குதிரை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
விபத்து ஒன்றில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் நாயகன். ஒரு கால் இல்லாமல் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என வாழ்ந்து வரும் அவருக்கு, ஒரு நாள் திடீரென மகளுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது, அதை பல லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது தெரிய வருகிறது. பணத்திற்காக பணக்கார குடும்பத்தின் வாரிசை கடத்தி பணம் பரிக்க திட்டம் போடுகிறார். அந்த திட்டம் எப்படி பல சிக்கலுக்குள் சிக்குகிறது என்பதே கதை.
ஒரு கால் இல்லாத கதாபாத்திரத்திற்கு ஓகே சொல்லி, அதில் நடிப்பதற்கு பிரபு தேவாவிற்கு பாராட்டுகளை கூற வேண்டும்.
ஒரு கால் இல்லாதவராகவும், மகள் வாங்கிக் கொடுக்கும் பிராஸ்தெடிக் காலுடன் நடிக்கும் காட்சிகளிலும், பாடல்களிலும், சண்டை காட்சிகளிலும் அசத்தி உள்ளார் பிரபு தேவா.
பிரபு தேவா மட்டுமே படத்தை தாங்குகிறார். மற்ற படி படத்தில் ஈர்க்கும் படி எதுவும் இல்லை. படத்தின் முதல் பாதி சுவாராஷ்யமான ஒன்றாக அமைக்க முயன்றாலும், பல கிளிசே காட்சிகள், நேர்த்தி இல்லாத மேக்கிங் என கொஞ்சம் போரடிக்க செய்கிறது. இரண்டாம் பாதி அதிலும் மோசம். டிவிஸ்டுகள் அவிழ்க்கிறேன் பார் என அமைக்கபட்ட காட்சிகள் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அதுவும் கிளைமேக்ஸ்க்கு முன் ஹீரோவும், வில்லனின் தாங்கள் போட்ட பிளான்களை கூறி டிவிஸ்டுகளை அவிழ்ப்பது தாங்க முடியாத ஒன்று. பேசுகிறார்கள், பேசுகிறார்கள் பேசிகொண்டே இருக்கிறார்கள்.
மொத்தத்தில் பிரபுதேவாவை தவிர படத்தில் ஒன்றும் இல்லை.