யாத்திசை திரைவிமர்சனம்

யாத்திசை திரைவிமர்சனம்

யாத்திசை திரைவிமர்சனம் இயக்கம் - தரணி ராசேந்திரன் நடிகர்கள் - குரு சோமசுந்தரம், சுபத்ரா, செம்மலர் அன்னம், சேயோன், சக்தி இசை - சக்ரவர்த்தி ஒளிப்பதிவு - மகேந்திரன் கணேஷ் தயாரிப்பு - கே ஜே கணேஷ் தமிழில் வரலாற்று படங்கள் மிக அரிது அதிலும் ராஜா காலத்தை காட்டும் விதத்தில் நம் முன்னோர்களின் வரலாறு பற்றி துளி உண்மை இருந்ததில்லை. இந்த ஏக்கத்தை போக்கும் விதத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான பதிவாக வந்திருக்கும் படம் தான் யாத்திசை. எயினர் என்ற மறைக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வியலையும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இடை சங்கப் பாண்டியர்களில் புகழ் பெற்ற மன்னனான ரணதீரனின் வாழ்க்கை வரலாற்றையும், மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த ‘யாத்திசை’. இதுவரை வெளிவந்த மன்னர் காலத்து படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்துள்ளது. நிலப்பரப்பு, கோட்டை, மொழி, ஆடை – அணிகலன்கள். ஆயுதம், போர், உணவு போன்ற அனைத்தும் ஏழாம்…
Read More
Sisu திரை விமர்சனம்

Sisu திரை விமர்சனம்

  எழுத்து, இயக்கம் - Jalmari Helander ஒளிப்பதிவு             - Kjell Lagerroos இசை                        - Juri Seppä, Tuomas Wäinölä ஃபின்லாந்தில் 1944 ல் ஜெர்மானிய ஹிட்லர் படைகள் பின்வாங்கும் காலகட்டத்தில் நடக்கும் கதை. ஜான் விக் டைப் ஆக்சன் படம், ஒரு முன்னாள் ராணுவ வீரனிடம் சில்மிசம் பண்ணும் ஜெர்மானிய படையை அவர் எப்படி அழிக்கிறார் திகட்ட திகட்ட ஆக்சனில் சொல்லியிருகிறார்கள். அனுபவம் வாய்ந்த சிப்பாயான Aatomi Korpi (Jorma Tommila) என்பவரை மையப்படுத்தி தான் இந்தக் கதை சுழல்கிறது . இப்படம், முதன்முறையாக டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ‘மிட்நைட் மேட்னஸ் (Midnight Madness)’ எனும் பிரிவில் திரையிடப்பட்டது. பின், ஜனவரி 27, 2023 அன்று ஃபின்லாந்தில் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்ட இப்படம், ஏப்ரல்…
Read More
தெய்வமச்சான் திரைவிமர்சனம்

தெய்வமச்சான் திரைவிமர்சனம்

  இயக்கம் - மார்டின் நிர்மல் குமார் நடிகர்கள் - விமல், அனிதா சம்பத், பால சரவணன். தன் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து, கல்யாணம் செய்ய ஆசைப்படும் விமல் அதற்கு தடையாக வரும் பிரச்சனைகள் அதை தாண்டி அண்ணன் என்ன செய்கிறார். களவாணி போல் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். விமலை மீண்டும் கலகலப்பாக பார்ப்பது ஆசுவாசமாக இருக்கிறது. ஆண்பாவம்,களவாணி மாதிரியான கதைக்களம் கொண்ட படம். ஆனால் திரைக்கதையின் சோர்வில் பாதியே கலகலப்பாக இருக்கிறது. சின்ன சின்னதா அங்கங்கே சிரிப்பு, ஊடால் பழைய பாணி செண்டிமெண்ட் காட்சிகள், ஆனால் படத்தின் பலம் எங்கும் போரடிக்கவில்லை என்பதே. கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் சுந்தர் சி பாணி கலக்கலான காமெடி படமாக வந்திருக்கும். விமல் தன் தங்கச்சி அனிதா சம்பத்தை பெண் பார்க்க வந்த கிழட்டு பண்ணையார்களான நரேனையும் அவர் தம்பியையும் விரட்டி அடிக்கிறார் .கோவமான அவர்கள் அனிதாவுக்கு ஓகே வான மாப்பிள்ளையோடு கல்யாணம்…
Read More
சொப்பன சுந்தரி கார யாரு வச்சிருக்கா

சொப்பன சுந்தரி கார யாரு வச்சிருக்கா

சொப்பன சுந்தரி திரை விமர்சனம் இயக்குனர் – எஸ் ஜி சார்லஸ் நடிகர்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ் , லக்ஷ்மி ப்ரியா , தீபா ஷங்கர் , கருணாகரன் ஒளிப்பதிவு – பால முருகன் , ராஜ கோபாலன் இசை – விஷால் சந்திரசேகர் தயாரிப்பு – பாலாஜி சுப்பு விவேக் , ரவிச்சந்த்ரன் அண்ணன் விட்டு சென்ற பின் குடும்பத்தை தனியாளாய் கட்டி காக்கும் பெண்ணின் கதை. வழக்கமான குடும்பகதைகளில் இருக்கும் முடியாத அம்மா, திருமணமாகாத அக்கா இவர்களை விட்டுவிட்டு தன் வாழ்கையை பார்க்க சென்றுவிடும் ஆண் பிள்ளை, குடும்பத்தை ஒற்றை ஆளாய் நின்று காக்கும் பெண் என்ற வழக்கமான சினிமா கதையாக இருந்தாலும், அதை மாற்றுவது சொப்பன சுந்தரி எனும் கார் தான். குடும்பத்தை தாங்கும் பெண்ணாக நடித்து இருக்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பரிசாக ஒரு கார் கிடைக்கிறது. அதை அபகரிக்க நினைக்கிறார் அவரின் சகோதரர், இறுதியில்…
Read More
திருவின் குரல் ஒலித்ததா?

திருவின் குரல் ஒலித்ததா?

திருவின் குரல் விமர்சனம் ! இயக்குநர் - ஹரிஸ் பிரபு நடிகர்கள் - அருள்நிதி , பாரதிராஜா , ஆத்மிகா ஒளிப்பதிவு - சின்டோ பொடுதாஸ் இசை - சாம் சி எஸ் தயாரிப்பு - லைகா சுபாஸ்கரன் இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் பாரதிராஜா, அருள்நிதி நடித்துள்ள படம் தான் “திருவின் குரல். கோபக்கார இளைஞன் அவன் குடும்பத்திற்கு ரௌடிகளால் வரும் பிரச்சனை அதை முறியடித்து அவன் ஜெயிக்கும் ஆதி காலத்து கதை. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்திருக்கிறார். அதோடு ராபர்ட், மோனிகா சிவா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்து லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு அழகான குடும்பம் திடீரென நடக்கும் ஒரு விபத்து, அரசு மருத்துவமனையில் அருள் நிதிக்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாரதிராஜாவுக்கு போலியான மருந்து போடப்படுகிறது. அதே போல அந்த மருத்துவமனையில் நடக்கும் சில கொலைகளை அவரது குடும்பத்தில் இருக்கும்…
Read More
சொப்பன சுந்தரி காரை யாரு வச்சுருக்கா?

சொப்பன சுந்தரி காரை யாரு வச்சுருக்கா?

சொப்பன சுந்தரி திரை விமர்சனம் இயக்குனர் - எஸ் ஜி சார்லஸ் நடிகர்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ் , லக்ஷ்மி ப்ரியா , தீபா ஷங்கர் , கருணாகரன் ஒளிப்பதிவு - பால முருகன் , ராஜ கோபாலன் இசை - விஷால் சந்திரசேகர் தயாரிப்பு - பாலாஜி சுப்பு விவேக் , ரவிச்சந்த்ரன் தன்னுடைய உடன் பிறந்த அண்ணன் கல்யாணத்துக்கு பின் குடும்பத்தை கைவிட்டு விட, தனது அம்மா , வாய் பேச முடியாத அக்கா, படுத்த படுக்கையாக கிடக்கும் அப்பா ஆகியோரை வைத்துக்கொண்டு ஒரு நகைக்கடையில் பணிபுரிந்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.இந்த நிலையில்தான் அவருக்கு தங்க நகைக்கடை மூலமாக கார் ஒன்று பம்பர் பரிசாக கிடைக்கிறது. இதைத்தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் அதை அபகரிக்க முயற்சிக்கிறார்.காரை தனதாக்கி கொள்ள முயற்சிக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம். இறுதியில் அந்தக்கார் யாருக்குச் சென்றது?அதனால் வந்த…
Read More
சாகுந்தலம் திரை விமர்சனம்!!

சாகுந்தலம் திரை விமர்சனம்!!

காளிதாசரால் எழுதப்பட்ட ‘சாகுந்தலம்’ எனும் புராணக்கதை தான் சமந்தா நடிப்பில் பிரமாண்டமாக வந்திருக்கிறது. தெலுங்கில் புகழ் பெற்ற   இயக்குநர் குணசேகர் இயக்கியிருக்கிறார். சாபத்தால் பிரிந்த காதல் எப்படி விமோசனம் பெற்றது என்பது தான் கதை. காட்டுக்குள் அநாதையாக கிடக்கும் குழந்தைக்கு ‘சாகுந்தலம்’ எனப்பெயரிட்டு வளர்க்கிறார் கண்வ மகரிஷி. ரிஷி ஆஸ்ரமம் இருக்கும் காட்டு பகுதியில் சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவைப் பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சாகுந்தலாவும் துஷ்யந்தனை காதலிக்கிறாள். இருவரும் யாருக்கும் தெரியாமல் மணமுடித்துக்கொள்ள, விரைவில் வந்து அழைத்துச் செல்கிறேன் என கூறி துஷ்யந்தன் ஹஸ்தினாபுரம் திரும்புகிறான். வாக்களித்தபடி துஷ்யந்தன் வந்தாரா? இல்லையா? சாகுந்தலாவின் காதல் என்னவானது? என்பதுதான் படத்தின் கதை. ஒரு புராணக்கதை அதுவும் காதல் கதை இப்போது இவ்வளவு பிரமாண்டத்தில் ஏன் சொல்லப்பட வேண்டும். இந்தக்காலத்திற்கு ஏற்றவாறல்லாமல் முழு…
Read More
The Pope’s Exorcist – Review

The Pope’s Exorcist – Review

போப்பின் எக்ஸார்சிஸ்ட் அமெரிக்க அமானுஷ்ய திகில் திரைப்படம் ஜூலியஸ் அவேரி இயக்கியுள்ள இப்படத்தில் ரஸ்ஸல் குரோவ் தந்தை கேப்ரியல் அமோர்த் ஆக நடித்திருக்கிறார். இப்படத்தில் டேனியல் சோவாட்டோ , அலெக்ஸ் எஸ்ஸோ மற்றும் ஃபிராங்கோ நீரோ ஆகியோரும் நடித்துள்ளனர் . 1980 களில் வாடிகனில் போப்பாக இருந்து, பல பேய்களை ஓட்டி எக்ஸார்சிசம் செய்தவரின் டைரிக்குறிப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம். ரஸ்சல் குரோ நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடித்திருக்கும் படம். தந்தையில்லாத ஒரு குடும்பம் அவர்களது சொந்த ஊரிலிருக்கும் மேன்சனை விற்க ஸ்பெயின் வருகிறது. அந்த வீட்டில் இருக்கும் பேய் சிறுவனைப் பிடித்து கொள்கிறது. வாடிகனை மொத்தமாக அழிக்க நினைக்கும் பேய் போப் கேப்ரியலை அழைக்கிறது அவர் வந்து பேய் ஓட்டினாரா இல்லையா என்பதே படம். பேய் படங்களுக்கு உண்டான அத்தனை டெம்ப்ளேட்டும் படத்தில் இருக்கிறது. ஆனால் லாஜிக் இல்லாமல் சத்தம் வைத்து பயமுறுத்துவது, கதவு சாத்துவது, திடீரென திரும்புவது போன்ற…
Read More
விடுதலை – விமர்சனம்!

விடுதலை – விமர்சனம்!

அடிப்பவர்களாகவும் அடி வாங்குபவர்களாகவும் தோன்றியவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும். இவர்களை எல்லாம் பொம்மைகள் போலக் கையாண்ட வகையில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். ஒளிப்பதிவில் வெவ்வேறு சாதனங்களை வேல்ராஜ் பயன்படுத்தியிருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.சில சோதனை முயற்சிகள் ‘சோதனை’களாகவே அமைந்த காரணத்தால் உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன. அதையும் மீறி, கதை நடக்கும் களத்தை அழகுறக் காட்டாமல் ஒரு பாத்திரமாகவே தென்பட வைத்தமைக்கு பாராட்டுகள்! கதை பரபரப்பாக நகர்ந்தாலும், ஒவ்வொரு பிரேமையும் சீர்மையுடன் கோர்க்க வேண்டுமென்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர். இந்திய அளவில் கவனிப்பு பெறும் வகையில் இப்படம் வரவேற்பைப் பெற்றால், அதில் இவரது உழைப்பும் முக்கியப் பங்கு வகிக்கும். ஜாக்கியின் கலை வடிவமைப்பு, ஸ்டன் சிவா மற்றும் பீட்டர் ஹெய்ன் குழுவினரின் சண்டைக்காட்சிகள், ஒலிக்கலவை மற்றும் விஎஃப்எக்ஸ் உட்படப் பல தரப்பிலும் கொட்டப்பட்ட பேருழைப்பே ஒவ்வொரு பிரேமையும் செறிவானதாக மாற்றியுள்ளது. முழுப்படத்தையும் பார்த்து முடித்துவிட்டு, தனது இசையை ஒரு பாத்திரமாக…
Read More
நானியின் தசரா, கொண்டாட்டமா? குழப்பமா?

நானியின் தசரா, கொண்டாட்டமா? குழப்பமா?

தசரா திரைவிமர்சனம் இயக்கம் - ஸ்ரீகாந்த் ஒடேலா நடிகர்கள் - நானி ,கீர்த்தி சுரேஷ் , சமுத்திரக்கனி ஒளிப்பதிவு - சத்யன் சூரியன் இசை - சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு - ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தசரா நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். குடித்து குடித்து குடியால் அழியும் அந்த ஊரில் தேர்தலில் ஜெயிப்பவரே பார் சொந்தக்காரராக இருக்க முடியும். அதைச்சுற்றி நடக்கும் அரசியலில் நாயகனும் நண்பர்களும் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள், அதிலிருந்து நாயகன் எப்ப்டி வெளிவருகிறான் என்பதே கதை. தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒதேலா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நானியும், கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடித்துள்ளனர். இதற்கு முன் நேனு லோக்கல் என்கிற படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தற்போது…
Read More