தொடர் தோல்வியை சந்திந்த டிசி காமிக்ஸ் The Flash படத்திலாவது தங்களது வெற்றியை பதிவு செய்யுமா!

தொடர் தோல்வியை சந்திந்த டிசி காமிக்ஸ் The Flash படத்திலாவது தங்களது வெற்றியை பதிவு செய்யுமா!

The Flash திரை விமர்சனம் டிசி Dc காமிக்ஸ்ல் ப்ளாஷ் சூப்பர் ஹீரோவை தனி ஹீரோவாக வைத்து வந்திருக்கும் படம். மார்வல் போல அல்லாமல் டிசி காமிக்ஸ் ஹிட் கொடுப்பதில் தத்தளித்து வருகிறது. Justice League படத்திற்கு பிறகு மொத்த சூப்பர் ஹீரோ உலகத்தையும் மாற்றியமைப்பதால அவர்கள் அறிவித்ததற்கு பிறகு, நிறைய குழப்பங்கள், பழைய சூப்பர் ஹீரோக்களுடன் டிசியில், வந்திருக்கும் கடைசி படம். அதுவும் மல்டிவெர்ஸ்சில் ஹீரோ பயணிப்பதால், பல பழைய சூப்பர் ஹீரோக்களின் கேமியோ எல்லாம் சேர்ந்து, இந்தப்படத்திற்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு வேறு. முதலில் இப்படத்தின் கதையை பார்த்து விடலாம். பேரி ஆலன், தனது சூப்பர் பவர்களைப் பயன்படுத்திக் காலத்தின் பின்னால் சென்று சில நிகழ்வுகளை ஒழுங்கப்படுத்தினால் இறந்து போன தன் அம்மாவை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் தனது குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஏற்படும் பேரி ஆலனின் கவனக்குறைவால், எதிர்காலம் மாற்றியமைக்கப்பட்டு, கடந்த காலத்திலேயே மாட்டிக் கொள்கிறான். அந்த கடந்த…
Read More
டக்கர் படம் சித்தார்த்தின் திருப்பு முனை படமாக இருக்குமா?

டக்கர் படம் சித்தார்த்தின் திருப்பு முனை படமாக இருக்குமா?

டக்கர் திரை விமர்சனம் இயக்குனர் - கார்த்திக் ஜி. க்ரிஷ் நடிகர்க்ள் -சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக் இசை - நிவாஸ் பிரசன்னா தயாரிப்பு - சுதன் சுந்தரம் ரொமான்ஸ் காமெடியில் இளைஞர்களுக்கான படமாக எடுக்க நினைத்த படம். இந்த கால இளைஞர்களை போல சம்பாதித்து பணக்காரன் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வருகிறான் ஒருவன் . பல்வேறு இடங்களில் வேலை செய்கிறான். ஆனால் சுயமரியாதை மற்றும் தன்மானத்தோடு வேலை செய்ய வேண்டும் என நினைப்பதால் எங்குமே நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பின் ஒரு வழியாக கேப் டிரைவராகிறான். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பணம் தான் காரணம் என நினைப்பவர் லக்கி (கதாநாயகி) . ஒரு கட்டத்தில் சந்திக்கும் சித்தார்த், திவ்யான்ஷாவின் வாழ்க்கை பணம், பதவி உள்ளிட்டவைகளால் ஏற்படும் பிரச்சனைகளை தாண்டி எப்படி சிறப்பாக இருக்கிறது என்பதே கதை மொத்த படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் சித்தார்த் பணம்…
Read More
விமானம் படம் உயரப் பறந்ததா! இல்லை தரை இறங்கியதா!

விமானம் படம் உயரப் பறந்ததா! இல்லை தரை இறங்கியதா!

விமானம் திரை விமர்சனம் இயக்குனர் - சிவ பிரசாத் யனலா நடிகர்கள் - சமுத்திரக்கனி , மாஸ்டர் துருவன் இசை - சரண் அர்ஜுன் தயாரிப்பு - கிரண் கொர்ராபட்டி கிரியேடிவ் ஒர்க்ஸ் & ஜீ ஸ்டுடியோஸ் மகனின் ஆசையை நிறைவேற்ற போராடும் அப்பாவின் கதை. ஒரு கால் ஊனமுற்ற அப்பாவான வீரய்யா தன் மகனை தனி ஆளாக வளர்க்கிறார், வீரய்யாவுக்கு தன மகன் ராஜூவை நன்றாக படிக்கவைத்து பெரிய ஆளாக ஆக்கவேண்டும் என்பதற்க்காக கஷ்டப்பட்டு ராஜூவை வளர்க்கிறார், ராஜுவுக்கு விமானத்தின் மீது ஒரு பிரமிப்பான ஆசை இருக்கிறது.சிறுவயதிலிருந்தே விமானத்தில் சென்றாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ராஜு எப்போதும் விமானம் பற்றின நினைப்பிலே இருக்கிறான். ராஜூவை விமானத்தில் கூட்டிசெல்வதற்கு முயற்சிக்கும் அப்பா வீரய்யா அதற்கான பணத்தை திரட்டி மகன் ராஜூவை விமானத்தில் கூட்டி சென்றாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் கதை. முதல் பாதி தேவையற்ற காட்சிகள் இருந்தாலும்…
Read More
TRANSFORMERS:RISE OF THE BEASTS விமர்சனம் !!

TRANSFORMERS:RISE OF THE BEASTS விமர்சனம் !!

  ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடரின் 7 வது பாகம், இன்னும் எத்தனை பாகம் வருமென்று தெரியவில்லை பீஸ்ட் வார்ஸ் கதையால் ஈர்க்கப்பட்டு, ஹஸ்ப்ரோ’ஸ் பொம்மை வரிசைகளை அடிப்படையாகக் கொண்டு, புகழ்மிக்க ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர் உருவாக்கப்பட்டது. இதுவரை, இத்தொடரின் ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் ஐந்து படங்களை இயக்குநர் மைக்கேல் பே (Michael Bay) இயக்கியுள்ளார். 2018இல் வெளிவந்த ஆறாவது படமான ‘பம்பல் பீ (Bumblebee)’ படத்தை மைக்கேல் பே தயாரிக்க, அப்படத்தை ட்ராவிஸ் நைட் இயக்கினார். ‘ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ்’ எனும் இத்தொடரின் 7 ஆவது பாகம், பம்பல் பீ படத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் வந்துள்ளது. தொண்ணூறுகள் காலகட்டத்தில் நடக்கும் கதையாக இந்தப்படம் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்ஃபார்மர்களின் விலங்குகள் பிரிவான மேக்ஸிமல்ஸை இப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவை, ஆட்டோ-பாட்ஸ்களுடன் இணைந்து உலகத்திற்கான எதிரான போரில் பங்கேற்கின்றன. கதையின் களம், ப்ரூக்ளினில் 1994 ஆம் ஆண்டு நிகழ்வதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நோவா (ஆந்தோனி ராமோஸ்)…
Read More
போர் தொழில் – திரை விமர்சனம் !!

போர் தொழில் – திரை விமர்சனம் !!

போர் தொழில் இயக்கம் - விக்னேஷ் ராஜா நடிகர்கள் - சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல். இசை - ஜேக்ஸ் பிஜாய் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் திரில்லர் படம். ஹாலிவுட் கனகச்சிதமாக எடுக்கப்படும் இந்த ஜானர் தமிழுக்கு மட்டும் ஏனோ செட்டாவதில்லை. எப்போதாவது அரிதாக ஒரு நல்ல திரில்லர் படம் வரும். ராட்சசன் மாதிரி விதிவிலக்கான படமாக மிரட்டலாக வந்திருக்கிறது போர் தொழில். திடீரென திருச்சி அருகில் இளம்பெண்கள் கொடூரமாக ஒரே முறையில் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். அந்த கொலையை கண்டுபிடிக்க சரத்குமார் நியமிக்கப்படுகிறார். புதிதாக பணிக்கு சேரும் அசோக்செல்வனை டிரெய்ன் செய்ய சொல்லி அவருடன் அனுப்புகிறார்கள். இருவரும் அந்த குற்றவாளியை கண்டுபிடித்தார்களா என்பதே படம். இந்த மாதிரி சைக்கோ கொலை படங்களுக்கு திரைக்கதை ரொம்ப முக்கியம். கொலை விசாரணையை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி ரசிகனை கூட இழுத்து சென்று, இறுதியில் நாம் எதிர்பாராத திருப்பத்தை தர வேண்டும். அதை அட்டகாசமாக…
Read More
காமிக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ஸ்பைடர்மேன் ?!

காமிக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ஸ்பைடர்மேன் ?!

SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE திரை விமர்சனம் !! இயக்கம் - Joaquim Dos Santos, Kemp Powers and Justin K. Thompson திரைக்கதை - Phil Lord & Christopher Miller & David Callaham, based on Marvel Comics. பின்னணிக் குரல்- Shameik Moore (voice of Spider-Man), Hailee Steinfeld (Gwen Stacey), Brian Tyree Henry, Luna Lauren Velez, Jake Johnson, Jason Schwartzman, Issa Rae, Karan Soni, with Daniel Kaluuya and Oscar Isaac. முதல் பாகத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பிறகு பல ஆச்சர்யங்களுடன் வந்திருக்கிறது SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE கார்டூன் படம். 3டி க்ளாஸ் வரை படம் காட்டும் நவீன உலகில் கார்டூன் படத்திற்கு என்ன வரவேற்பு இருந்துவிடப் போகிறது என்று நினைத்தால் அது படு முட்டாள்த்தனம். ஸ்பைடர் மேன் பிரபஞ்சத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கும்…
Read More
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் சொல்ல வந்தது என்ன!!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் சொல்ல வந்தது என்ன!!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் இயக்கம் - முத்தையா நடிகர்கள்ஆர்யா, சித்தி இத்னானி இசை - ஜி வி பிரகாஷ் குமார் இந்தப்படத்தின் கதையை எப்படி சொல்வது என்று யோசித்தாலே தலை சுற்றுகிறது. முத்தையாவுக்கு என்று ஒரு ஆடியன்ஸ் இருக்கிறார்கள் அந்த ரசிகர்களுக்கென வழக்கமான ஆக்சன் மாசாலாவை அரைத்து, ஜாதிமதம் சேர்த்து, நாயக பிம்பத்துடன் இப்போதும் பந்தி பரிமாறியிருக்கிறார். நாயகியின் சொத்துக்காக நாயகியை அடைய நினைக்கும் அவளின் அண்ணண் மனைவி குடும்பம் அவர்களிடமிருந்து காப்பாற்ற வருகிறார் நாயகன். நாயகன் உண்மையில் அவரின் மாமன் மகன் அது எப்படி? நாயகியை காப்பாற்ற நினைக்கும் நேரத்தில் அவரை கொல்ல நினைக்கும் அடுத்த வில்லன் அவன் கதை என்ன ? படம் முழுக்க 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பெரிய ஃபைட் நடக்கிறது ஃபைட் முடிந்ததும் யாராவது ஃப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அது முடிந்தவுடன் அடுத்த ஃபைட். ஒரு வழியாக நம்மை அடித்து…
Read More
*ஃபாஸ்ட் X* திரை விமர்சனம் ! 

*ஃபாஸ்ட் X* திரை விமர்சனம் ! 

  உலகம் முழுக்க பயங்கரமான ஃபேன் பாலோயிங் உள்ள தி ஃபாஸ்ட் & தி ஃப்யூரியஸ்’ படத்தொடரின் 10 வது பாகம்   மாரவல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு, இணையாக  உலகம் முழுக்க இருக்கும் டாப் ஹீரோக்களை இணைத்து ஒரு வெற்றிகரமான படத்தொடர். கார் சேஸாக ஆரம்பித்த முதல் பாகம் உலகை காக்கும் சூப்பர் ஹீரோக்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது     பிரபலமான ‘தி ஃபாஸ்ட் & தி ஃப்யூரியஸ்’, 2001 இல் தொடங்கி, இதுவரை 9 படங்கள் வெளியாகியுள்ளன.  தற்போது வெளியாகவுள்ள 10ஆவது படமான ஃபாஸ்ட் X, 2021 இல் வெளிவந்த F9 படத்தின் தொடர்ச்சியாக வெளியாகிறது. லண்டன், ரோம், டூரின், லிஸ்பன், லாஸ் ஏஞ்சல்ஸ் என உலகம் முழுக்க படமாக்க்கிருக்காங் 20 வருடங்கள் ஆகியும், இவ்வரிசை படங்களுக்கான  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்தபடியே தான் இருக்கிறது.   முதல்ல இந்த பாகத்தோட *கதைச்சுருக்கம்* பார்த்திடலாம்,…
Read More
குட் நைட் திரைவிமர்சனம்

குட் நைட் திரைவிமர்சனம்

  இயக்குநர் : விநாயக் சந்திரசேகர் நடிப்பு : மணிகண்டன், மேகா ரகுநாத், ரமேஷ் திலக் இசை : சான் ரோல்டன் தயாரிப்பாளர் : மகேஷ் ராஜ் பெசிலியன் எப்போதாவது பூக்கும் குறிஞ்சிப்பூக்களில் ஒன்றாக மலர்ந்திருக்கிறது குட்நைட். ஒரு சிறு குறட்டை எத்தனை பிரச்சனையாகும். அதுதான் படமே !! ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மோகன் (மணிகண்டன்) ஐடியில் வேலை செய்து வருகிறான் அவன் தூங்கும் போது, தான் விடும் குறட்டை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அந்தக் குறட்டையால் தன் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற பல இடங்களில் அவமானப்படும் அவனை ஒரு கட்டத்தில் அதனை காரணம் காட்டி காதலியும் கைவிட்டு சென்று விடுகிறாள்.இப்படி விரக்தியின் உச்சத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் மோகனின் வாழ்க்கையில் தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் அனு அறிமுகம் ஆகிறாள். அனுவிடம் கடைசி வரை தன்னுடைய குறட்டை பிரச்சினையை மறைத்து கல்யாணம் செய்து கொள்கிறான். இரவு வாழ்க்கையில் குறட்டை…
Read More
இராவண கோட்டம் திரை விமர்சனம்

இராவண கோட்டம் திரை விமர்சனம்

இயக்கம் - விக்ரம் சுகுமாரன் நடிப்பு - சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி இசை - ஜஸ்டின் பிரபாகரன்  படத்தொகுப்பு - லாரன்ஸ் கிஷோர் தயாரிப்பு - கண்ணன் ரவி மத யானைக்கூட்டம் எனும் க்ளாசிக்கல் படத்தை தந்த விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் ஷாந்தனு நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். இந்த கூட்டணி மண்சார்ந்த கதை எனும் போது இந்தப்படம் சாந்தனுவிற்கு வாழ்வு தரும், தமிழ் சினிமாவிற்கு நல்ல படைப்பாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறதா இராவண கோட்டம் ? ஒரு ஊரில் மேலத்தெரு, கீழத்தெரு ஆட்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். கிராமத்திற்கே அய்யாவாக இருந்து காப்பாற்றுகிறார் பிரபு. கீழத்தெரு சார்பில் இளவரசு இருக்கிறார். இரண்டு கூட்டத்திற்குமான இளைஞர்களில் சாந்தனுவும் ஒரு புதுமுகமும் நடித்திருக்கிறார்கள். இந்த கிராமத்தை பிரிக்க நினைக்கும், அரசியல்வாதிகள். இரு இளைஞர்களுக்கிடையே வரும் கயல் ஆனந்தியின் காதல். பிரிந்து ஜாதிச்சண்டை போடும் கிராமம்…
Read More