Sisu திரை விமர்சனம்

 

எழுத்து, இயக்கம் – Jalmari Helander
ஒளிப்பதிவு             – Kjell Lagerroos
இசை                        – Juri Seppä, Tuomas Wäinölä

ஃபின்லாந்தில் 1944 ல் ஜெர்மானிய ஹிட்லர் படைகள் பின்வாங்கும் காலகட்டத்தில் நடக்கும் கதை.
ஜான் விக் டைப் ஆக்சன் படம், ஒரு முன்னாள் ராணுவ வீரனிடம் சில்மிசம் பண்ணும் ஜெர்மானிய படையை அவர் எப்படி அழிக்கிறார் திகட்ட திகட்ட ஆக்சனில் சொல்லியிருகிறார்கள்.

அனுபவம் வாய்ந்த சிப்பாயான Aatomi Korpi (Jorma Tommila) என்பவரை மையப்படுத்தி தான் இந்தக் கதை சுழல்கிறது . இப்படம், முதன்முறையாக டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ‘மிட்நைட் மேட்னஸ் (Midnight Madness)’ எனும் பிரிவில் திரையிடப்பட்டது. பின், ஜனவரி 27, 2023 அன்று ஃபின்லாந்தில் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்ட இப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கதை – போரின்போது தனது குடும்பத்தையும் வீட்டையும் இழந்த Aatomi Korpi, லேப்லாந்தின் (Lapland) ஆளரவமற்ற பகுதியில் ஒரு தனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தங்கத்தைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே உள்ளார். அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீச, ஒரு பெரும் தங்கப் புதையல் அவருக்குக் கிடைக்கிறது. தங்கத்தைப் பாதுகாப்பாகச் சேமிக்க, 563 மைல் தொலைவிலுள்ள வங்கியை நோக்கிப் பயணிக்கிறார். வழியில்,

SS Obersturmführer Bruno Helldorf  (Aksel Hennie) என்பவரின் தலைமையில் இயங்கும் நாஜி வீரர்களால் பிடிக்கப்படுகிறார். அந்த நாஜி குழுவின் பணியே, எதிர்ப்படும் எவரையும் எதையும் கொன்று ஒழிப்பதே!  ஆனால், அந்த நாஜி குழுவிற்குத் தெரியாத ஒன்று, Aatomi Korpi பின்லாந்திலேயே ஒரு தேர்ந்த வீரர் என்பது!

அவரை சீண்ட ஆரம்பித்தவுடன் ஆரம்பிக்கும் ஆக்சன் காட்சிகள் படம் முழுதும் ரத்தம் தெறிக்க தெறிக்க தொடர்கிறது. லாஜிக் கேள்விகளையெல்லாம் கழட்டி வைத்துவிட்டு ஒரு அதிரி புதிரியான ஆக்சன் பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல விருந்து.

Sisu Trailer: An Ex-Soldier Has to Survive an Onslaught of Nazi Officers in  Lionsgate's Action Thriller (Watch Video) | 🎥 LatestLY

பின்லாந்தின் அழகிய இயற்கை காட்சிகளை அள்ளித்தந்து கேமரா விருந்து வைக்கிறது. இசை கனகச்சிதம் முதன் முதலில் ஹீரோ ஆக்சனுக்கு ஆரம்பாகும் போது வரும் பின்னணி இசை அசத்தல் ரகம். படத்தில் சிக்கலாம திரைக்கதை வசனம் எதுவுமில்லை. மண்டையில் கத்தியால் பிளப்பது, கன்னிவெடி வைத்து தெறிக்க விடுவது என திகட்ட திகட்ட ஆக்சன். ஆனாலும் க்ளைமாக்ஸ் ஆக்சனை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்

ஆனாலும் ஆக்சன் விரும்பிகள் தவறவிடக்கூடாத விருந்து Sisu